சென்னை: இந்தியாவில் டிஜிட்டல் பேமெண்ட் பரிவர்த்தனைகளின் மூலம் மோசடிகள் அதிகரித்து வருகின்றன. மோசடி செய்பவர்கள் தனி நபர்களை ஏமாற்றி அவர்கள் உழைத்து சம்பாதித்த பணத்தை திருடுவதற்கு தொடர்ந்து புதுமையான முறைகளைப் பயன்படுத்துகின்றனர். 2023-24 நிதியாண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் ஆண்டறிக்கையின்படி 2022-23ஆம் ஆண்டில் 9046 மோசடிகள் நடந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் டிஜிட்டல் பேமெண்ட் மோசடிகளின் எண்ணிக்கை 36075 ஆக அதிகரித்துள்ளது.
யுபிஐ (UPI ) ஓவர் பேமெண்ட் ஸ்கேம்: யுபிஐ ஓவர் பேமென்ட் ஸ்கேம் என்பது ஒரு பரவலான மோசடி முறை. தற்போது நான் சொல்வதை கற்பனை செய்து கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாத எண்ணிலிருந்து ஒரு அழைப்பைப் பெறுகிறீர்கள், அழைப்பாளர் தற்செயலாக உங்களுக்கு ரூ. 20,000 அனுப்பியதாகவும், மருத்துவ செலவு காரணமாக அதை திரும்ப அனுப்பச் சொல்லி கூறுகிறார். அப்போது அழைப்பாளர் உங்களிடம் உடனடியாக தான் தெரியாமல் அனுப்பிய கட்டணத்தை திரும்ப செலுத்தும்படி வலியுறுத்துக்கிறார். நீங்கள் என்ன செய்வீர்கள்? அனுதாப உணர்வினால் விவரங்களைச் சரிபார்க்காமல் பணத்தை அனுப்பி விடுவீர்கள். இதுவும் ஒரு மோசடி முறையே.

பணம் அனுப்பிய மெசேஜைப் பெற்றதும், உண்மையாக உங்களுடைய அக்கவுண்ட்டை நீங்கள் சரிபார்த்தால் அவர்கள் உங்களுக்கு பணம் அனுப்பாததை நீங்கள் கண்டுபிடிக்கலாம். எனவே, உங்களுக்கு யாரேனும் தவறாக பணம் அனுப்பிவிட்டதாகக் கூறினால், அவற்றை சரி பார்த்து பின்னரே நீங்கள் தொகையை செலுத்த வேண்டும்.
யுபிஐ (UPI) ஓவர் பேமெண்ட் மோசடிகளில் இருந்து எப்படி பாதுகாத்துக் கொள்வது:
1. ஆள் பேர் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் அழைப்பு: தெரியாத எண்ணிலிருந்து வரும் தொலைபேசி அழைப்புகளின் அடிப்படையில் பண பரிமாற்றங்களைச் செய்யாதீர்கள். மோசடி செய்பவர்கள் அவசர உணர்வைப் பயன்படுத்தி ஏமாற்ற முயற்சிக்கின்றனர். எப்போதும் எச்சரிக்கையாக இருந்து உங்கள் பணத்தை பாதுகாத்துக் கொள்ளவும்.
2. அனுப்புநரின் விவரங்களைச் சரிபார்க்கவும்: தெரியாத தொலைப்பேசி எண்ணில் இருந்து எதிர்பாராத தொகை அனுப்பியதாக கோரிக்கை வந்தால், அனுப்புநரின் விவரங்களை உறுதிப்படுத்தவும். உடனே உங்கள் வங்கி அறிக்கை பார்த்து உண்மையாகவே தொகை உங்கள் அக்கவுண்டுக்கு வந்துள்ளதா என்பதை பாருங்கள்.
3. பிஷிங் லிங்குகள்: சில லிங்குகளை உங்களுக்கு அனுப்பி அவற்றை பயன்படுத்தி லாகின் செய்தால், கேஷ்பேக் மற்றும் பிற சலுகைகள் தருவதாகக் கூறியும் ஏமாற்றலாம் இது போன்ற மோசடிகளிலும் எச்சரிக்கையாக இருக்க வேண்டியது அவசியம். நீங்கள் வாங்கும் பொருட்களுக்கு பின்னால் இருக்கும் QR கோடுகளை ஸ்கேன் செய்தால் ஒரு குறிப்பிட்ட தொகை தருவதாகக் கூறியும் தற்போது மோசடி செய்கின்றனர். இதன் மூலம் உங்கள் விவரங்களை நீங்களே விற்கிறீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.
More From GoodReturns

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?



Click it and Unblock the Notifications