கர்நாடகாவில் சட்டமன்றத் தேர்தலுக்குப் பின்பும், தமிழ்நாட்டில் அமைச்சர்கள் குழு மாற்றத்திற்கு பின்பும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சிலில் மூன்று அமைச்சர்கள் குழுவை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது.
இந்தியாவில் ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அரசுக்கு பெரும் வருவாயை ஈட்டி தரும் வேளையில் அனைத்து தரப்பு மக்களுக்கும், அனைத்து பொருட்களும் சரியான வரி விதிக்கப்படுகிறதா என்பதை உறுதி செய்வதோடு, அரசின் வருவாயை அதிகரிக்கும் முயற்சியில் மக்களுக்கு கூடுதல் வரி சுமையை கொடுக்க கூடாது என்பதையும் உறுதி செய்ய ஜிஎஸ்டி கவுன்சில் பல்வேறு அமைச்சர்கள் குழுவை அமைத்துள்ளது.

இந்த குழு உறுப்பினர்கள் தான் ஜிஎஸ்டி எனப்படும் மறைமுக வரி விதிப்பு முறையின் முக்கியமான சீர்திருத்தங்களை பரிந்துரைக்கும் பணிகளை செய்ய உள்ளனர். அமைச்சர்கள் பரிந்துரை, ஆய்வு முடிவுகள் அடிப்படையில் தான் ஒவ்வொரு ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திலும் வரி விதிப்பு குறித்து முடிவு எடுக்கப்படுகிறது. நியமிக்கப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி கவுன்சிலில் மொத்தம் 33 பேர், இதில் தலைவராக மத்திய நிதியமைச்சரும், உறுப்பினராக மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் பிரிவின் மாநில அரசின் உறுப்பினர் என இருவர் மத்திய அரசு சார்பிலும் மீதமுள்ள 31 பேரில் 28 மாநிலம் மற்றும் 3 யூனியன் பிரதேசத்தின் உறுப்பினர்கள் இடம்பெறுவார்கள்.
மாநில அரசால் பரிந்துரைக்கப்படும் 31 உறுப்பினர்களில் பெரும்பாலும் அம்மாநிலத்தின் நிதியமைச்சர்கள் இடம்பெறுவார்கள். ஆனால் மாநில அரசு நிதித்துறை, வரி துறை அல்லது பிற துறை அமைச்சர்களை கூட பரிந்துரை செய்யலாம்.
சனிக்கிழமையன்று கர்நாடக மாநில தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் அம்மாநில முதல்வர் பசவராஜ் எஸ்.பொம்மை பதவியை ராஜினாமா செய்தார். ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழுவின் (GOM) தலைவராக இருந்தார் பசவராஜ் பொம்மை, ஜிஎஸ்டி-யின் சிக்கலான வரி விகிதங்கள் அமைப்பை சீர்திருத்தம் செய்யும் பணிகளை மேற்கொண்டு வந்தார்.
பசவராஜ் பொம்மை அவர்கள் பதவி விலகிய நிலையில் புதிய ஜிஎஸ்டி கவுன்சிலின் அமைச்சர்கள் குழுவின் தலைவரை தேர்வு செய்ய வேண்டிய நிலை உருவாகியுள்ளது.
தமிழ்நாட்டின் முன்னாள் நிதியமைச்சரும், தற்போதைய தகவல் தொழில்நுட்ப அமைச்சருமான PTR பழனிவேல் தியாகராஜன், ஜிஎஸ்டி கவுன்சிலின் இரண்டு முக்கிய அமைச்சரவை குழுவில் உறுப்பினராக உள்ளார்.

இதில் ஒன்று, வரி ஏய்ப்பைச் சமாளிக்கும் ஜிஎஸ்டி-யின் IT அமைப்பு சீர்திருத்தங்கள் குழு, மற்றொன்று கசினோ, ஆன்லைன் கேமிங் மற்றும் குதிரை பந்தயத்திற்கான வரி விதிப்பு முறை குறித்த சீர்திருத்தங்கள் குழு.
இந்த நிலையில் PTR பழனிவேல் தியாகராஜன் உறுப்பினராக இருந்த 2 குழுக்களிலும் தற்போது தமிழ்நாட்டின் நிதியமைச்சராக பொறுப்பேற்றுள்ள தங்கம் தென்னரசு நியமிக்கப்படுவார். இந்த மாற்றங்கள் ஜிஎஸ்டி கவுன்சிலின் புதிய வேகத்தையும், புதிய யோசனைகளையும் முன்வைக்கும் என எதிர் பார்க்கப்படுகிறது.
More From GoodReturns

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

பதவி நீக்கம் செய்யப்படுகிறாரா டிரம்ப்? ஈரான் போரால் டிரம்புக்கு ஏற்பட்டுள்ள புது பிரச்சினை!!

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

GPay யூஸ் பண்றீங்களா? PocketMoney ஐகான் கிளிக் பண்ணா மொத்த பணமும் போய்டுமா?வைரலாகும் வாட்ஸ்அப் ஆடியோ



Click it and Unblock the Notifications