ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக e-KYC முடிக்க உத்தரவு; தவறவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது!!

இந்தியாவை சேர்ந்த கோடிக்கணக்கான மக்களுக்கு இலவசமாகவும் மானிய விலையிலும் உணவுப் பொருட்கள் ரேஷன் கடைகள் வாயிலாக தான் விநியோகம் செய்யப்படுகின்றன. குடும்பத்தின் வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு அரிசி பருப்பு, கோதுமை, சமையல் எண்ணெய் , சர்க்கரை உள்ளிட்டவை ரேஷன் கடைகள் வாயிலாக பொதுமக்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன.

பல்வேறு குடும்பங்களுக்கு மூன்று வேலை சாப்பாடு ரேஷன் கடையில் வழங்கக்கூடிய பொருட்களாக தான் இருக்கின்றன. ரேஷன் அட்டைகளை பொருத்தவரை அரசு மத்திய மாநில அரசுகள் வழங்கக்கூடிய சலுகைகள் உரிய பயனாளிகளிடம் சென்று சேர வேண்டும் என்பதற்காக அவ்வப்போது ரேஷன் அட்டைதாரர்கள் கேஒய்சி அப்டேட் செய்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அந்த வகையில் புதுச்சேரி மாநிலத்தின் பொது விநியோகம் மற்றும் நுகர்வோர் விவகாரங்கள் துறை புதுச்சேரி மாநில அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது.

ரேஷன் அட்டைதாரர்கள் உடனடியாக e-KYC முடிக்க உத்தரவு; தவறவிட்டால் ரேஷன் பொருட்கள் கிடைக்காது!!

தங்களுடைய ரேஷன் அட்டைகளில் இ- கேஒய்சி பதிவு முடிக்கப்பட்டு இருக்கிறதா என்பதை மக்கள் முதலில் சரி பார்க்க வேண்டும் அவ்வாறு இல்லை என்றால் உடனடியாக இ கேஒய்சி முடிக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது. புதுச்சேரி மாநிலத்திற்கான சிவில் சப்ளை பிரிவு இயக்குனர் முத்து மீனா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் உச்ச நீதிமன்றம் மற்றும் மத்திய நுகர்வோர் விவகாரங்கள் துறை, உணவு மற்றும் பொது விநியோகத் துறை வெளியிட்டுள்ள வழிகாட்டுதல்களின் படி நாட்டில் உள்ள அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் இ கேஒய்சி பதிவினை செய்வது கட்டாயம் என கூறியுள்ளது.

Also Read

அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் சரியான மக்களுக்கு தான் கொண்டு சேர்க்கப்படுகிறது தகுதியான பயனாளிகளுக்கு தான் செல்கிறது என்பதை உறுதி செய்வதற்காக கேஒய்சி அப்டேட் கட்டாயம் என அதில் அவர் கூறி இருக்கிறார். மத்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல்களுக்கு இணங்கி மாநிலம் முழுவதும் ரேஷன் அட்டைதாரர்கள் இ கேஒய்சி முடிப்பதற்கான வசதிகள் ஏற்படுத்தி தரப்பட்டிருக்கிறதாக கூறி இருக்கிறார்.

பொது சேவை மையங்களில் இ கேஒய்சி பதிவு செய்ய முடியும் என கூறியுள்ள அவர், அனைத்து ரேஷன் அட்டைதாரர்களும் அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களும் இதுவரை கேஒய்சி பதிவு செய்யவில்லை என்றால் உங்களுக்கு அருகில் இருக்கக்கூடிய பொது சேவை மையத்திற்கு ரேஷன் அட்டை மற்றும் ஆதார அட்டையோடு சென்று இலவசமாக முடித்துக் கொள்ளலாம் என அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

Recommended For You

கேஒய்சி அப்டேட் செய்யப்படவில்லை என்றால் ரேஷன் கடையில் தற்போது கிடைக்கக்கூடிய இலவச மற்றும் மானிய விலையிலான அரிசி ,கோதுமை , எண்ணெய், பருப்பு உள்ளிட்டவை கிடைக்காமல் போகும். சில சமயம் ரேஷன் கார்டை கூட ரத்து செய்ய நேரிடலாம் எனவே புதுச்சேரி மக்கள் உடனடியாக ரேஷன் கேஒய்சியை முடிப்பது நல்லது. முதலில் உங்கள் ரேஷன் கடைக்கு சென்று கேஒய்சி அப்டேட்டாக உள்ளதா இல்லையா என்பதை உறுதிப்படுத்துங்கள். இல்லை எனும் பட்சத்தில் பொது சேவை மையங்களில் இலவசமாகவே சேவையை பெறலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+