புனே: வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் வசதிகள் போன்றவற்றை கருத்தில் கொண்டு மக்கள் பெரிய நகரங்களுக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர். மேலும், ஒவ்வொரு ஆண்டுக்கும் நகரங்களுக்கு வரும் மக்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
இதனால் பெரிய நகரங்களில் ரியல் எஸ்டேட் தேவை இருந்து கொண்டே இருக்கிறது. சிட்டியில் சொந்தமாக ஒரு வீடு வாங்கி வாழ வேண்டும் என்ற கனவு லட்சக்கணக்கான குடும்பங்களிடம் காணப்படுகிறது. தனி வீடு என்றில்லை அடுக்குமாடி குயிருப்பிலாவது ஒரு ப்ளாட் வாங்கி விட வேண்டும் என்ற கனவில் பல இளைஞர்கள் அயராது உழைத்து வருகின்றனர்.

இந்தியாவின் முன்னணி நகரங்களில் குயிருப்புகளுக்கான தேவை இருந்து கொண்டே இருப்பதால் ரியல் எஸ்டேட் விலைகள் ஒவ்வொரு ஆண்டும் உயர்ந்து கொண்டே செல்கின்றன. அதேசமயம் விலை எல்லாம் ஒரு பிரச்சினையில்லை, வீடு இருக்கா சொல்லுங்க நாங்க வாங்க ரெடி என்று ஒரு தரப்பு மக்கள் கையில் பணத்தை வைத்துக் கொண்டு காத்திருக்கின்றனர். சில சந்தர்ப்பங்களில் ஒரு இடத்தை வாங்க பலரும் போட்டி போட்டு அதிக விலை கொடுத்தும் வாங்குகின்றனர். உயர்தர வாழ்க்கை வாழ அடுக்குமாடி குடியிருப்புகளில் வசிப்பது குறித்து மக்கள் தொடர்ந்து ஆசையுடன் இருக்கிறார்கள்.
அண்மையில் மகாராஷ்டிரா மாநிலம் புனேவில் அடுக்குமாடி குடியிருப்பை வாங்க பலரும் எட்டு மணி நேரம் வரிசையில் நின்ற சம்பவம் மிகவும் வைரலானது. புனேவில் இருந்து 15 கி.மீட்டர் தொலைவில் உள்ளது வகாட் என்ற பகுதி. இந்த பகுதியில் ரூ.1.5 முதல் 2 கோடி வரை மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகள் விற்பனைக்கு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனையடுத்து, ரூ.2 கோடி வரை மதிப்பிலான அந்த அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்க மக்கள் குவிந்தனர். அந்த குடியிருப்பை வாங்குவதற்காக எட்டு மணி நேரம் வரிசையில் நின்றனர். ரூ.2 கோடி மதிப்பிலான அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்குவதற்காக மக்கள் நீண்ட வரிசையில் நின்ற வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலானது.
வைரலாகி வரும் இந்த வீடியோ குறித்து பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர். அதில் ஒருவர், வரிசையில் நிற்பவர்கள் யாரும் வங்கி கணக்கில் ரூ.1.5-2 கோடி வைத்திருப்பார்கள் என்று நான் நினைக்கவில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வங்கி வணிகம் (கடன் வாங்க) நன்றாக நடப்பதற்காக நிற்கிறார்கள் என்று கிண்டலாக தெரிவித்தார். மற்றொருவர், இதனை நம்புவது கடினம் என்கிறார். பில்டரின் சந்தைப்படுத்துதல் உத்தியாக இது இருக்கலாம் என்று அவர் சந்தேகம் தெரிவித்தார்.
இருப்பினும் கொரோனா பெருந்தொற்று காலத்திற்கு பிறகு மக்களிடையே பெரிய குடியிருப்புகளை வாங்கும் ஆர்வம் அதிகரித்துள்ளது என்பது பல புள்ளி விவரங்களில் உறுதியான தகவல் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!



Click it and Unblock the Notifications