தகவல் தொழில்நுட்பத்தின் புரட்சியின் விளைவால் ஆன்லைன் விளையாட்டுகள் உருவாகி ஈசல் போல் பரவி விட்டது. இந்த விளையாட்டுகளில் பணமும் சம்பாதிக்கலாம் என்பதால் இவை இளைஞர்களை எளிதாக ஈர்க்கிறது. இன்று பெரும்பாலான இளைஞர்கள் ஆன்லைன் விளையாட்டுகளில் மூழ்கி கிடக்கின்றனர்.
ஆன்லைன் ஃபேன்டஸி விளையாட்டு தளங்களில் பிரபலமானது ட்ரீம் 11. இது ஃபேன்டஸி கிரிக்கெட், ஹாக்கி,கால்பந்து, கபடி, கைப்பந்து, கூடைப்பந்து, ரக்பி மற்றும் பேஸ்பால் உள்ளிட்ட பல விளையாட்டுகளை விளையாட பயனர்களை அனுமதிக்கிறது.

ட்ரீம் 11, பயனர்களை நிஜ விளையாட்டு வீரர்களின் விர்ச்சுவல் அணியை உருவாக்கவும், உண்மையான போட்டியில் இந்த வீரர்களின் செயல்திறன் அடிப்படையில் புள்ளிகளை பெறவும் அனுமதிக்கிறது.
மகாராஷ்டிராவை சேர்ந்த காவல்துறை அதிகாரி ஒருவர் ஆன்லைன் விளையாட்டில் ரூ.1.5 கோடி சம்பாதித்துள்ளார். ஆனால் அதுவே அவரது வேலைக்கும் ஆபத்தாக அமைந்து விட்டது. புனே நகரத்தில் காவல் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் சோம்நாத் ஜெண்டே.
கடந்த பல மாதங்களாக ட்ரீம் 11 கிரிக்கெட் போட்டிகளில் தீவிரமாக பங்கேற்றதோடு, ரூ.1.5 கோடியும் சம்பாதித்துள்ளார். இதனையடுத்து ஆன்லைன் விளையாட்டில் சோம்நாத் ஜெண்டே அதிக தொகையை வென்றார் என்ற செய்தி பரவியது.
இந்த செய்தி புனே காவல்துறை காதுக்கும் எட்டியது. உடனே புனே காவல்துறை, காவல்துறை துணை ஆணையர் ஸ்வப்னா கோர் தலைமையிலான குழு அமைத்து இது குறித்து விசாரணை நடத்த உத்தரவிட்டது.
விசாரணையில், சோம்நாத் ஜெண்டே அனுமதியின்றி ஆன்லைன் விளையாடியது மற்றும் பணம் சம்பாதித்தது குறித்து சீருடையில் அவர் ஊடகங்களுக்கு பேட்டி அளித்ததும் தெரியவந்தது. இதனையடுத்து சோம்நாத் ஜெண்டே அவரது பணியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார்.
காவல்துறை துணை ஆணையர் ஸ்வப்னா கோர் கூறுகையில், விசாரணைக்கு பிறகு, சோம்நாத் அனுமதியின்றி ட்ரீம் 11 விளையாட்டை விளையாடியது கண்டுப்பிடிக்கப்பட்டது. இதனால் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இது மற்ற காவல்துறை அதிகாரிகளுக்கும் ஒரு நினைவூட்டலாக இருக்கும். ஆன்லைன் விளையாட்டை விளையாடினால் அவர்களும் ஒழுங்கு நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்பதால், ஆன்லைன் விளையாட்டுகளை விளையாடுவதை தவிர்கக வேண்டும் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications