தமிழ்நாட்டு மக்களையும் சினிமா-வையும் என்றும் பிரிக்க முடியாது, ஒரு நாளுக்கு 500 ரூபாய் சம்பாதிப்பவரும் புதுபடத்திற்கு 200 ரூபாய் செலவு செய்து பார்க்கும் வழக்கத்தைக் கொண்டு உள்ளனர். இதேபோல் ஒரு படத்தை 4-5 முறை பார்க்கும் மக்களும் உள்ளனர்.
இதனாலேயே இந்தியாவில் சினிமா மிகப்பெரிய பிஸ்னஸ் ஆக மாறியுள்ளது. மறுமுனையில் சினிமாவையும், சினிமா ரசிகர்களையும் வைத்து திரையரங்கங்கள் மிகப்பெரிய அளவில் கல்லா கட்டி வருகிறது.

திரைப்பட டிக்கெட்டுகளை விட திரையரங்குகளில் விற்பனை செய்யப்படும் ஸ்நாக்ஸ் விலை பல மடங்கு அதிகரித்து குடும்பங்களுக்கு, குறிப்பாக குழந்தைகளைப் பெற்றவர்களுக்கு பெரும் சுமையாக இருந்து வருகிறது. குழந்தைகள் படத்தை விட பாப்கார்ன், ஐஸ்கிரீம் போன்ற ஸ்நாக்ஸ் மீதே அதிக ஆர்வம் காட்டுவதால், பெற்றோர் அவற்றை வாங்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது.
இதோடு மட்டுமல்லாமல், தியேட்டர்களில் வெளி உணவு மற்றும் பானங்களைத் தடை செய்வதால், வேண்டா வெறுப்பாக அதிக விலையில் ஸ்நாக்ஸ் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகிறது. இது மக்களின் கோபத்தையும் வெறுப்பையும் அதிகரிக்கிறது.
இந்தியாவின் முன்னணி திரையரங்க நிறுவனமான PVR தனது வருடாந்திர நிதிநிலை அறிக்கையை வெளியிட்டு உள்ளது. PVR வெளியிட்டுள்ள புதிய அறிக்கையின்படி, 2023-2024 நிதியாண்டில் PVR ஐனாக்ஸ் திரையரங்கச் சங்கிலி நிறுவனம் உணவு மற்றும் குளிர்பான விற்பனை மூலம் மட்டுமே பெரும் லாபம் ஈட்டியுள்ளது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
திரையரங்க நிறுவனங்கள் பொதுவாக அதிகப்படியான லாபம் பார்ப்பது உணவு மற்றும் குளிர்பான என்பது எல்லோருக்கும் தெரியும், ஆனால் இந்த ஆண்டு டிக்கெட் விற்பனையில் கிடைத்த வருவாய் வளர்ச்சியை காட்டிலும் உணவு மற்றும் குளிர்பான விற்பனையில் அதிக வருவாய் வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
PVR திரையரங்குகள் 2023-2024 ஆம் ஆண்டிற்கான திரைப்பட டிக்கெட் விற்பனை 19% அதிகரித்துள்ள நிலையில், உணவு மற்றும் குளிர்பான விற்பனை 21% அதிகரித்துள்ளது.
கடந்த ஆண்டு PVR-ன் உணவு விற்பனை ரூ.1,618 கோடியிலிருந்து, இந்த ஆண்டு வருவாய் ரூ.1,958 கோடியாக உயர்ந்துள்ளது 21% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2022-2023 ஆம் ஆண்டில் திரைப்பட டிக்கெட் வருவாய் ரூ.2,751 கோடியாக இருந்த நிலையில், 2023-2024 ஆம் ஆண்டில் ரூ.3,279 கோடியாக அதிகரித்துள்ளது.
உணவு பிரிவில் வளர்ச்சி அளவில் ஏற்பட்டுள்ள மாற்றத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் PVR ஐனாக்ஸ் குழுவின் தலைமை நிதி அதிகாரி நிதின் சூத், இந்த ஆண்டு அதிகப்படியான சூப்பர் ஹிட் படங்கள் இல்லாததால் டிக்கெட் வருவாய் வளர்ச்சியை காட்டிலும், உணவு பொருட்கள் விற்பனையில் அதிகப்படியான வளர்ச்சியின் போக்கு காணப்பட்டது என்று தெரிவித்துள்ளார்.
இந்திய திரைப்பட ரசிகர்கள் நீண்ட காலமாகத் திரையரங்க உணவு மற்றும் குளிர்பான விலையைப் பற்றி புகார் கூறி வருகின்றனர். கடந்த ஆண்டு ஜூலை மாதம், ஒரு நபரின் "ஒரு மாத OTT சந்தா விட ஒரு பாப்கார்ன் அதிக விலை" என்ற ட்வீட் வைரலானது. இது திரையரங்க உணவு விலை எந்த அளவிற்கு மக்களை பாதிக்கிறது என்பதைக் காட்டுகிறது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

165 ஆண்டுகளில் இல்லாத தரமான சம்பவத்தை செய்த டிரம்ப்..!! வாயடைத்துப்போன எதிர்க்கட்சியினர்..!!



Click it and Unblock the Notifications