எந்தவித பின்புலமும் இல்லாமல் கடினமாக உழைத்து முன்னேறிய பல பணக்காரர்களின் வாழ்க்கை அனுபவத்தை படிக்கும் போது, நாமும் இது போன்று ஏதாவது செய்து முன்னேற வேண்டும் என்ற எண்ணம் நமக்குள் ஏற்படும். அது போன்ற உணர்வை உத்தரபிரதேசத்தை சேர்ந்த கணவனை இழந்த பெண் தொழில்முனைவோர் ரக்சனா மோகனின் கதையை நாம் படிக்கும் போது நிச்சயம் ஏற்படும் என்று உறுதியாக சொல்லலாம்.

உத்தரபிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரை சேர்ந்த பெண்மணி ரக்சனா மோகன். நடுத்தர குடும்பத்தை சேர்ந்த ரக்சனா மோகன் தனது கணவருடன் ஒரு எளிமையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தார். ரக்சனா மோகனின் கணவர் நீண்ட காலமாக நோயால் அவதிப்பட்டு வந்தார்.
கணவரின் சிகிச்சைக்காக கையில் இருந்த பணம் அனைத்தும் காலியானது.
இந்நிலையில் 2018ல் ரக்சனா மோகனின் கணவர் சிகிச்சை பலன் இன்றி மரணம் அடைந்தார். கணவர் இறந்தவுடன் ரக்சனா மோகன் கடுமையான நிதிநெருக்கடியை சந்தித்தார். இருப்பினும் அந்த நெருக்கடியில் இருந்து வெளிவர ஏதாவது செய்து சொந்த காலில் நிற்க வேண்டும் என்று வைராக்கியம் ரக்சனா மோகனின் மனதில் எழுந்தது.

வீட்டில் காகித பைகளை தயாரித்து விற்கலாம் என்ற யோசனை அவருக்கு ஏற்பட்டது. உடனே அதனை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை ரக்சனா மோகன் எடுத்தார். ரக்சனா மோகன் முதலில் வங்கியில் பிரதமர் சுயவேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சம் கடன் வாங்கினார்.
அதில் ரூ.14.5 லட்சம் முதலீட்டில் காகித பை தயாரிக்கும் இயந்திரத்தை வீட்டில் நிறுவினார். எஞ்சிய பணத்தில் காகித பை தயாரிப்பதற்கான மூலப்பொருட்களை வாங்கினார். தினமும் காகித பைகளை தயாரித்து, அவரே ஷாஜஹான்பூர் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் விற்பனை செய்தார்.
தற்போது அவரது காகித பை வர்த்தகம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது. காகித பை தொழில் தொடங்கிய ஒன்றரை ஆண்டுகளில் ரக்சனா மோகனின் வியாபாரம் சிறப்பான வளர்ச்சி கண்டுள்ளது.
தற்போது ரக்சனா மோகனின் காகித பை தயாரிக்கும் தொழிலில் சுமார் மூன்று டஜன் பணியாளர்கள் வேலை செய்கிறார்கள். அவரது மாதாந்திர வருமானம் ரூ.8 லட்சம் முதல் ரூ.10 லட்சமாக உள்ளது. சமீபத்தில் நடந்த உலக முதலீட்டாளர்கள் உச்ச மாநாட்டில் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்கீழ் ரூ.5 கோடி ரூபாய் முதலீடு ரக்சனா மோகன் ஒப்புக் கொண்டார்.
இது அவரது வளர்ச்சிக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டாகும். ரக்சனா மோகன் தனது வளர்ச்சி குறித்து பேசுகையில், இந்த சுயதொழில் முயற்சி எனது குடும்பத்தை நடத்த போதுமானது. கணவர் இறப்புக்கு பிறகு அதனால் ஏற்படும் நெருக்கடியான உணர்வை சந்தித்தேன் இருப்பினும் நான் தைரியத்தை இழக்கவில்லை. தனது தொழிலில் எனது மகன் புரு மோகனும் உதவியாக இருக்கிறார் என்று தெரிவித்தார்.
More From GoodReturns

வெள்ளியின் அடுத்த ஸ்டாப் ரூ.1.5 லட்சம் தான்! ரூ.5 லட்சம் கணிப்புகள் பொய்த்தது ஏன்? விளக்கம் இதோ!

எண்ணெய், எரிவாயு விட பெரிய பிரச்சினை இப்போது உருவாகி வருகிறது.. ஈரான் போரில் புது திருப்பம்..!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!



Click it and Unblock the Notifications