போட்டி நிறைந்த வர்த்தக உலகில் ஒருவர் வெற்றி பெறுவது என்பது சாதரண காரியம் அல்ல. அதுவும் ஒரு பெண் சுயமாக முன்னேறி தொழிலில் வெற்றி பெறுவது அசாரண செயலாகும். இருப்பினும் பல பெண்கள் பல்வேறு தடைகளை தாண்டி தொழில்முனைவோராக வெற்றி பெற்றுள்ளனர்.
அவர்களில் ஒருவர்தான் தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporation-ன் இணை நிறுவனர்களில் ஒருவரான ராதா வேம்பு. இந்திய பணக்காரர்கள் பட்டியலை பார்த்தாலே இவர் எந்த அளவுக்கு வளர்ந்துள்ளார் என்பதை நாம தெரிந்து கொள்ளலாம்.

360 ஒன் வெல்த் ஹூரன் இந்தியா பணக்காரர்கள் பட்டியல் 2023ன்படி, சுயமாக முன்னேறிய பணக்கார இந்திய பெண்மணிகள் பட்டியலில், ராதா வேம்பு ரூ.34,900 கோடி சொத்துக்களுடன் முதலிடத்தில் உள்ளார். மேலும் இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 40வது இடத்தில் உள்ளார்.
இதுதவிர இந்தியாவின் டாப் 5 சாப்ட்வெர் தொழில்முனைவோர் பட்டியலில் 3வது இடத்தை பிடித்துள்ளார். இவர் 1972ல் சென்னையில் பிறந்தவர். ராதா வேம்புவின் தந்தை சாம்பமூர்த்தி வேம்பு சென்னை உயர் நீதிமன்றத்தில் ஸ்டெனோகிராபராக இருந்தார்.
ராதா வேம்பு புகழ்பெற்ற மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் தொழில்துறை நிர்வாகத்தில் பட்டம் பெற்றவர். 1997ல் பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனமான Zoho Corporation நிறுவனத்தில் சேர்ந்தார். இந்த நிறுவனம், 1996ல் அவரது அண்ணன் ஸ்ரீதர் வேம்பால் தொடங்கப்பட்ட அட்வென்ட்நெட் என்ற நிறுவனம்தான்.
2009ல் Zoho Corporation என்று பெயர் மாற்றப்பட்டது. தொழில்நுட்பத்தின் மீதான அபரிமிதமான ஆர்வம், புதுமையான மனநிலை மற்றும் வெற்றிக்கான உந்துதல் ஆகியவற்றின் காரணமாக ராதா படிப்படியாக நிறுவனத்தின் உயர்ந்தார்.
அவரது வழிகாட்டுதலின்கீழ், Zoho நிறுவனம் தற்போது 180 நாடுகளில் பல்வேறு வணிக தேவைகளுக்கு சேவை செய்யும் கிளவுட் அடிப்படையிலான அப்ளிகேஷன்களின் முழுமையான தொகுப்பை வழங்குகிறது. கடந்த ஆண்டு இந்நிறுவனம் ரூ.2,700 கோடிக்கு மேல் லாபம் ஈட்டியுள்ளது.
ராதா வேம்பு பல்வேறு கல்வித் திட்டங்கள், உதவித்தொகைகள் மற்றும் இளைஞர்களை மேம்படுத்துவதற்கான கல்வி முயற்சிகளுக்கு ஆதரவளித்து வருகிறார். விவசாய தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜானகி ஹைடெக் அக்ரோ மற்றும் ரியல் எஸ்டேட் நிறுவனமான ஹைலேண்ட் வேலை என்ற நிறுவனத்தின் இயக்குனராகவும் உள்ளார்.
தற்போது ராதா வேம்பு சென்னையில் தனது கணவர் மற்றும் குழந்தையுடன் வசித்து வருகிறார். Zoho நிறுவனத்தில் இவருக்கு 47 சதவீத பங்குகள் உள்ளது. அதேசமயம் அவரது மூத்த சகோதரர் ஸ்ரீதர் வேம்பு வசம் 5 சதவீத பங்குகள் மட்டுமே உள்ளது. ஸ்ரீதர் வேம்பு 1989ல் மெட்ராஸ் ஐ.ஐ.டி.யில் படித்தவர். பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் குவால்காமில் பணியாற்றினார். இவர் பத்மஸ்ரீ விருது பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications