அம்பானி வீட்டின் திருமண முன்வைபோக நிகழ்ச்சியின் ஆர்பாட்டங்களும், அதிரடிகளும் இன்னும் முடிந்த பாடில்லை, தினமும் ஏதாவது ஒரு புகைப்படம் மற்றும் தகவலகள் வெளியாகி வருகிறது.
அந்த வகையில் தங்கத்தில் செதுக்கிய சிலைபோன்று விருந்தினர்கள் அனைவரையும் தனது தங்க நிற ஆடையின் மூலம் ராதிகா மெர்ச்சன்ட் கவர்ந்தார். அவரது இந்தப் பொன்னிற ஆடை அழகுக்கு அழகு சேர்த்தது. ஏரோஸ்பேஸ் அலுமினியம் டெக்னாலஜியில் தயாரிக்கப்பட்ட இந்த தங்க ஆடை உடலில் தகதகவென மின்னியது.

திருமண முன்வைபோகத்தை முன்னிட்டு ஒரு சொகுசு கப்பலில் 800க்கும் மேற்பட்ட விருந்தினர்களுடன் ஆனந்த் அம்பானியும் ராதிகா மெர்ச்சன்டும் உல்லாச சவாரி சென்றனர். அப்போது ஒரு நிகழ்ச்சியில் பிரபல பேஷன் டிசைனர் கிரேஸ் லிங் கௌசர் வடிவமைத்த தங்க நிற ஆடை பார்ப்பவர்களின் உள்ளத்தை கவர்ந்தது.
இணையத்தில் இப்போது ராதிகா மெர்ச்சன்டின் இந்த ஆடைதான் வைரல் ஆகியுள்ளது. ஆடைக்கு மேட்ச்சாக டிசைனர் தோடுகளை அணிந்திருந்தார். தோற்றத்துக்கு எழில் சேர்க்கும் நேர்த்தியான ஹேர்ஸ்டைலும் செய்திருந்தார்.
இந்த ஆடையை 30 கலைஞர்கள் சேர்ந்து தயாரித்துள்ளனர். ராதிகாவின் இந்த ஆடை கொண்ட புகைப்படம் இன்ஸ்டாகிராமில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது. பாலிவுட் ஸ்டைலிஸ்ஸாடன ரியா கபூர் இந்தப் படத்தை ரீபோஸ்ட் செய்துள்ளார்.
அத்துடன் ராதிகாவின் சில பிரத்யேக போஸ்களையும் ரியா பகிர்ந்துள்ளார்.
தங்கத்தில் செதுக்கப்பட்ட சிலையாக ராதிகா மெர்ச்சன்ட் இந்த டிரஸ்ஸில் காட்சியளித்தார். இதுபோன்ற நபர்களுக்கு பணியாற்றுவதில் மிகுந்த திருப்தி இருக்கிறது என்று ரியா குறிப்பிட்டுள்ளார்.
ஆனந்த் அம்பானி, ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் திருமண முன்வைபோக நிகழ்ச்சிகள் இந்த ஆண்டு மார்ச் 1 ஆம் தேதி முதல் 3 ஆம் தேதி வரை குஜராத் மாநிலம் ஜாம்நகரில் வெகு விமரிசையாக நடைபெற்றது. ஜாம்நகர் அம்பானியின் பூர்வீக ஊராகும்.
இந்த நிகழ்ச்சிகளில், பில்கேட்ஸ், மார்க் ஜுக்கம்பெர்க் உள்பட உலகின் பிரபலங்கள் பலர் வந்து கலந்து கொண்டு சிறப்பித்தனர். இத்துடன் பாலிவுட் பிரபலங்களான ஷாரூக் கான் உள்பட பலரும் வந்திருந்தனர்.
ஷாரூக் கானுக்காக 10 கோடி ரூபாய் மதிப்புள்ள மெர்சிடஸ் பென்ஸ் காரை டாக்ஸியாக முகேஷ் அம்பானி பயன்படுத்தினார். மூன்று நாள் நிகழ்ச்சிகளும் அதில் பங்கேற்றவர்களின் வாழ்நாளில் மறக்க முடியாத தருணமாக இருந்தது.
story written by: Jayachandran


Click it and Unblock the Notifications