இந்திய வம்சாவளியை சேர்ந்த என்ஜினீயர் ராகுல் பாண்டே. இவர் பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டாவில் தொழில்நுட்ப பிரிவின் தலைவர் மற்றும் மேலாளராக இருந்தார். மெட்டாவில் ஆண்டுக்கு ரூ.6.5 கோடி மேல் சம்பளம் வாங்கினார்.
இந்நிலையில் ராகுல் பாண்டே கடந்த ஆண்டு (2022) மெட்டாவிலிருந்து வெளியேறினார். ரூ.6.5 கோடி மெட்டா வேலையை வேண்டாம் என்று ராகுல் பாண்டே ராஜினாமா செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ராகுல் பாண்டே மெட்டா வேலையை உதறியது ஏன் என்பது குறித்து ஊடகம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

ராகுல் பாண்டே கூறுகையில், எனது பயணம் எடுத்த உடனே 100 டாலர் நோட்டுகளை எண்ணும் அளவுக்கு சீராக அமையவில்லை. நான் பேஸ்புக்கில் சேர்ந்த முதல் ஆறு மாதங்களுக்கு மிகவும் கவலையாக இருந்தேன். நான் ஒரு மூத்த என்ஜினீயராக இருக்க எனக்கு திறன் இருக்கிறதா என்று என்னுள் சந்தேகம் ஏற்பட்டது.
நிறுவனத்தின் கலாச்சாரம் மற்றும் பணிக்கு தகுந்த மாதிரி மாற சிரமப்பட்டேன். நான் சேர்ந்த ஒராண்டுக்குள் பேஸ்புக் உள்விவகாரங்களால் போராட்டங்களை எதிர்கொண்டது இதனால் பேஸ்புக் பங்கு மதிப்பில் சரிவு ஏற்பட்டது. இது என் நம்பிக்கையை மீண்டும் ஒருமுறை அசைத்து பார்த்தது.
இந்த பிரச்சினைக்கு மத்தியில், எனது சக ஊழியர்கள் பலர் நிறுவனத்தில் இருந்து வெளியேறி வேறு நிறுவனங்களில் சேர்ந்தனர். இதனால் நான் ஈடுபட்டு இருந்த பல திட்டங்கள் தாமதம் ஏற்பட்டது. நான் நிறுவனத்தில் சேர்ந்து ஒரு வருடமே ஆகியிருந்தபோது, வேறு நிறுவனத்துக்கு விரைவில் மாறுவோம் என்ற எண்ணம் ஏற்பட்டது.
இருப்பினும் அதற்கு பதிலாக எனது செயல்திறனை மேம்படுத்த ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டேன். பேஸ்புக்கில் இரண்டாம் ஆண்டின் முடிவில், பல்வேறு பிரிவுகளில் என்ஜினீயர்களால் பரவலாகப் பயன்படுத்தும் ஒரு கருவியை உருவாக்கினேன். அதன் மூலம் நேரம் அதிகம் மிச்சமாகும்.
நிறுவனத்தில் பதவி உயர்வு பெற்றேன். அடிப்படை சம்பளமாக ரூ.2 கோடி மற்றும் சுமார் 2 கோடி பங்குகளை பெற்றேன். இருப்பினும் கோவிட் காரணமாக வேறு நிறுவனத்தில் வேலை தேட தொடங்கினேன். பேஸ்புக்கில் பணியாற்றிய கடைசி ஆண்டில் நான் மேலாளராக பணியாற்றினேன், அதே நிறுவனத்தில் மூன்று ஆண்டுகள் கழித்து குழு மாறினேன்.
2021ம் ஆண்டு முடிவடைந்தவுடன், நான் மெட்டாவை தாண்டி உலகை ஆராய ஆரம்பித்தேன். தொழில்நுட்ப துறையில் சுமார் 10 ஆண்டுகள் பணியாற்றி பிறகு ஒரளவு நான் நிதி சுதந்திரம் (செல்வ செழிப்பு) அடைந்தேன்.
என்ஜினீயரிங்குக்கு அப்பால் இன்னும் எவ்வளவோ கற்றுக் கொள்ள முடியும் என்பதை உணர்ந்தேன். 2021ல் எனது மொத்த இழப்பீடு 8 லட்சம் அமெரிக்க டாலரை (சுமார் ரூ.6.5 கோடிக்கு மேல்) தாண்டியது. இவ்வளவு பெரிய தொகை கிடைக்க காரணம் எனது நீடித்த வலுவான செயல்திறன் மற்றும் மெட்டாவின் பங்கு விலை உயர்ந்தது.
நாட்டில் அதிகம் வருமானம் ஈட்டும் முதல் 1 சதவீத்தில் நானும் ஒருவனாக இருந்தேன். அந்த மட்டத்தில், பணம் உண்மையில் தகுதியானதாக உணரவில்லை, அதிர்ஷ்டம் ஒரு பெரிய பங்கினை வகிக்கிறது என்று தெரிவித்தார்.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications