விவசாயம் செய்வதற்கு சொந்தமாக நிலம் இருக்க வேண்டும் மற்றும் அனுபவம் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை என்பதை நிரூபித்துள்ளனர் ராஜஸ்தானை சேர்ந்த இரு இளைஞர்கள். ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரை சேர்ந்த உறவினர்கள் ரிதுராஜ் சர்மா மற்றும் கிருஷ்ணா ஜோஷி.
இதில் ரிதுராஜ் சர்மா நாக்பூர் ஐ.எம்.டி.யில் நிதித்துறையில் எம்.பி.ஏ. படித்தவர். ஜெட்டா ஃபார்ம்ஸை தொடங்குவதற்கு முன் இவர் ஒரு சோலார் நிறுவனத்தில் வேலை பார்த்தார். கிருஷ்ணா ஜோஷி பி.காம். மற்றும் எம்.பி.ஏ. படித்துள்ளார்.

ரிதுராஜ் சர்மா மற்றும் கிருஷ்ணா ஜோஷி ஆகிய இருவருக்கும் விவசாயம் செய்ய வேண்டும் என்ற ஆர்வம் இருந்தது. அதேசமயம் அவர்களுக்கு விவசாயத்தில் அனுபவம் கிடையாது. இருப்பினும் ஏதோ நம்பிக்கையில் விவசாயத்தில் களம் இறங்கினர். 2016ல் ஜெட்டா ஃபார்ம்ஸை தொடங்கினர்.
ஆயினும் 2020ல் தான் அதிநவீன வேளாண் தொழில்நுட்ப ஸ்டார்ட்அப் நிறுவனமான ஜெட்டா ஃபார்ம்ஸ் பதிவு செய்யப்பட்டது. ஆரம்பத்தில் அவர்கள் இருவருக்கும் பல சவால்கள் இருந்தன. அவற்றை சமாளித்து வெற்றிகரமாக விவசாயத்தில் முன்னேறி வருகின்றனர். ராஜஸ்தானில் ஸ்ட்ராபெர்ரிகளை சாகுபடி செய்வதற்காக தேசிய விருது கிடைத்தது.
ஜெட்டா ஃபார்ம்ஸ் நிறுவன வெற்றிக்கு அவர்களது தனித்துவமான வணிக மாடல் காரணமாக இருக்கலாம். இந்நிறுவனம் நில உரிமையாளர்களிடமிருந்து நிலங்களை குத்தைக்கு எடுத்து விவசாயிகளை வைத்து சாகுபடி செய்கிறது. இதனால் விவசாயிகளுக்கு வேலைவாய்ப்பு மற்றும் நிலையான வருமானம் கிடைக்கிறது. அதேசமயம், நன்கு கட்டமைக்கப்பட்ட இலாப-பகிர்வு முறையின் மூலம் நில உரிமையாளர்கள் தங்கள் நியாயமான பங்கை பெறுகிறார்கள்.
பண்ணையில் உற்பத்தி செய்யப்படும் விவசாய பொருட்கள் B2B நெட்வொர்க் மற்றும் சேனல் வாயிலாக விற்பனை செய்கிறது. இந்நிறுவனம் ஒவ்வொரு 2 ஏக்கர் நிலத்துக்கும் ஒரு விவசாயிக்கு வேலைவாய்ப்பு வழங்குகிறது.
விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் ஒரு தனியார் நிறுவனம் என்ற பெருமையை ஜெட்டா ஃபார்ம்ஸ் பெற்றுள்ளது. இதுதவிர விவசாயிகளின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் அவர்களின் வயதான பெற்றோருக்கு புனித யாத்திரை ஆகியவற்றையும் அந்நிறுவனம் வழங்குகிறது.
ஜெட்டா ஃபார்ம்ஸ் தற்போது இந்தியா முழுவதுமாக 9,000 ஏக்கர் நிலத்தை நிர்வகித்து வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் அதனை 25,000 ஏக்கராக விரிவுப்படுத்த இலக்கு நிர்ணயித்துள்ளது. ஜெட்டா ஃபார்ம்ஸ் நிறுவனம் 2021-22ம் நிதியாண்டில் ரூ.22 கோடி வருவாய் ஈட்டியுள்ளது.
கடந்த 2022-23ம் நிதியாண்டில் இந்நிறுவனத்தின் வருவாய் ரூ.55 கோடியாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் 25,000 ஏக்கர் நிலங்களில் சாகுபடி செய்து ரூ.400 கோடி வருவாய் ஈட்ட இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications