உலகளாவிய வெள்ளி விலை உயர்வு இந்தியாவின் உள்ளூர் சந்தைகளை பெரிதும் பாதித்துள்ளது. குஜராத்தின் ராஜ்கோட் நகரத்தில் உள்ள வெள்ளி வியாபார சந்தையில் ஏற்பட்ட பெரும் நிதி நெருக்கடி குறித்து உள்ளூர் செய்தித்தாளான குஜராத் மிரர் அறிக்கை வெளியிட்டுள்ளது.
இந்த திடீர் நிதி நெருக்கடி எப்படி உருவானது? 44 வெள்ளி டிரேடிங் நிறுவனங்கள் திவால் அறிவிக்கும் அளவுக்கு என்ன நடந்தது..?

வெள்ளி விலை உயர்வு
2025 ஆம் ஆண்டு வெள்ளி விலை அசாதாரண ஏற்றத்தை கண்டது எல்லோருக்கும் தெரியும். இந்த விலை உயர்வை பணமாக்கும் முயற்சியில் ராஜ்கோட் வெள்ளி வியாபாரிகள் தீவிரமாக இறங்கினர்.
சர்வதசே சந்தையில் வெள்ளி கிலோவுக்கு ரூ.2.5 லட்சம் வரை உயர்ந்தது, இந்த அதீத விலை உயர்வை அடிப்படையாக வைத்து ஷார்ட் செல்லிங் செய்த வியாபாரிகள் பெரும் சிக்கலில் சிக்கினர்.
வெள்ளியில் காலம் காலமாக வர்த்தகம் செய்யும் இந்த வியாபாரிகள் வெள்ளி விலை ரூ.1.25 லட்சத்தை தாண்டாது என்று நம்பி செல்லிங் பொசிஷன் செய்திருந்தனர். ஆனால் விலை தொடர்ந்து உயர்ந்ததால், விற்ற விலைக்கும் தற்போதைய சந்தை விலைக்கும் இடையிலான வித்தியாசம் அதிகரித்து, இதனால் கடன்களை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது. இது தான் Short Squeeze. ஷார்ட் செல்லிங் என்றால் என்ன? என்பதை செய்தியின் பிற்பகுதியில் எளிய முறையில் விளக்கப்பட்டு உள்ளது.
அவசர கூட்டம்
மேலும் ராஜ்கோட் வெள்ளி வியாபாரிகள் இத்தகைய வர்த்தகத்தை டப்பா டிரேடிங் முறையில் நடத்தியிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. டிப்பா டிரேடிங் என்பது மறைமுகமாக செய்யப்படும் வர்த்தகம்.
இந்த நிலையில் ராஜ்கோட் வியாபாரிகள் சனிக்கிழமை இரவு அவசர கூட்டம் நடத்தினர். இதில் 44 வியாபாரிகள் Short Squeeze இழப்பால் ஏற்றபட்ட கடன்களை திருப்பி செலுத்த முடியாது என்று ஒப்புக்கொண்டனர். இதனால் திவாலாக அறிவிக்கப்பட்டது, இது குஜராத் புல்லியன் சந்தையில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது என NDTV தனது செய்தியில் தெரிவித்துள்ளது.
சில வியாபாரிகள் தங்கள் கடைகளை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர் என்றும் தெரிய வந்துள்ளது. அதேசமயம், உலோகமாக வெள்ளி இருப்பு வைத்திருந்தவர்கள் அதிகப்படியான விலையால் லாபம் அடைந்துள்ளனர்.
கடன் அளவு
இப்படி ஷாட் செல்லிங் செய்தது மூலம் வெள்ளி வியாபாரிகளின் மொத்த கடன் தொகை ஏறத்தாழ ரூ.3,600 கோடியாக இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது ராஜ்கோட் மட்டுமின்றி அகமதாபாத், இந்தோர் மற்றும் துபாய் சந்தைகளையும் பாதித்துள்ளது. இந்த நெருக்கடி உள்ளூர் ரியல் எஸ்டேட் மற்றும் நிதி துறைகளையும் பெரிய அளவிலான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஷார்ட் செல்லிங் என்றால் என்ன? எப்படி வேலை செய்கிறது?
பங்குச் சந்தையில் பெரும்பாலானோர் பங்குகளை வாங்கி, விலை உயர்ந்ததும் விற்று லாபம் ஈட்டுவார்கள். இதை "லாங் பொசிஷன்" என்று அழைப்பார்கள். ஆனால் சிலர் பங்கு விலை குறையும் என்று நினைத்து, அதிலிருந்து லாபம் ஈட்ட முயல்வார்கள். இந்த முறையைத்தான் ஷார்ட் செல்லிங் (Short Selling) என்று சொல்வார்கள். இது நடைமுறையில் இருக்கும் ஒரு வர்த்தக முறை தான், ஆனால் அதிக ஆபத்து உள்ளது, அதேவேளையில் சரியாக செய்தால் நல்ல லாபம் தரும்.
ஷார்ட் செல்லிங் எப்படி நடக்கிறது?
ஷார்ட் செல்லிங் செய்ய, உங்களிடம் பங்குகள் இருக்க வேண்டிய அவசியமில்லை. பிரோக்கர் (தரகர் நிறுவனம்) மூலம் பங்குகளை கடன் வாங்கி விற்பனை செய்வீர்கள். பிறகு விலை குறைந்ததும் அதே பங்குகளை வாங்கி, கடனை திருப்பி செலுத்துவீர்கள். இடையில் உள்ள விலை வித்தியாசம்தான் உங்கள் லாபம் அல்லது நஷ்டம்.
எளிய உதாரணம்:
ஒரு நிறுவனத்தின் பங்கு ஒன்று இப்போது ரூ.100க்கு விற்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். நீங்கள் அந்த பங்கு விலை குறையும் என்று நினைக்கிறீர்கள். அதனால்..
- பிரோக்கரிடம் 100 பங்குகளை short selling செய்ய கடன் வாங்குகிறீர்கள்.
- அந்த 100 பங்குகளை சந்தையில் ரூ.100க்கு விற்கிறீர்கள். உங்கள் கணக்கில் ரூ.10,000 வருகிறது.
- சில நாட்களுக்குப் பிறகு பங்கு விலை ரூ.80 ஆக குறைகிறது.
- நீங்கள் 100 பங்குகளை ரூ.80க்கு வாங்குகிறீர்கள் (ரூ.8,000 செலவு).
- கடன் வாங்கிய பங்குகளை பிரோக்கருக்கு திருப்பி கொடுக்கிறீர்கள்.
- உங்கள் லாபம்: ரூ.10,000 - ரூ.8,000 = ரூ.2,000 (பிரோக்கர் கட்டணம் போக).
இதுதான் ஷார்ட் செல்லிங் செயல்முறை. இந்த வர்த்தக முறையில் விலை குறைந்தால் லாபம், விலை உயர்ந்தால் நஷ்டம். இதே பங்குகள் 120 ரூபாய் உயர்ந்தால் கடன் வாங்கிய 10000 + 2000 ரூபாயை ப்ரோக்கர்களுக்கு செலுத்த வேண்டும்.
இதேவர்த்தக முறையில் மறைமுகமாக வெள்ளி வர்த்தகர்கள் மத்தியில் ஷார்ட் செல்லிங் செய்யப்பட்டு உள்ளது. தற்போது விலை வியாபாரிகள் கணித்த 1.25 லட்சம் ரூபாய் காட்டிலும் 2.5 லட்சமாக உயர்ந்துள்ளது. இத்தகைய வர்த்தகத்தில் உருவான கடன் 3600 கோடி ரூபாயாக உயர்ந்து திவாலாக வைத்துள்ளது.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை சரிந்தது: இப்போதே முதலீடு செய்யலாமா? இன்னும் விலை குறையுமா?

சென்னையில் தங்கம் விலை திடீர் சரிவு.. ஆனா சர்வதேச சந்தையில் 3வது நாளாக உயர்வு.. என்ன நடக்குது..?!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

வங்கி லாக்கரில் உள்ள உங்க நகை சேஃபா? லாக்கர் ரகசியமும் அபராதமும்?

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

மதுரை மக்களுக்கு குட்நியூஸ்.. தங்கம் விலையில் இன்றும் அதிசயம்.. வாங்க நல்ல வாய்ப்பு.. ஆனா ஒரு விஷயம்..!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை சரிவு.. வாரத்தின் முதல் நாளே சர்ப்ரைஸ்.. நல்ல சான்ஸ்..!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?



Click it and Unblock the Notifications