அமெரிக்காவில் எப்படி வாரன் பபெட் பெரிய தலக்கட்டோ அதே மாதிரி இந்தியாவில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பங்குச்சந்தையில் பெரிய தலக்கட்டு. இந்தியாவில் நிறுவனங்கள் பங்குகளை பேப்பரில் விற்பனை செய்த காலத்தில் இருந்தும் பெரும் தொகையில் இந்திய பங்குச்சந்தையில் முதலீடு செய்து முழு நேர பங்கு வர்த்தகராக இருக்கிறார் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா.
இந்திய பங்கு முதலீட்டு சந்தையில் பிக் புல் என பிரபலமாக அறியப்படுபவர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. இவருடைய போர்ட்போலியோ-வை தெரிந்துக்கொள்ள எத்தனை பேர் எப்படியெல்லாம் போட்டிப்போட்டார்கள் தெரியுமா..? இவருடைய பிள்ளைகள் தற்போது என்ன செய்கிறார்கள்..? ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வின் தந்தை யார்..?

இந்திய பங்குச்சந்தையை ஆண்ட ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 1987 இல் ரேகா-வை மணந்தார். இவரது மறைவிற்கு பின்பு மொத்த போர்ட்போலியோ-வை நம்பிக்கையான நபர்களை தேர்வு செய்து குடும்ப கவுன்சில் அமைப்பில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா முதலீடுகளை ரேகா ஜூன்ஜூன்வாலா நிர்வாகம் செய்து வருகிறார்.
ராகேஷ் - ரேகா ஜூன்ஜூன்வாலா தம்பதியருக்கு மூன்று குழந்தைகள் ஒரு மகள் மற்றும் இரண்டு மகன்கள். இவர்களது மகள் நிஷ்தா 30 ஜூன் 2004 அன்று பிறந்தார். அவர்களுக்கு ஆர்யமன் மற்றும் ஆர்யவீர் என்ற இரட்டை குழந்தைகள் 2 மார்ச் 2009 அன்று பிறந்தனர். தற்போது ராகேஷ் - ரேகா ஜூன்ஜூன்வாலா மகள் நிஷ்தா ரேர் எண்டர்பிரைசஸ் நிர்வாக பணியில் ஈடுப்பட்டு வருகிறார்.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 1960 இல் ராஜஸ்தானி மார்வாடி குடும்பத்தில் பிறந்தார். சைடன்ஹாம் கல்லூரி-யில் இளங்கலை பட்டம் பெற்று, இன்ஸ்டிடியூட் ஆப் சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட்ஸ் ஆஃப் இந்தியா-வில் சேர்ந்து படித்தார். ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் தந்தை வருமான வரித்துறை அதிகாரி ஆவார்.
இதனாலேயே சார்ட்டட் அக்கவுன்டன்ட் பணி மீதான ஆர்வம் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வுக்கு அதிகரித்தது. மேலும் ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவின் மூத்த சகோதரர் ராஜேஷ் ஜூன்ஜூன்வாலா-ம் ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட் என்பது குறிப்பிடத்தக்கது. இது தவிர ராகேஷ் ஜூன்ஜூன்வாலாவுக்கு இரண்டு சகோதரிகளும் உள்ளனர்.
இந்தியாவில் வேல்யூ இன்வெஸ்டிங் முறைக்கு பெயர் போன ராகேஷ் ஜூன்ஜூன்வாலா 2022 இல் காலமானார். 1985 ஆம் ஆண்டில் பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் (பிஎஸ்இ) இன்டெக்ஸ் 150 ஆக இருந்தபோது அவர் ரூ. 5000 ரூபாய் முதலீடு செய்து தனது முதலீட்டு பயணத்தை தொடங்கினார்.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா மறைவிற்கு பின்பு அவருடைய மனைவி ரேகா அனைத்து சொத்துக்களையும் பெற்ற பிறகு தொடர்ந்து முதலீட்டு போர்ட்போலியோ-வை விரிவுபடுத்தி வருகிறார். ராகேஷ் ஜூன்ஜூன்வாலா-வும் சரி தற்போது ரேகா ஜூன்ஜூன்வாலா-வும் சரி அனைத்து முதலீடுகளையும் இவர்களது தனியார் முதலீட்டு நிறுவனமான ரேர் எண்டர்பிரைசஸ் கீழ் வைத்துக்கொண்டு இயக்கி வருகின்றனர்.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா பெயரின் முதல் இரண்டு முதலெழுத்துகள் மற்றும் அவரது மனைவி ரேகாவின் பெயரிலிருந்து முதல் இரண்டு முதலெழுத்துகள் கொண்டு ரேர் எண்டர்பிரைசஸ் பெயரைப் உருவானது.
ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஒரு சார்ட்டட் அக்கவுன்டன்ட், அவர் இறக்கும் போது, அவரது நிகர மதிப்பு 5.8 பில்லியன் டாலர்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதுதவிர பல நிறுவனங்களுக்கு தலைவராகவும் இயக்குநராகவும் பணியாற்றினார், ஆகாசா ஏர் நிறுவனத்தின் நிறுவனரும் ஆவார். ஆனால் அவரின் இறுதி நாட்களை நெருங்கும் போது அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விலகினார்.


Click it and Unblock the Notifications