தொழிலில் வெற்றி பெற உடல் இயலாமை எல்லாம் ஒரு தடையே இல்லை நமது எண்ணம் எப்போம் உயர்வாக இருந்தாலே சாதிக்கலாம் என்ற பல தொழிலதிபர்கள் நிரூபித்து உள்ளனர். அவர்களில் ஒருவர்தான் V2 Retail நிறுவனத்தின் நிறுவனர் ராம் சந்திர அகர்வால்.
இளம் வயதிலேயே பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட ராம் சந்திர அகர்வால் இன்று ரீடெயில் வர்த்தகத்தில் ஆண்டுக்கு ரூ.800 கோடிக்கு மேல் வருவாய் ஈட்டும் ஒரு நிறுவனத்தை உருவாக்கியுள்ளார். நீங்கள் பெங்களூர், டெல்லி சென்றிருந்தாலோ அல்லது பெங்களூரில் வசித்து வந்தாலோ ராம் சந்திர அகர்வால்-ன் முதல் நிறுவனத்தை கட்டாயம் பார்த்திருப்பீர்கள். கெஸ் பண்ணுங்க பார்ப்போம்.

மேற்க வங்க மாநிலம் கொல்கத்தாவில் 1965ல் ஒரு சிறிய குடும்பத்தில் பிறந்தார் ராம் சந்திர அகர்வால். மற்ற குழந்தைகள் போலவே ராம் சந்திர அகர்வாலும் தொடக்கத்தில் இயல்பாகவே இருந்தார். ஆனால் எதிர்பாராத விதமாக இளம் வயதில் ராம் சந்திர அகர்வால் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார்.
ஊன்றுகோல் இல்லாமல் நடக்க முடியாத நிலை ஏற்பட்டதால் அவருக்கு வாழ்க்கை தினமும் கடினமாக இருந்தது. அதேசமயம் அவரது குடும்பத்தினர் ராம் சந்திர அகர்வாலுக்கு தங்களால் முடிந்த அளவுக்கு உதவினர். இருப்பினும் அவரது எதிர்காலம் குறித்து அவர்களுக்கு பெரும் கவலையை உண்டாக்கியது. ராம் சந்திர அகர்வால் படிப்பை முடித்தவுடன் தனது குடும்பத்துக்கு சுமையாக இருக்க விரும்பவில்லை.
நாமும் எதாவது ஒரு வேலைக்கு சென்று சம்பாதித்து வீட்டுக்கு கொடுப்போம் என்று அகர்வால் நினைத்தார். மேலும், வேலைக்காக பல இடங்களில் முயற்சி செய்தார். ஆனால் அவரது உடல் இயலாமை காரணமாக வேலை கிடைப்பது குதிரை கொம்பாக இருந்தது.
ஒரு கட்டத்தில் சொந்தமாக தொழில் தொடங்குவோம் என்று முடிவு எடுத்தார். 1986ல் நண்பர்களின் ஆதரவு மற்றும் சிறிது கடன் வாங்கி ஒரு ஜெராக்ஸ் கடையை தொடங்கினார். இது அவருக்கு ஒரளவு நிதி சுதந்திரத்தை கொடுத்தது. இதனையடுத்து கொல்கத்தாவின் லால் பஜாரில் ஒரு துணிக்கடையை திறந்தார்.
2001ல் கொல்கத்தாவையும், அவரது கடையையும் விட்டு விட்டு டெல்லிக்கு சென்றார். இது அவரது வாழ்க்கையின் வெற்றிக்கு பெரிய அடித்தளத்தை அமைத்தது. டெல்லியில் விஷால் ரீடெய்ல் என்ற பெயரில் சில்லரை வர்த்தகத்தை தொடங்கினார்.
சிறிய கடையில் இந்த சில்லரை வர்த்தகம் நாடு முழுவதும் 200 கடைகளாக வளர்ச்சி கண்டது. விஷால் ரீடெய்ல் வளர்ச்சியின் அடுத்த கட்டம் இந்தியாவின் முதல் ஹைப்பர் ரீடெய்ல் சந்தையான விஷால் மெகா மார்ட்டாக உருவெடுத்தது. இந்த சூழ்நிலையில், ராம் சந்திர அகர்வால் ஒரு வங்கியின் கணிசமான தொகையை கடன் வாங்கி பங்குச் சந்தையில் முதலீடு செய்தார். இது அவருக்கு மறக்க முடியாத கசப்பான அனுபவத்தை கொடுத்தது.
2008ல் பங்குச் சந்தையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டது. இது அவருக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது. ராம் சந்திர அகர்வாலின் விஷால் மெகா மார்ட் சுமார் ரூ.750 கோடி இழப்பை சந்தித்தது. இதனால் அவருக்கு பெரிய நிதி நெருக்கடி ஏற்பட்டது.
இதனால் நிறுவனம் திவால் நிலைக்கு சென்றது. கடனை அடைக்க விஷால் ரீடெயிலை விற்பனை செய்ய அவர் முடிவு செய்தார். போர்ப்ஸ் இந்தியாவின் கூற்றுப்படி, 2010ல் விஷால் ரீடெய்ல் நிறுவனம் டி.பி.ஜி. மற்றும் ஸ்ரீராம் குழுமத்துக்கு கைமாறியது.
பெரிய பெயர் கொடுத்த நிறுவனம் மற்றும் வருமானம் தன் கை விட்டு போனாலும் ராம் சந்திர அகர்வால் மனம் தளரவில்லை. சில ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ரீடெயில் வர்த்தகத்தில் களம் இறங்கினார். V2 Retail என்ற பெயரில் வர்த்தகத்தை தொடங்கினார்.
இன்று V2 Retail நிறுவனம் 17 மாநிலங்களில் 101 ஸ்டோர்களை கொண்டுள்ளது. கடந்த நிதியாண்டில் V2 Retail நிறுவனம் ரூ.845 கோடி வருவாய் ஈட்டியுள்ளது. இதன் மூலம் இந்தியாவின் மிக வேகமாக வளர்ந்து வரும் மற்றும் வெற்றிகரமான நிறுவனங்களில் ஒன்றாக V2 Retail உருவெடுத்துள்ளது.
More From GoodReturns

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!



Click it and Unblock the Notifications