தொழில் தொடங்கிய உடனே வெற்றி பெறுவது என்பது எல்லோருக்கும் சாத்தியமாகாது. நமது தொழில் முயற்சியில் சில எதிர்பாராத தோல்விகளை சந்திக்க வேண்டிய சூழல் ஏற்படும். அதனை கடந்து விட்டால் வெற்றி என்றுமே நம் பக்கம்தான்.
ரமேஷ் ரூபாரேலியா-வின் வாழ்க்கை அதற்கு நல்ல உதாரணம். கடன் சுமை மற்றும் கடுமையான நிதி நெருக்கடியால் மாடு மேய்க்கும் தொழிலை செய்த அவர் இன்று பால் பொருட்கள் வர்த்தகத்தில் ஆண்டுக்கு பல கோடி சம்பாதிக்கிறார்.

குஜராத்தை சேர்ந்த பிரபலமான பால் பொருள் வர்த்தக நிறுவனங்களில் ஒன்று ஸ்ரீ கிர் கௌ க்ரிஷி ஜதன் சன்ஸ்தா. இந்த நிறுவனத்தை தொடங்கியவர் 7ம் வகுப்பு வரை மட்டுமே படித்த ரமேஷ் ரூபாரேலியா-ல். இவர் குஜராத்தில் சிறிய கிராமத்தில் ஒரு விவசாயிக்கு மகனாக பிறந்தவர் குழந்தை பருவம் முதலே அவர் கடுமையான நிதி நெருக்கடிகளை சந்தித்து வந்தார். இந்த சூழ்நிலையில், தந்தையின் ஆலோசனை பெயரில் கோ (பசு) சாலை ஒன்றை தொடங்கினார்.
நிதி நெருக்கடியில் இருந்து மீண்டு விடலாம் என்று பெரிய நம்பிக்கையில் தொடங்கிய அந்த முயற்சி பலனளிக்காததால் அவரது குடும்பம் கடனில் மூழ்கியது. 2005ல் ரமேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் தங்கள் கிராமத்தில் இருந்து கோண்டாலா நகருக்கு சென்று விவசாய பணிகளை செய்தனர். ரமேஷ் மாடுகளை மேய்த்து மாதம் ரூ.80 சம்பாதித்தார். இந்த சூழ்நிலையில் சாகுபடி செய்த வெங்காயம் நல்ல விளைச்சலை கொடுத்தது, அதனை விற்பனை செய்தததில் அவர்களுக்கு ரூ.35 லட்சம் வருவாய் கிடைத்தது.
அப்போதுதான் ரமேஷ் தனக்கு பிடித்த மாடு தொடர்பான தொழிலை செய்ய முடிவு செய்தார். முதலில் கைவிடப்பட்ட பசுக்களை பராமரிக்க தொடங்கினார். இறுதியில் சில கிர் வகை மாடுகளை வாங்கி ஸ்ரீ கிர் கௌ க்ரிஷி ஜதன் சன்ஸ்தாவை நிறுவினார்.
ஆரம்பத்தில் பால் கறந்து அதனை விற்க தொடங்கினார். ஆனால் கிர் பசும்பாலின் வாசனை பற்றி வாடிக்கையாளர்கள் புகார் தெரிவித்தனர். இது அவருக்கு மோசமான அனுபவமாக இருந்தது. இதனையடுத்து பால் விற்கவே மாட்டேன் என்று தனக்குத்தானே சத்தியம் செய்து கொண்டார்.
இதனையடுத்து அவர் ஒரு சிறிய அறையை வாடகைக்கு எடுத்து நெய் தயாரிக்க தொடங்கினார். தயாரித்த நெய்யை பிளாஸ்டிக் பாக்கெட் மற்றும் கண்ணாடி பாட்டில்களிலும் அடைத்து சைக்கிளில் எடுத்து சென்று விற்பனை செய்து வந்தார். நெய் குறித்து வாடிக்கையாளர்கள் நேர்மறையான கருத்துக்களை தெரிவித்தது அவரை மேலும் ஊக்கப்படுத்தியது. இது அவரை நெய் வியாபாரத்தில் இன்னும் ஆழமாக செய்ய வைத்தது.

பசுக்களுக்கு ஊட்டமளிக்கும் தீவனத்தை பற்றி கற்று கொண்டார். சாதாரண கிர் பசு நெய்யை தவிர, மருத்துவ குணம் கொண்ட கிர் நெய்யை தயாரிக்க தொடங்கினார். இதனால் அவரது வாடிக்கையாளர்கள் நெட்வொர்க்கும் விரிவடைந்தது. நெய் விற்பனையும் சூடு பிடித்தது.
நெய் ஒரு கிலோ ரூ.250 முதல் ரூ.2.5 லட்சம் வரை விலை போக தொடங்கியது. இன்று இவரிடம் 250 கிர் மாடுகள் உள்ளன. 123 நாடுகளுக்கு நெய் ஏற்றுமதி செய்கிறார். நெய் வணிகம் வாயிலாக ஆண்டுக்கு ரூ.8 கோடி சம்பாதிக்கிறார். மேலும், இந்த தொழிலில் ஈடுபட விரும்பும் ஆர்வமுள்ள விவசாயிகள் மற்றும் இளைஞர்களுக்கு மாடு வளர்ப்பு மற்றும் நெய் தயாரிக்கும் தொழிலில் பயிற்சியும் அளிக்கிறார்.
More From GoodReturns

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு ரிசர்வ் வங்கி முக்கிய அறிவிப்பு: ரெப்போ வட்டியில் மாற்றமா?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

உண்மையில் யார் ஜெயிச்சது? ஈரான் வியூகமா? அமெரிக்காவின் வெற்றியா? இந்தியாவுக்கு நிம்மதி எப்போது?



Click it and Unblock the Notifications