மத்திய அரசு ஜிஎஸ்டி வரிமுறையில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறது . செப்டம்பர் 22ஆம் தேதியிலிருந்து இந்தியாவில் 5, 18 40 என மூன்று ஜிஎஸ்டி வரி விகிதங்கள் மட்டுமே நடைமுறையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஜிஎஸ்டி வரி திருத்தம் மக்கள் அன்றாடம் பயன்படுத்தக்கூடிய பல்வேறு பொருட்கள் விலையை குறைக்க போகிறது . மத்திய அரசு ஆடம்பர கார்களுக்கு 40% ஜிஎஸ்டி வரியை நடைமுறைக்கு கொண்டு வர இருக்கிறது . இதுநாள் வரை ஆடம்பர கார்களுக்கு 28% ஜிஎஸ்டி மற்றும் காம்பன்சேஷன் செஸ் வரி விதிக்கப்பட்டது. இதனால் சில கார்களுக்கு 50% வரை வரி செலுத்த வேண்டிய நிலை இருந்தது.

இந்த சூழலில் தற்போது காம்பன்சேஷன் செஸ் வரி நீக்கப்பட்டு 40 சதவீத ஜிஎஸ்டி என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக பல்வேறு ஆடம்பர கார்களின் விலைகள் பெருமளவில் குறைந்து இருக்கின்றனர். இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கு பெயர் போன டாடா குழுமத்துக்கு உட்பட்ட2 ஜாகுவார் லேண்ட் ரோவர் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இந்தியாவில் ஜிஎஸ்டி வரி குறைப்பின் மூலம் கிடைக்கும் பலன்களை நேரடியாக வாடிக்கையாளர்களுக்கே வழங்குவதாக தெரிவித்து இருக்கிறது.
இதன்படி இந்தியாவில் ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனம் விற்பனை செய்யக்கூடிய கார்களின் விலை 4.5 லட்சம் ரூபாய் முதல் 30.4 லட்சம் ரூபாய் வரை விலை குறைக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இன்று முதலே இந்த விலை குறைப்பு அமலுக்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ரேஞ்சு ரோவர் , டிஸ்கவரி, டிஃபெண்டர் போன்ற பல்வேறு மாடல் கார்களின் விலை பெருமளவில் குறைந்து இருக்கிறது .
இது தொடர்பாக ஜாகுவார் லேண்ட்ரோவர் நிறுவனத்தின் இந்தியாவிற்கான மேலான் இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கையில் ஆடம்பர வாகனங்கள் மீதான இந்த ஜிஎஸ்டி வரி திருத்தத்தை நாங்கள் வரவேற்கிறோம் இது வாடிக்கையாளர்களுக்கும் கார் விற்பனையாளர்களுக்கும் பெரிய அளவில் பயன் அளிக்கும் என தெரிவித்திருக்கிறார். இந்தியாவில் ஆடம்பர கார்களுக்கான சந்தை மற்றும் விற்பனை இதன் மூலம் பெருகும் என அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.
எனவே இனி இந்தியாவில் ஆடம்பர கார்கள் ரேஞ்ச் ரோவர் மற்றும் டிஸ்கவரி உள்ளிட்ட மாடல் கார்களை மக்கள் 30 லட்சம் ரூபாய் வரை குறைந்த விலைக்கு வாங்க முடியும் . இதன்படி ரேஞ்ச் ரோவர் கார்களுக்கு 4.6 லட்சம் முதல் 30 லட்சம் ரூபாய் வரை விலை குறைகிறது. அடுத்ததாக டிஸ்கவரி மாடல் கார்களுக்கு 4.5 லட்சத்திலிருந்து 9.90 லட்சம் ரூபாய் வரை விலை குறைகிறது .டிஃபெண்டர் கார்களுக்கு 7 லட்சம் ரூபாயில் இருந்து 18.60 லட்சம் ரூபாய் வரை விலை குறைகிறது.
இன்றைய தினத்தில் இருந்து இந்த விலை குறைவு என்பது அமலுக்கு வந்து விட்டதாக தெரிவிக்கப்பட்டிருக்கிற. ஏற்கனவே மெர்சிடிஸ் பென்ஸ், பிஎம்டபிள்யூ, ஆடி , வால்வோ உள்ளிட்ட நிறுவனங்களும் ஜிஎஸ்டி வரி குறைப்புக்கு ஏற்ப தங்களுடைய வாகனங்களின் விலை குறைவு தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு விட்டன.
More From GoodReturns

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!

தமிழ்நாட்டில் விவசாயம் செய்யும் மாதவன்!! தரிசு நிலத்தை தென்னந்தோப்பாக மாற்றி சாதனை!!

டிசிஎஸ் நாசிக் அலுவலகத்தில் நடந்தது என்ன? மஃப்டியில் வேலை செய்த மகளிர் போலீஸின் ஷாக் ரிப்போர்ட் !!

சட்டமன்ற தேர்தல் 2026: உங்களின் Booth Slip-ஐ ஆன்லைனில் டவுன்லோட் செய்வது எப்படி?



Click it and Unblock the Notifications