இந்தியாவின் மிகப்பெரிய ஆட்டோமொபைல் நிறுவனமாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் தனது கட்டுப்பாட்டில் இருந்த டாடா டெக்னாலஜிஸ் இன் 9.9% பங்குகளை 1,613.7 கோடி ரூபா்க்கு விற்பனை செய்துள்ளது. இதை வாங்கியது யார் தெரியுமா..?
இதேவிட முக்கியமாக டாடா டெக்னாலஜிஸ் இந்திய பங்குச்சந்தையில் பட்டியலிட ஐபிஓ வெளியிட தயாராக இருக்கும் வேளையில் டாடா மோட்டார்ஸ் இதன் பங்குகளை விற்பனை செய்வது மூலம் தனது வர்த்தக விரிவாக்கத்திற்கான நிதியை எளிதாக திட்டியுள்ளது.

டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தின் 9.9% பங்குகளை ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளை மற்றும் TPG Rise Climate SF Pte அமைப்புக்கு விற்கப்பட்டு உள்ளது. TPG குளோபல் அமைப்பின் கிளைமேட் முதலீட்டு நிதி தான் இந்த TPG Rise Climate SF. மேலும் இந்த 9.9 சதவீத பங்கு விற்பனையை டாடா டெக்னாலஜிஸ் நிறுவனத்தை சுமார் 2 பில்லியன் டாலர் மதிப்பீட்டில் செய்யப்பட்டு உள்ளது.
டாடா மோட்டார்ஸ் 9% பங்குகளை TPG ரைஸ் க்ளைமேட் பண்ட்-க்கு சுமார் 1,467 கோடி ரூபாய்க்கும், 0.9% பங்குகளை ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளைக்கு சுமார் 146.7 கோடி ரூபாய்க்கும் விற்கப்பட்டு உள்ளது. இந்த பங்கு பரிவர்த்தனை அக்டோபர் 27 தேதி அல்லது இரு தரப்புகள் மத்தியில் முடிவு செய்யப்பட்ட தேதிக்குள் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சுமார் 18 பில்லியன் டாலர் மதிப்பிலான முதலீட்டு பலம் கொண்ட டிபிஜி குளோபல் அமைப்பின் TPG Rise Climate பண்ட், உலகளாவிய காலநிலை மாற்றத்தில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தி உருவாக்கப்பட்ட முதலீட்டுப் பிரிவு. TPG Rise Climate பண்ட் ஐந்து பருவநிலை துணைப் பிரிவுகளில் கவனம் செலுத்துகிறது: எனர்ஜி மாற்றம், கிரீன் மொபிலிட்டி, நிலையான எரிபொருள்கள், நிலையான மூலக்கூறுகள் மற்றும் கார்பன் தீர்வுகள் ஆகியவற்றில் கவனம் செலுத்துகிறது.
டிபிஜி குளோபல் அமைப்பு ஏற்கனவே டாடா பாசஞ்சர் எலக்ட்ரிக் மொபிலிட்டி லிமிடெட் நிறுவனத்தில் சுமார் 1 பில்லியன் முதலீடு செய்ததுள்லது. இந்த முதலீட்டின் மூலம் இந்தியாவில் எலக்ட்ரிக் பயணிகள் வாகன இயக்கத்திலும், வர்த்தகத்திலும் முன்னோடியாக இருக்கும் டாடா மோட்டார்ஸ் உடன் இணைந்து முக்கிய பங்குதாரராக மாறியுள்ளது.
டாடா குழுமத்தின் டாடா டெக்னாலஜிஸ் இந்த ஐபிஓ-வில் சுமார் 9.57 கோடி பங்குகள், அதாவது இந்நிறுவனத்தின் 23.60 சதவீத பங்குகள் வர்த்தக சந்தைக்கு வருகிறது, மொத்த பங்குகளும் offer for Sale பிரிவில் விற்பனை செய்யப்பட உள்ளது.
ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் அறக்கட்டளை - ரத்தன் டாடா-வின் புதிய முடிவு.. வேற லெவல் 'சார்' நீங்க..!
டாடா குழுமம் ஜூலை 2004ல் டிசிஎஸ் நிறுவனத்தின் ஐபிஓ வெளியிட்ட பின்பு இதுவரையில் ஒரு நிறுவனம் கூட புதிதாக பங்குச்சந்தைக்கு வரவில்லை. தற்போது டாடா டெக்னாலஜிஸ் ஐபிஓ வெளியிட உள்ளதால் இந்திய பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் அதிகம் எதிர்பார்த்து காத்திருந்த முக்கியமான ஐபிஓ-வாக இருக்கிறது.
டாடா மோட்டார்ஸ்-ன் கிளை நிறுவனமான டாடா டெக்னாலஜிஸ் 1989 ஆம் ஆண்டுத் துவங்கப்பட்டது. இந்நிறுவனம் ஆட்டோமொபைல் மற்றும் ஏரோஸ்பேஸ் துறையில் இருக்கும் நிறுவனங்களுக்கு இன்ஜினியரிங், டிசைன், ஐடி என பல தொழில்நுட்பம் சார்ந்த சேவைகளை அளித்து வருகிறது. Tata Technologies வட அமெரிக்கா, ஐரோப்பா, மத்திய கிழக்கு நாடுகளவ், ஆசிய பசிபிக் சந்தையில் அதிகப்படியான வர்த்தகத்தைக் கொண்டு உள்ளது.


Click it and Unblock the Notifications