ரத்தன் டாடா எழுதி வைத்த உயில்.. ரூ.800 கோடி சொத்துக்ளை பெறும் ஷிரீன், டீனா ஜெஜீபாய்.. யாரு இவங்க..?

2024 அக்டோபர் 9ம் தேதியன்று நாட்டின் பிரபல தொழிலதிபரும், டாடா குழுமத்தின் முன்னாள் தலைவருமான ரத்தன் டாடா தனது 86வது வயதில் உடல் நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி காலமானார். ரத்தன் டாடாவின மறைவு நாட்டு மக்களிடம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவருக்கு நேரடி வாரிசுகள் யாரும் கிடையாது. இதனால் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரத்தன் டாடா அந்த கேள்விளுக்கு எல்லாம் தனது உயிலை பதிலாக விட்டு சென்றுள்ளார்.

ரத்தன் டாடா எழுதி வைத்த உயில்.. ரூ.800 கோடி சொத்துக்ளை பெறும் ஷிரீன், டீனா ஜெஜீபாய்.. யாரு இவங்க..?

வயதாகி விட்டதால் இறைவன் எப்போது வேண்டுமானாலும் நம்மை அழைப்பான் என்பதை உணர்ந்த ரத்தன் டாடா சில ஆண்டுகளுக்கு முன் தனது சொத்துக்கள் யார் யாருக்கு செல்ல வேண்டும் என்பதை உயில் எழுதி வைத்து இருந்தார்.

அதன்படி, ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை சுமார் ரூ.3,800 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது, தொண்டு நிறுவனங்களுக்கு விட்டு சென்றுள்ளார். இதில் டாடா சன்ஸ் மற்றும் பிற சொத்துக்களின் பங்குகளும் அடங்கும். இந்த பணம், செக்சன் 8 நிறுவனமான ரத்தன் டாடா எண்டோவ்மென்ட் பவுன்டேஷனுக்கும், ரத்தன் டாடா என்டோவ்மென்ட் டிரஸ்ட்டுக்கும் செல்லும்.

ரத்தன் டாடாவின் மற்ற நிதி சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கினை, வங்கி டெபாசிட், முதலீடுகள் மற்றும் கடிகாரங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் உள்பட ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அவரது ஒன்று விட்ட சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோருக்கு கிடைக்கும். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியரும் அவரது நெருங்கிய கூட்டாளியுமான மோகினி எம் தத்தாவுக்கு செல்கிறது.

ரத்தன் டாடாவின் ஒரே சகோதரரான 82 வயதான ஜிம்மி நேவல் டாடா, ஜூஹூ வீட்டின் ஒரு பகுதியை பெறுவார். அவரது நெருங்கிய தோழி மெஹ்லி மிஸ்திரி அலிபாக் சொத்தையும், 25 போர் பிஸ்டல் உள்பட டாடாவின் 3 துப்பாக்கிகளையும் பெறுவார்.

ரத்தன் டாடா தனது அன்பான செல்லபிராணிகளுக்காக ரூ.12 லட்சம் ஒதுக்கி உள்ளார். அவற்றின் பராமரிப்புக்காக ஒவ்வொரு காலாண்டிலும் ரூ.30,000 வழங்கப்படும். தனது பக்கத்து வீட்டுக்காரர் ஜேக் மாலைட்டுக்கு வழங்கிய வட்டியில்லா கல்வி கடனையும், தனது நிர்வாக உதவியாளர் சாந்தனு நாயுடுவின் மாணவர் கடனையும் அவர் தள்ளுபடி செய்தார்.

நீதிமன்ற ஆவணங்கள், ரூ.4 லட்சம் ரொக்கம் தவிர, ரத்தன் டாடா இந்தியாவில் சுமார் ரூ.3.67 கோடி வங்கி டெபாசிட் மற்றும் நிலையான டெபாசிட் மற்றும் சுமார் ரூ.40 கோடி வெளிநாட்டு சொத்துக்களை வைத்திருந்ததாக காட்டுகின்றன. அவரது சொத்துக்களில் பிவல்காரி, படேல் பிலிப், டிஸ்ஸாட் மற்றும் ஆடெமர்ஸ் பிகுயெட் போன்ற பிராண்டுகளின் 65 சொகுசு கடிகாரங்களும் அடங்கும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+