மறைந்த டாடா குழுமத்தின் தலைவர் ரத்தன் டாடா வணிக உலகில் மிகவும் மதிக்கப்படும் நபராக இருந்தார். அவர் தனது வாழ்நாள் முழுவதும் மனிதநேயமிக்க மனிதராக தனது வாழ்க்கையை அர்பணித்தார். இவர் பல்வேறு சமூக சேவைகளை செய்வதில் முன்னணியில் இருந்தார். தெருநாய்களைக் கூட நேசிப்பவராகவும், எளிமையான வாழ்க்கையை வாழ விரும்புகிறவராகவும் அவர் சிறந்த ஆளுமை பெற்றவராகவும் இருந்தார்.
நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார முன்னேற்றத்தில் முக்கியப் பங்காற்றிய வணிகக் குழுமம் டாடா. ரத்தன் டாடா குழுமத்தின் வணிகங்களை உலக அளவில் வளர்த்துள்ளார். ரத்தன் டாடா இந்தியாவின் இரண்டு பெரிய தனியார் தொண்டு நிறுவனங்களான ரத்தன் டாடா டிரஸ்ட் மற்றும் டோராப்ஜி டாடா டிரஸ்ட் ஆகியவற்றின் தலைவராகவும் இருந்தார்.

ரத்தன் டாடா 1937 ஆம் ஆண்டு டிசம்பர் 28 ஆம் தேதி பிறந்து கடந்த அக்டோபர் 9 ஆம் தேதி காலமானார். இந்த நிலையில், பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ஷைலேஷ் கோத்தாரி, ரத்தன் டாடாவின் எளிமை குறித்து ரெடிஃபில் போட்ட பதிவு தற்போது வைரலாகி வருகிறது. புத்தகங்கள் மற்றும் செய்திகள் தொடர்பாக ரத்தன் டாடாவுடன் பல நாட்கள் மற்றும் மாலை வேளைகளில் நெருக்கமாகப் பழகி, அவருடன் நேரத்தைச் செலவிட்டது குறித்து தெரிவித்துள்ளார்.
வணிக அதிபர்கள் மத்தியில் ரத்தன் டாடாவை தனித்து நிற்கும் ஒரு காரணம் அவரது எளிமை என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ரத்தன் டாடா தனது வீட்டு லேண்ட்லைன் போனுக்கு வரும் கால்களுக்கு நேரடியாகப் பதில் அளித்து பேசுவாராம். அனைத்து எண்களில் இருந்து வரும் அழைப்புகளையும் எடுத்து பேசுவார் என்று கூறியுள்ளார். பொதுவாக, டாடா அளவுக்கு உயர்ந்த கோடீஸ்வரர் செய்யத் தயங்கும் விஷயம் இது. பொதுவாக, பெரிய தொழிலதிபர்கள் இதுபோன்ற விஷயங்களைச் சமாளிக்க ஒரு செயலர் போன்ற ஒருவரை நியமிப்பார்கள்.
மேலும், ரத்தன் டாடா டாடா குழுமத்தின் தலைவராக 21 ஆண்டுகள் பணியாற்றினார். அவர் தனது தந்தை ஜேஆர்டி டாடாவின் பங்களாவில் வசிக்க மறுத்துவிட்டார். மாறாக, கொலாபாவில் ஒரு சாதாரண இரண்டு அறைகள் கொண்ட பிளாட்டில் ரத்தன் டாடா வசித்து வந்தார். இங்கு வசிக்கும் போது அவர் மிகவும் விலையுயர்ந்த பொருள் போஸ் இசை கருவி. அந்த குடியிருப்பில் தேவையான பொருட்கள் மட்டுமே இருந்தன. ஆடம்பரங்களுக்கும், ஷோ பீஸுகளுக்கும் இடம் கொடுக்கவில்லை என்று கூறியுள்ளார்.
அதேபோல், டாடாவின் கீழ் தாஜ் ஹோட்டலில் தங்கியிருந்தபோதும், அவர் தனது சொந்த செலவுகள் உட்பட பில் செலுத்தி வந்துள்ளார். ரத்தன் டாடா ஒரு பெரிய வணிக சாம்ராஜ்யத்தின் தலைவராக இருந்தாலும் மினிமலிசத்தை வலியுறுத்தும் வாழ்க்கை முறையைக் கொண்டிருந்தார். விமானப் பயணத்தின் போது சாதாரண வகுப்பில் பயணம் செய்தார். டாடாவும் தனது சாமான்களை சொந்தமாக எடுத்துச் சென்றவர். இதற்கு மத்திய அமைச்சர் நிதின் கட்கரியே சாட்சி என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
ஒருமுறை அவுரங்காபாத்தில் ஒரு மருத்துவமனையைத் திறப்பதற்கு ரத்தன் டாடா அழைக்கப்பட்டார். நிதின் கட்காரி அவரை வாழ்த்தவும் அவருக்கு உதவவும் சிலரை நியமித்தார். ஆனால் ரத்தன் டாடா வாகனத்தில் இருந்து இறங்கி தனது பொருட்களை தானே எடுத்துக்கொண்டார். இது என் பொருள் நானே எடுத்து வருகிறேன் என்று அமைச்சரிடம் கூறியதாகவும் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

கிடுகிடுவென சரியும் தங்கம், வெள்ளி விலை! இது வாங்குவதற்கு சரியான நேரமா? நிபுணர்களின் அதிரடி ஆலோசனை!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

52 வார சரிவில் HDFC வங்கி பங்குகள்.. ஓரேயொரு நபர் செய்த வேலையால்.. ரூ.1 லட்சம் கோடி காலி..!!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த ஷாக்.. கண் கெட்ட பின் சூரிய நமஸ்காரமா..? தங்கம் விலையில் Big Jump வரபோகுது..!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

டிரம்ப் அடித்த அந்தர் பல்டி.. ஈரான் மீதான தடை நீக்கம்.. எல்லாம் தலைகீழாக மாறுதே..!!



Click it and Unblock the Notifications