டாடா குழுமத்தின் எமரீட்டிஸ் தலைவரும் சர்வதேச வணிக ஜாம்பவானான ரத்தன் டாடா கடந்த அக்டோபரில் மருத்துவமனையில் காலமானார். ரத்தன் டாடா கடைசி வரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் அவருக்கு நேரடி வாரிசுகள் யாரும் கிடையாது. இதனால் அவரது சொத்துக்கள் யாருக்கு செல்லும் என்ற கேள்வி எழுந்தது. ஆனால் ரத்தன் டாடா அந்த கேள்விளுக்கு எல்லாம் தனது உயிலை பதிலாக விட்டு சென்றுள்ளார்.
ரத்தன் டாடா தனது மறைவுக்கு பின் தனது சொத்துக்கள் யார் யாருக்கு செல்ல வேண்டும் என்பது குறித்து தெளிவாக உயில் எழுதி வைத்துள்ளார். அந்த உயிலில் 2022 பிப்ரவரி 23 என தேதியிடப்பட்டுள்ளது எனவே ரத்தன் டாடா அவர் இறப்பதற்கு இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பே உயில் எழுதியுள்ளார்

உயில் உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு சுமார் ரூ.3,800 கோடி என கூறப்படுகிறது. ரத்தன் டாடா தனது சொத்தின் பெரும்பகுதியை தொண்டு நிறுவனங்களுக்கு விட்டு சென்றுள்ளார்.
ரத்தன் டாடாவின் மற்ற நிதி சொத்துகளில் மூன்றில் ஒரு பங்கினை, வங்கி டெபாசிட், முதலீடுகள் மற்றும் கடிகாரங்கள் மற்றும் ஓவியங்கள் போன்ற மதிப்புமிக்க பொருட்கள் உள்பட ரூ.800 கோடி மதிப்பிலான சொத்துக்கள் அவரது ஒன்று விட்ட சகோதரிகளான ஷிரீன் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோருக்கு கிடைக்கும். மற்றொரு மூன்றில் ஒரு பங்கு டாடா குழுமத்தின் முன்னாள் ஊழியரும் அவரது நெருங்கிய கூட்டாளியுமான மோகினி எம் தத்தாவுக்கு செல்கிறது.
ரத்தன் டாடாவின் ஒரே சகோதரரான 82 வயதான ஜிம்மி நேவல் டாடா, ஜூஹூ வீட்டின் ஒரு பகுதியை பெறுவார். அவரது நெருங்கிய தோழி மெஹ்லி மிஸ்திரி அலிபாக் சொத்தையும், 25 போர் பிஸ்டல் உள்பட டாடாவின் 3 துப்பாக்கிகளையும் பெறுவார். ஆனால் அவர்களுக்கு ரத்தன் டாடாவின் சொத்துக்கள் உடனடியாக கிடைக்காது. சில சட்ட நடைமுறைகள் நிறைவு செய்த பிறகே உயிலின்படி சொத்து அனைவருக்கும் கிடைக்கும்.
பொதுவாக ஒருவர் எழுதிய உயிலை அவரது மறைவுக்கு பிறகு, உடனடியாக செயல்படுத்த முடியாது. முதலில் உயிலை நிறைவேற்றுபவர்கள் அந்த உயிலின் உண்மைத்தன்மை நீதிமன்றத்தில் நிரூபிக்க வேண்டும். அதற்காக அவர்கள் நீதிமன்றத்தில மனுதாக்கல் செய்ய வேண்டும்.
நீதிமன்றம் இறந்த நபரின் உயிலை சரிபார்த்து, அதன் நம்பகத்தன்மையை உறுதி செய்து, உயிலின் அறிவுறுத்தல்களின்படி சொத்தை நிர்வகிக்கவும், விநியோகிக்கவும் அதிகாரத்தை நிறைவேற்றுபவருக்கு வழங்குகிறது.
ரத்தன் டாடா தனது உயிலை நிறைவேற்றும் பொறுப்பை வழக்கறிஞர் டேரியல் கம்பாடா, அவரது நெருங்கிய தோழி மெஹ்லி மிஸ்திரி மற்றும் அவரது ஒன்றுவிட்ட சகோதரிகள் ஷிரின் மற்றும் டீனா ஜெஜீபாய் ஆகியோரிடம் பொறுப்பை ஒப்படைத்தார்.
இதனால் உயிலை நிறைவேற்றுபவர்கள் டாடாவின் உயிலின் உண்மைதன்மையை நிரூபிப்பதற்காக மும்பை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த சட்டமுறை நிறைவடைய சுமார் 6 மாதங்கள் வரை ஆகலாம் என கூறப்படுகிறது.
எனவே அதன் பிறகுதான் உயிலின்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு சொத்துக்கள கிடைக்கும். உயில் உள்ள சொத்துக்களை தவிர்த்து, டாடாவின் 11 கார்கள், 65 கைக்கடிகாரங்கள், 21 கடிகாரங்கள் மற்றும் 52 பேனாக்கள் ஆகியவற்றின் மதிப்பு மட்டுமே ரூ.12 கோடியாம்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications