டாடா குழுமத்தின் முக்கிய அங்கமாக இருந்த ரத்தன் டாடா காலமாகியுள்ளார். டாடா குழுமத்தின் வளர்ச்சிக்கு பெரும் உதவியாக இருந்தவர் இவர். இந்தியாவின் மிகப்பெரிய வர்த்தக சாம்ராஜ்யமான டாட்டா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவரான இவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது இந்த மண்ணை விட்டு மறைந்துள்ளார். இவருடைய மறைவு செய்தி பலருக்கும் கவலை அளிக்கும் விஷயமாக உள்ளது.
வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக கடந்த திங்கட்கிழமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் புதன்கிழமையான இன்று அவர் நம்மை விட்டு மறைந்தார். ரத்தன் டாடா தனது தனிப்பட்ட வாழ்க்கையிலும் சில பிரச்சனைகளை எதிர்கொண்டவர். அவருடைய வணிக வாழ்க்கையை குறித்த பல்வேறு பதிவுகளை பார்த்தோம். இந்தப் பதிவில் அவருடைய தனிப்பட்ட வாழ்க்கை, ரத்தன் டாட்டா ஏன் திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்? என்ற விவரங்கள் குறித்து பார்ப்போம்.

அமெரிக்காவில் படித்த ரத்தன் டாடா அங்கேயே ஒரு பெண்ணை விரும்பியுள்ளார். தன்னை வளர்த்த பாட்டிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் அவர் இந்தியாவுக்கு வரவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்தப் பெண்ணையும் இந்தியாவிற்கு வர அழைத்துள்ளார். ஆனால் அந்த சமயத்தில் இந்தியா மீது சீனா போர் தொடுத்தது. இதை அமெரிக்க ஊடகங்கள் பெரிய போராக சித்தரித்து செய்திகளை வெளியிட்டனர்.
இதனால் பயந்து போன அமெரிக்கா பெண் ரத்தனை திருமணம் செய்து மறுத்துவிட்டார். அமெரிக்காவில் உள்ள ஒருவரை திருமணம் செய்து கொண்டு அங்கேயே செட்டில் ஆகியுள்ளார். முதல் காதல் இப்படி தான் தோல்வியில் முடிந்தது.
ரத்தன் டாட்டாவுக்கு பிரபல பாலிவுட் நடிகை சிமி கரேவாலுடன் காதல் ஏற்பட்டது. சிமி மற்றும் ரத்தன் டாட்டா இருவரும் ஆழமான அன்பைக் கொண்டிருந்தாலும் அவர்களுடைய உறவும் திருமணத்தில் சென்று முடியவில்லை.
சிமி கரேவால் மற்றும் அவரது காதல் வாழ்க்கை: சிமி கரேவால், அவரது கருணை, வசீகரம் ஆகியவற்றுக்கு பெயர் பெற்றவர். ஒரு நடிகை மற்றும் தொலைக்காட்சி தொகுப்பாளராக, அவர் இந்தியாவில் பிரபலமாக இருந்தவர். மேரா நாம் ஜோக்கர் மற்றும் கார்ஸ் போன்ற படங்களில் வெற்றிகரமாக நடித்திருப்பார் சிமி.
ஜாம்நகரின் மஹாராஜா சத்ருசல்யாசின்ஜியுடன் அவரது முதல் தீவிர உறவு இருந்தது. இது அவருக்கு 17 வயதாக இருந்தபோது தொடங்கியது. அனால் அந்த உறவு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு முடிவுக்கு வந்தது. அதன் பிறகு சிமி திருமணம் செய்து கொள்ளவில்லை. பல ஆண்டுகளாக, அவரது தனிப்பட்ட வாழ்க்கையைப் பற்றி பல வதந்திகள் வந்தன.
பிறகு இந்தியாவின் மிகவும் பிரபலமான கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான மன்சூர் அலி கான் பட்டோடியுடன் சிமி காதல் கொண்டார். ஆனால் மன்சூர் அலி கான் பட்டோடி நடிகை ஷர்மிளா தாகூரை சந்தித்த பிறகு அவர்கள் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். இந்த உறவு முடிவுக்கு வந்த போதிலும், சிமி பொது மக்கள் பார்வையில் தனது கண்ணியத்தையும் அமைதியையும் தக்க வைத்துக் கொண்டார்.
அதன் பின்னர் ரத்தன் டாடாவும் சிமியும் காதலில் ஈடுபட்டனர். இருந்தாலும் அந்த காதலும் திருமணத்தில் சென்று முடியவில்லை. இருவரும் தங்களின் தனிப்பட்ட பிரச்சனைகளின் காரணமாக பிரிந்தனர். அதன் பிறகு 1970-ஆம் ஆண்டு டெல்லியின் சுன்னமால் குடும்பத்தைச் சேர்ந்த ரவி மோகனை மணந்தார். ஆனால் அந்த திருமணமும் ஒன்பது ஆண்டுகளுக்கு மேல் நீடிக்க வில்லை. 1979 ஆம் ஆண்டில் அவர்கள் விவாகரத்து செய்தனர்.
ஏன் திருமணம் செய்து கொள்ளவில்லை என்று ரத்தன் டாடாவிடம் கேட்டபோது.. நான்கு முறை திருமணம் செய்யும் நிலைக்கு சென்று கடைசியில் அவை நின்று போனது. எனக்கு மொத்தம் நான்கு காதல் தோல்விகள் உள்ளது என்று சிரித்துக் கொண்டே வெளிப்படையாக கூறினார் ரத்தன் டாட்டா. இதனால் தளர்ந்து போகாமல் முன்னேற்றத்தை மட்டுமே மூச்சை கொண்டு இவ்வளவு பெரிய சாம்ராஜ்யத்தை கட்டி எழுப்பியுள்ளார்.
More From GoodReturns

அட்சய திருதியை நாளில் தங்கம் விலை எப்படி இருக்கும்? நகை வாங்குவோர் கவனிக்க வேண்டியது என்ன?

TCS ஊழியர்களுக்கு ஜாக்பாட்! IT லே ஆப் மத்தியில் சம்பளம் எகிறப்போகுது..செம ஹாப்பி தான்!

அமெரிக்காவின் தாக்குதலால் முகம் சிதைந்து போன கமேனியின் மகன்!! வெளியானது அதிர்ச்சி தகவல்!!

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம் வாங்க இது நல்ல நேரமா? திங்கட்கிழமை அதிரப்போகும் விலை! நிபுணர்கள் சொல்லும் முக்கிய விஷயம்?

ஈரான் நிபந்தனைகளை குப்பையில் எறிந்த டிரம்ப்!! போர் நிறுத்தத்தில் திடீர் திருப்பம்!!

காருண்யா KR-749 முடிவுகள் வெளியானது : ரூ.1 கோடி வென்றது யார்?

அம்பானி ஏன் இவ்வளவு சம்பாதிக்கிறார் தெரியுமா? ரகசியத்தைஉடைத்த மம்மூட்டி! மெகா ஸ்டாரின் கமெண்ட்!

ரூ.10 கோடியை ரூ.100 கோடியாக மாற்றிய நடிகை மீனா..!! செம ஐடியாவா இருக்கே..!!

தங்கம் விலை $6,000-ஆ? அடுத்த வருஷம் இன்னும் மோசமா இருக்குமா? சாக்ஸோ வங்கி கொடுத்த ஷாக் ரிப்போர்ட்!

போனது போகட்டும்!! நாளை தமிழ் புத்தாண்டு நாளில் இதை எல்லாம் தொடங்குங்க வாழ்க்கை செமயா மாறும்!!



Click it and Unblock the Notifications