சென்னை: தமிழ்நாட்டை சேர்ந்த இலட்சக்கணக்கான மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் கிடைப்பதற்கான முக்கிய ஆவணமாக பயன்படுத்தப்படுகிறது ரேஷன் கார்டு. மானிய விலையிலும் இலவசமாகவும் பொருட்களை வாங்கிக் கொள்ளவும், மகளிர் உரிமைத் தொகை, பொங்கல் பரிசு தொகுப்பு உள்ளிட்ட பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்கும் ரேஷன் கார்டு தான் மிக அடிப்படையான ஒரு ஆதாரமாக பயன்படுத்தப்படுகிறது .
பொது விநியோகத் திட்டத்தின் ஒவ்வொரு மாதமும் தமிழ்நாடு முழுவதும் ஒவ்வொரு வட்டத்திலும் மக்கள் குறை தீர்ப்பு முகாம் நடத்தப்படுகிறது . அதன்படி டிசம்பர் மாதத்திற்கான மாதாந்திர பொது விநியோக திட்ட மக்கள் குறை தீர்ப்பு முகாம் நாளை நடக்க இருக்கிறது . எனவே பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட வட்ட அலுவலகங்களுக்கு சென்று தங்களுடைய ரேஷன் அட்டைகளில் திருத்தம் மேற்கொள்ளலாம்.

சென்னையை பொருத்தவரை சென்னையில் உள்ள உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறையின் 19 மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களிலும் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை இந்த குறை தீர்ப்பு கூட்டம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது . ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, முகவரி மாற்றம் ,கைபேசி எண் அல்லது பதிவு மாற்றம் உள்ளிட்ட பொது விநியோகத் திட்டம் தொடர்பான அனைத்து சேவைகளையும் இந்த முகாமில் பெற்றுக் கொள்ளலாம் .
இது தவிர ரேஷன் கடைக்கு நேரடியாக சென்று பொருள் பெற முடியாத நபர்களுக்கான அங்கீகார சான்று இந்த குறை தீர்ப்பு முகாம்களில் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தங்களுக்கு பொது விநியோகத் திட்டத்தில் ஏதேனும் குறைபாடுகள் இருந்தால் அவற்றையும் இந்த முகாம்கள் வாயிலாக தெரிவிக்கலாம் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. சென்னை போலவே திருவள்ளூர் , சேலம், திருச்சி உட்பட அனைத்து மாவட்டங்களிலும் ரேஷன் அட்டைதாரர்களுக்கான குறை தீர்ப்பு முகாம் நாளைய தினம் நடைபெற இருக்கிறது.
தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்படக்கூடிய முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதய அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் நபர்கள் கேஒய்சி அப்டேட் செய்து கொள்வது கட்டாயம் என்பதால் மக்கள் இந்த குறை தீர்ப்பு முகாம்களில் அவற்றையும் முடித்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள்.
ரேஷன் கார்டு திருத்தங்கள் என்பது வழக்கமான நாட்களில் மேற்கொள்ள நாம் வேலைக்கு லீவு போட்டு செல்ல வேண்டும் ஒரே நாளில் வேலை முடியுமா என்றால் சந்தேகம் தான். ஆனால் இந்த முகாமிற்கு சென்றால் ஒரே நாளிலேயே வேலை முடிந்துவிடும். ஒவ்வொரு மாதமும் 2ஆவது சனிக்கிழமைகளில் இந்த முகாம்கள் நடத்தப்படுகின்றன.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!



Click it and Unblock the Notifications