நாடு முழுவதும் கோடி கணக்கான மக்களுக்கு முக்கிய உணவு ஆதாரமாக ரேஷன் கடைகளில் கிடைக்க கூடிய பொருட்கள் தான் இருக்கின்றன. மத்திய, மாநில அரசுகள் சார்பாக ரேஷன் கடைகள் மூலம் இலவசமாகவும் மானிய விலையிலும் அரிசி, கோதுமை, பருப்பு, சமையல் எண்ணெய் உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமை தொகை, பொங்கல் பரிசு தொகை ஆகியவை கிடைப்பதற்கு ரேஷன் அட்டைகள் தான் முக்கிய ஆதாரமாக இருக்கின்றன. ஏழை, எளிய மக்களுக்கு சென்று சேர வேண்டும் என்பதற்காக தான் ரேஷனில் மானிய விலையிலும் இலவசமாகவும் அரிசி, கோதுமை போன்றவை வழங்கப்படுகின்றன. ஆனால் சிலர் வசதி இருந்தும் இவற்றை வாங்கி சென்று விலைக்கு விற்பதாக தொடர்ந்து புகார்கள் வந்த வண்ணம் இருக்கின்றன.

இதனை அடுத்து தான் மத்திய அரசு ரேஷன் அட்டை மூலம் கிடைக்கும் மானிய விலை பொருட்கள் பொருத்தமான பயனாளிகளுக்கு சென்று சேர என்பதில் கவனமாக இருக்கிறது. இதற்காக தான் ரேஷன் அட்டைகளில் கேஒய்சி நடைமுறை என்பதை கட்டாயமாக்கியுள்ளது. இதன் படி ஒவ்வொரு ரேஷன் கார்டிலும் உள்ள உறுப்பினர்கள் விவரங்கள் சரிபார்க்கப்படும். அதன் அடிப்படையில் அந்த அட்டை மானிய விலை பொருட்கள்ன் பெற தகுதி பெற்றதா இல்லையா என்பதை முடிவு செய்வார்கள்.
இந்த சூழலில் பிப்ரவரி 28ஆம் தேதிக்குள் கேஒய்சி பணிகளை ரேஷன் அட்டைதாரர்கள் முடிக்க வேண்டும் என தகவல் வெளியாகியிருக்கிறது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளியாகவில்லை என்றாலும் ரேஷன் கடைகள் வாயிலாக பயனாளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு வருகிறது. எனவே கேஒய்சி பணிகள் நிலுவையில் இருந்தால் உடனே உங்கள் ரேஷன் கடைக்கு சென்று கேஒய்சி முடித்து கொள்ளுங்கள். இல்லை என்றால் ரேஷன் பொருட்கள் மற்றும் ரேஷன் கார்டு மூலம் கிடைக்கக்கூடிய பல்வேறு சலுகைகள் நிறுத்தப்படுவதற்கு வாய்ப்பு உள்ளது.
பொதுமக்கள் தங்களுக்கு உட்பட்ட ரேஷன் கடைக்கு சென்று தங்களுடைய ரேஷன் அட்டையை காண்பித்தால் அதற்கு கேஒய்சி நிலுவையில் இருக்கிறதா இல்லையா என்பதை ரேஷன் கடை ஊழியர்கள் சொல்லி விடுவார்கள். அப்படி நிலுவையில் இருந்தால் நாளை மறுநாளுக்குள் முடித்து கொள்வது நல்லது.
நீங்கள் இந்த மாதம் ரேஷன் கடையில் பொருள் வாங்கும் போதே உங்களுடைய அட்டையில் kyc முடிக்க வேண்டுமா இல்லையா என்பதை சொல்லி இருப்பார்கள். அவ்வாறு கூறியிருந்தால் அதனை வரும் 28ஆம் தேதிக்குள் முடித்துக் கொள்ளுங்கள். இல்லை இந்த மாதம் நான் ரேஷனுக்கே செல்லவில்லை என்பவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்குள் உங்கள் ரேஷன் கடைக்கு சென்று கேஒய்சி நிலவையில் இருக்கிறதா என்பதை கேட்டுக் கொள்ளுங்கள்.இந்த கேஒய்சி பணிகளை முடிக்கவில்லை என்றால் வரும் ஏப்ரல் முதல் உங்களின் ரேஷன் கார்டுகளில் மானிய விலை பருப்பு, கோதுமை மற்றும் இலவச அரிசி ஆகியவை கிடைக்காமல் போகலாம்.


Click it and Unblock the Notifications