இந்திய சர்வதேச பொருளாதார உறவுகள் ஆராய்ச்சி கவுன்சில் (ICRIER) சமீபத்தில் நடத்திய ஆய்வின்படி, இந்தியாவின் பொது விநியோக திட்டத்தில் (PDS) அதாவது ரேஷன் கடைகள் வாயிலாக விநியோகிக்கப்படும் அரசி, பருப்பு போன்ற அத்தியாவசியமான பொருட்களில் மிகப்பெரிய லீக்கேஜ் ஏற்பட்டு உள்ளதாக கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது.
அதாவது அரசு அளிக்கும் அத்தியாவசியமான பொருட்களுக்கும், ரேஷன் கடைகள் மூலம் மக்களுக்கு விநியோகிக்கும் பொருட்களுக்கும் மத்தியில் அதிகப்படியான இழப்பு ஏற்பட்டு உள்ளதாக கண்டறியப்பட்டு உள்ளது.

அரசு திட்டங்களின் கீழ் அளிக்கப்படும் அரிசி மற்றும் கோதுமை தானியங்களில் வருடத்திற்கு சுமார் 20 மில்லியன் டன் உணவு பொருட்கள் 814 மில்லியன் பயனாளிகளுக்கு வழங்கப்படாமல் கள்ள சந்தைக்கு திருப்பி விடப்படுகின்றன அல்லது வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு இருக்கலாம் என கூறப்பட்டு உள்ளது. இந்த 20 மில்லியன் டன் அரிசி மற்றும் கோதுமை என்பது ஒரு வருடத்திற்கு ரேஷன் கடைகள் மூலம் விநியோகிக்கப்படும் மொத்த தாணியத்தில் 28 சதவீதமாகும்.
இந்த அதிர்ச்சி அளிக்கும் அளவிலான தாணியங்களின் மூலம் இந்திய பொருளாதாத்தில் சமார் ரூ.69,000 கோடிக்கும் அதிகமான இழப்பை ஏற்படுத்துகிறது. ரீடைல் சந்தைக்கு திருப்பி விடப்பட்ட தானியங்கள் அதிக விலக்கு விற்கப்படுகிறது அல்லது ஏற்றுமதி செய்யப்படுகிறது என ICRIER அமைப்பின் ஆய்வுகள் கூறுகிறது.
இதனால் பல கோடி மக்களுக்கு கிடைக்க வேண்டிய அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கப்படாமல் போயுள்ளது. அசோக் குலாடியால், ராயா தாஸ் மற்றும் ரஞ்சனா ராய் ஆகியோரால் செய்யப்பட்ட ICRIER ஆய்வு, வீட்டுப் பயன்பாட்டு செலவு கணக்கெடுப்பு (HCES) மற்றும் இந்திய உணவு கழகத்தின் (FCI) மாதாந்திர தரவுகள் வைத்து இதை ஆய்வு செய்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் PDS இல் முன்னேற்றங்கள் இருந்தபோதிலும், குறிப்பிடத்தக்க அளவிலான தாணியங்கள் கள்ள சந்தைக்கு சென்றுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
2016 ஆம் ஆண்டில் நாட்டின் அனைத்து ரேஷன் கடைகளிலும POS இயந்திரங்களை அறிமுகப்படுத்தியது மூலம் தாணியங்கள் கள்ள சந்தைக்கு செல்வது குறைக்கப்பட்டு உள்ளது. ஆனாலும் அருணாச்சல பிரதேசம், நாகாலாந்து மற்றும் குஜராத் போன்ற மாநிலங்களில் அதிகப்படியான தாணியங்கள் கள்ள சந்தைக்கு செல்வது கண்டுப்பிடிக்கப்பட்டு உள்ளது. மேலும் வடகிழக்கு மாநிலங்களில் ரேஷன் கடைகளில் இன்னும் டிஜிட்டல் உள்கட்டமைப்புகள் கொண்டுவரப்படாத காரணத்தால் பல சவால்களை எதிர்கொள்கின்றன.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications