உச்சத்தில் தங்கம் விலை.. சீக்கிரம் நிறைய தங்கம் வாங்குங்க.. அட்வைஸ் கொடுத்த ரே டாலியோ.!!

தங்கம் என்பது செல்வத்தின் அடையாளமாகவும், பாதுகாப்பான முதலீட்டின் புகலிடமாகவும் இருந்து வருகிறது. உலகெங்கிலும் உள்ள முதலீட்டாளர்கள் மற்றும் மத்திய வங்கிகள் கூட பொருளாதார நெருக்கடிகள், பணவீக்கம் மற்றும் சந்தை நிச்சயமற்ற காலங்களில் தங்கள் சொத்துக்களைப் பாதுகாக்க தங்கத்தையே நம்பியுள்ளனர்.

நாணயத்தின் மதிப்பு குறையும்போதும், பங்குச் சந்தைகள் வீழ்ச்சியடையும்போதும், தங்கம் பெரும்பாலும் எதிர்த் திசையில் நகர்ந்து, முதலீட்டின் மதிப்பை நிலைநிறுத்த உதவுகிறது. அதேபோல், தங்கத்தில் முதலீடு செய்வதற்கு தற்போது பல வழிகள் உள்ளன. தங்கப் பத்திரங்கள், தங்க இடிஎஃப், டிஜிட்டல் தங்கம் என பல்வேறு வடிவங்களில் முதலீடு செய்யலாம்.

உச்சத்தில் தங்கம் விலை.. சீக்கிரம் நிறைய தங்கம் வாங்குங்க.. அட்வைஸ் கொடுத்த ரே டாலியோ.!!

இந்நிலையில் முதலீட்டாளரும், உலகின் மிகப்பெரிய ஹெட்ஜ் நிதி நிறுவனங்களில் ஒன்றான பிரிட்ஜ்வாட்டர் அசோசியேட்ஸ் நிறுவனத்தின் நிறுவனருமான ரே டாலியோ, முதலீட்டாளர்கள் தங்களின் மொத்த முதலீட்டில் வழக்கத்தை விட அதிக பங்கை தங்கத்தில் வைத்திருக்க வேண்டும் என்று பரிந்துரை செய்திருக்கிறார். தற்போதைய பொருளாதார சூழல் 1970-களின் ஆரம்பக் காலத்துடன் ஒத்துப்போவதாகவும் அவர் கூறியிருக்கிறார்.

சமீபத்தில் நடந்த க்ரீன்விச் பொருளாதார மன்றத்தில் பேசிய ரே டாலியோ, "முதலீட்டு போர்ட்ஃபோலியோவில் (Portfolio) 15% வரை தங்கத்தில் முதலீடு செய்யலாம். ஏனென்றால், வழக்கமான முதலீடுகள் வீழ்ச்சியடையும்போது, மிகச் சிறப்பாக செயல்பட்டு வரும் ஒரே சொத்து தங்கம் மட்டும் தான்" என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது 4,005.80 டாலருக்கு வர்த்தகமான தங்கத்தின் எதிர்கால ஒப்பந்தங்கள், இந்த ஆண்டு மட்டும் 50% மேல் உயர்ந்துள்ளது. அரசின் நிதிப் பற்றாக்குறை அதிகரிப்பு மற்றும் உலகளாவிய நிச்சயமற்ற தன்மை தான் இந்த உயர்வுக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது.

தொடர்ந்து பேசிய அவர், "தற்போதைய சந்தை நிலைமைகளை 1970களின் ஆரம்ப காலத்துடன் ஒப்பிட்டு பேசிய டாலியோ, அந்த காலகட்டத்தில் பணவீக்கம், அதிக அரசாங்க செலவுகள் மற்றும் பெரும் கடன் சுமை ஆகியவை ஃபியட் நாணயங்கள் மற்றும் வழக்கமான சொத்துக்கள் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்தியதாகவும், இது 70-களின் ஆரம்பத்தைப் போலவே இருப்பதாகவும் கூறியுள்ளார்.

பொதுவாக, முதலீட்டு ஆலோசனைகள் 60% பங்குகள் மற்றும் 40% பத்திரங்கள் என்ற விகித அளவில் பரிந்துரை செய்யப்படுகின்றன. தங்கம் போன்ற மாற்று சொத்துக்கள் வருமானம் ஈட்டாததால், அவை மிக சிறிய பங்காகவே முன்பு ஒதுக்கப்பட்டன. ஆனால், தற்போது டாலியோவின் இந்த வழிகாட்டுதல், முற்றிலும் மாறியுள்ளன.

அவர் கூறுகையில், தங்கம் மட்டுமே ஒருவர் வைத்திருக்கக்கூடிய சொத்து, அதற்குப் பணம் செலுத்த வேறு யாரையும் நீங்கள் சார்ந்து இருக்க வேண்டி தேவையில்லை என்று கூறினார். மேலும், பணத்தின் மதிப்பு குறைவதற்கும், புவிசார் அரசியல் அபாயங்களுக்கும் எதிரான ஒரு பாதுகாப்பு கவசமாக தங்கம் இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சமீபத்தில், அமெரிக்க அரசாங்க முடக்கம் மற்றும் தொழில்நுட்ப பங்குகளின் வீழ்ச்சி ஆகியவை மாற்று சேமிப்புக்கான தேவையை அதிகரித்திருக்கின்றன. இதனால், தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு 4,000 டாலருக்கு கீழ் இறங்கியது. தங்கக்கட்டி விலை 3,992.27 டாலர் வரை உயர்ந்த நிலையில், டிசம்பர் மாத எதிர்கால ஒப்பந்தங்கள் நியூயார்க்கில் முதல் முறையாக 4,000 டாலரை தாண்டியது குறிப்பிடத்தக்கது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+