ஆர்பிஐ கடந்த பிப்ரவரி மாதத்தில் 3 டன்கள் தங்கத்தினை வாங்கி, தனது மொத்த இருப்பினை 790.2 டன்களாக அதிகரித்துள்ளதாக உலக தங்க கவுன்சில் அறிவித்துள்ளது.
2022ம் ஆண்டின் முதல் காலாண்டில் தங்கத்தின் இருப்பானது 760.42 டன்னாக இருந்தது. இதே இரண்டாவது காலாண்டில் 767.89 டன்னாக இருந்தது. மூன்றாவது காலாண்டில் 785.35 டன்னாக இருந்தது. இதே கடைசி காலாண்டில் 787.40 டன்னாக இருந்தது.

தொடர்ந்து மத்திய வங்கிகளின் தங்க இருப்பினை உலக தங்க கவுன்சில் கண்கானித்து வருகின்றது. மத்திய வங்கிகளின் இருப்பில் தங்கம் என்பது எப்போதும் முக்கிய பங்கு வகிக்கிறது. தொடர்ந்து மத்திய வங்கியானது எப்போதும் கணிசமான தங்கத்தினை இருப்பாகவும் வைத்துள்ளது.
தொடர்ந்து சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது அவுன்ஸூக்கு மேலாக காணப்படுகின்றது. இது 1 வருட உச்சத்தில் இருந்து வருகின்றது. இது டாலரின் மதிப்பானது சரிவினைக் எட்டியுள்ள நிலையில், தங்கத்தினை குறைந்த விலையில் வாங்க முதலீட்டாளர்களுக்கு நல்ல வாய்ப்பாக பார்க்கப்படுகிறது.
இதற்கிடையில் தங்கம் விலையானது தொடர்ந்து ஏற்றம் கண்டு வருகின்றது. இந்திய ரூபாயின் மதிப்பானது தொடர்ந்து அழுத்தத்தில் காணப்படும் நிலையில், இதுவும் தங்கத்தின் ஆதரவாக அமையலாம். இது உள்நாட்டு சந்தையில் 7% மேலாக ஏற்றம் கண்டுள்ளது.
தொடர்ந்து பொருளாதாரமும் மந்த நிலையில் காணப்படும் நிலையில், இது மேற்கொண்டு தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது. இதற்கிடையிலும் மத்திய வங்கியானது தொடர்ந்து வட்டி விகிதத்தினை அதிகரிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மேற்கொண்டு பொருளாதார வளர்ச்சியில் தாக்கத்தினை ஏற்படுத்தலாம்.

பொதுவாக ஒரு நாடு தங்கத்தை முக்கியமாக சேர்த்து வைக்கக் காரணம், ஒருவேளை நாட்டின் பணவீக்கம் அதிகளவுக்கு உயர்ந்தால், எப்போதும் ஒரு குறிப்பிட்ட மதிப்புக்கு மேல் நிலையாக உள்ள தங்கத்தை கொடுத்து அதை பணமாக மாற்றி பணவீக்கத்தை சரி செய்து கொள்ளலாம். இப்படி நெருக்கடியான சூழலில், பெரும்பாலும் எதிர்காலத்தில் ஏற்படப்போகும் எதிர்பாராத செலவினங்களுக்காக தங்கத்தை முன்கூட்டியே சேமித்து வைத்துக் கொள்ளும். தேவைப்படும்போது அதைப் பணமாக மாற்றி செலவு செய்யும்.
இந்த தங்க சேமிப்பானது ஒவ்வொரு நாடுகளின் பொருளாதார, வரவு செலவுகளைப் பொறுத்து அமையும்.


Click it and Unblock the Notifications