சென்னை: 2024ஆம் ஆண்டின், ஜனவரி முதல் ஏப்ரல் மாதம் வரையிலான காலக்கட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) 24 டன் தங்கத்தை வாங்கி சேர்த்துள்ளது. தங்கம் புவிசார் அரசியல் பதட்டங்களுக்கு மத்தியில், சந்தை ஏற்ற இறக்கத்திற்கு மத்தியிலும் ஒரு பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுவதால், ரிசர்வ் வங்கி இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. ரிசர்வ் வங்கியின் தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டு முழுவதும் சேர்க்கப்பட்ட 16 மொத்த டன்களை விட Q 1 காலாண்டில் சேர்க்கப்பட்ட தங்கத்தின் அளவு அதிகமாகும்.
எக்கனாமிக் டைம்ஸ் தரவுகளின் படி ஏப்ரல் 26, 2024 அன்று ரிசர்வ் வங்கி 827.69 டன் தங்கத்தை வைத்திருந்தது. இது டிசம்பர் இறுதியில் 83.6 டன்களில் இருந்து அதிகரித்துள்ளது. 2023ஆம் ஆண்டு மொத்தத்தில் சேர்க்கப்பட்ட தங்கத்தின் அளவைவிட, 2024ஆம் ஆண்டின் ஜனவரி முதல் ஏப்ரல் மாதங்களில் சேர்க்கப்பட்ட தங்கத்தின் அளவு 1.5 மடங்காக அதிகரித்துள்ளது.

இந்தியாவில் பார்க்கும்போது, இந்தியக் குடும்பங்கள் தங்கத்தின் முக்கிய நுகர்வோராக இருக்கிறது. 1991 ஆம் ஆண்டில், ஆர்பிஐ அந்நிய செலவாணி நெருக்கடியின் போது தங்க கையிருப்பின் ஒரு பகுதியை அடமானம் வைத்தது. அப்போது பல பேரின் விமர்சனங்களுக்கு உள்ளானது. அதனால் அதன் பிறகு 2017 ஆம் ஆண்டு முதல் தங்கத்தை அதிக அளவில் வாங்கி வருகிறது.
அந்த வகையில் ஆர்பிஐ கையிருப்பில் உள்ள தங்கத்தின் இருப்பு டிசம்பர் 2023 இறுதியில் 7.7 சதவீதத்திலிருந்து, ஏப்ரல் 2024க்குள் ஏறக்குறைய 8.7 சதவீதமாக உயர்ந்துள்ளது. நாணய ஏற்ற இறக்கத்திற்கு எதிராக உலகில் உள்ள மத்திய வங்கிகளைப் போலவே ரிசர்வ் வங்கியும் அதன் தங்க இருப்பை அதிகரித்து வருகிறது.
உலகளாவிய பொருளாதார நிச்சயம் அற்ற தன்மை காரணமாக மத்திய வங்கிகள் நிறைய தங்கத்தை வாங்குகின்றன. அவை 2024 ஆம் ஆண்டு முதல் காலாண்டில் மட்டும் 290 டங்களை சேர்த்துள்ளனர். இது உலகளாவிய தங்கத் தேவையில் கால் பகுதி என்று ஆர்பிஐ பொருளாதார வல்லுநர்கள் சமீபத்தில் தெரிவித்துள்ளனர்.
அதேபோல சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆப் இந்தியா (PBC) தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டில் மட்டும் மொத்தமாக மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தை விட, அதிக அளவில் PBC வங்கி வாங்கியுள்ளது. அதாவது மற்ற வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தில் கால் பகுதியை வாங்கியதாக கூறப்பட்டது. இதுபோல் உலகின் பிற மத்திய வங்கிகள் தங்கத்தின் இருப்பை, அதிகரித்து வருவதால் அதன் தேவை அதிகரித்து உள்ளது. இதுவும் தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என்று பல நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போர் நீட்டிப்பால் வரும் வாரத்தில் விலை உயருமா?

தங்கம் - வெள்ளி: ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்.. பேண்ட் சட்டை எல்லாம் ஊறிவிடுவாங்க..!

துபாயில் பொட்டி பொட்டியாக தேக்கமடைந்த தங்கம்!! இந்தியாவுக்கு கொண்டு வர முடியாமல் தவிக்கும் டீலர்கள்!!

கோயம்புத்தூரில் தங்கம் விலை திடீர் உயர்வு.. மக்களே உஷார், தங்கம் நகை வாங்கும் முன் இதை படிங்க..!

தங்கம் விலையில் திடீர் மாற்றம்! சென்னை & கோவையில் இன்றைய தங்கம், வெள்ளி விலை என்ன?

உச்சத்தில் இருந்து ரூ.18,000 வீழ்ச்சி கண்ட தங்கம்! இதுவாங்க சரியான நேரமா?

இன்று தங்கம், வெள்ளி விலை என்ன ஆனது? இனி வரும் நாட்களில் விலை ஏறுமா இறங்குமா?

தங்கம் தந்த சர்ப்பிரைஸ்!! ரூ.5000க்கு மேல் விலை குறைவு!! நகை வாங்க இதை விட்டா சான்ஸ் கிடைக்காது!!

தங்கம் விலையில் நடந்த மேஜிக்!! 2026இல் இதுவே முதல்முறை!! இனி எதிர்பாராததை எதிர்பாருங்கள்!!

Madurai Gold Rate Today: ரூ.655 சரிவு – அடுத்த பெரிய உயர்வுக்கு முன் வாங்கலாமா?

வெள்ளி விலை: கிணற்றில் போட்ட கல் போல நிற்கிறது..!! முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்..?



Click it and Unblock the Notifications