பிரபல நிதி நிறுவனமான ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் தங்கக் கடன்களை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளது. இதனால் வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
ஐஐஎஃப்எல் நிறுவனம் 25 மாநிலங்கள் மற்றும் 4 யூனியன் பிரதேசங்களில் உள்ள 2,721 நகரங்களில் அலுவலகம் அமைத்து தங்க கடன்களை வழங்கி வந்தது. இந்த சூழலில் மார்ச் 4ஆம் தேதியிட்டு ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் தங்கக் கடன்களை வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும் என கூறியுள்ளது.

புதிதாக கடன் வழங்க முடியாது: IIFL நிறுவனத்தின் தங்க கடன் போர்ட்ஃபோலியோவில் காணப்பட்ட மேற்பார்வை குறைகளை அடுத்து, இந்த முடிவினை எடுத்திருப்பதாக ரிசர்வ் வங்கி தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி சட்டம் 1934இன் கீழ் பிரிவு 45L(1)(b)இன் படி, ஐஐஎஃப்எல் நிறுவனம் தங்க கடன்களை அனுமதிப்பது அல்லது வழங்குவது அல்லது ஒதுக்குவது போன்ற நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிப்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த தடை உடனடியாக அமலுக்கு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
கட்டண அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை: இந்திய ரிசர்வ் வங்கி, ஐஐஎஃப்எல் ஃபைனான்ஸ் நிறுவனம் அனுமதிக்கப்பட்ட ரொக்க வசூலை மிஞ்சியுள்ளது என்றும், அதன் கட்டண அமைப்பில் வெளிப்படைத்தன்மை இல்லை என்றும் கண்டறியப்பட்டுள்ளது என கூறியுள்ளது.
குறைபாடுகள் தொடர்பாக நிறுவனத்தின் மூத்த மேலாண்மை அதிகாரிகள் மற்றும் ஆடிட்டர்களுடன் கடந்த சில மாதங்களாக விளக்கங்கள் கேட்கப்பட்டன, இருந்த போதிலும் நிறுவனத்தில் அதனையொட்டி எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.
பழைய கடன்களை வசூலிக்கலாம்: புதிதாக தங்க கடன் வழங்குவதற்கு மட்டுமே தடை விதிக்கப்பட்டுள்ளது என விளக்கம் தந்துள்ள ரிசர்வ் வங்கி, ஏற்கனவே வழங்கப்பட்டுள்ள தங்க கடன்களுக்கான வட்டியை பெறுவது, வசூல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் தெரிவித்துள்ளது.
நிதி நிறுவனங்கள் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு, வெளிப்படைத் தன்மையுடன் விதிகளை பின்பற்றுவதை உறுதி செய்ய இத்தகைய நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன என ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
குறைகள் சரி செய்யப்படும்: இதனிடையே ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டியுள்ள குறைபாடுகளை சரி செய்து மீண்டும் பழைய படி தங்க கடன்களை வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஐஐஎஃப்எல் நிறுவனம் தெரிவித்துள்ளது.
தங்க கடன்கள் வழங்கக் கூடாது என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பை தொடர்ந்து பங்குச்சந்தையில் ஐஐஎஃப்எல் நிறுவனத்தின் பங்கு மதிப்பு 20% வரை சரிந்துள்ளது.
இந்த நிறுவனத்தின் தங்க கடன் போர்ட்ஃபோலியோ அக்டோபர் - டிசம்பர் வரையிலான காலகட்டத்தில் 24,692 கோடி ரூபாய் என உயர்ந்தது. அதாவது ஓராண்டு காலத்தில் 35 % உயர்வு கண்டது.
Story written by: Devika
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

கோயம்புத்தூர் மக்களே தங்கம் விலை உயர்ந்தது.. இனி ஒவ்வொரு ஸ்டெப்பும் கவனம் வைக்கனும்..!

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கோயம்புத்தூரில் இன்று தங்கம் விலை உயர்வு.. ஈரான் போருக்கு மத்தியில் மாட்டிக்கொண்ட தங்க நகை சந்தை..!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

தங்கம் - வெள்ளி விலையில் கனவிலும் நினைக்காத விஷயம் நடத்திருக்கு.. 23 நாளில் நடந்த மெகா மேஜிக்..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!



Click it and Unblock the Notifications