தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வருவது பலரையும் சோகத்தில் ஆழ்த்தி வரும் வேளையில் இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது எத்தனை பேருக்குத் தெரியும்.
அதுவும் 2024 ஆம் ஆண்டில் தொடர்ந்து ஒவ்வொரு மாதமும் அதிகப்படியான தங்கத்தை வாங்கி குவித்து வருகிறது. மக்களைத் தங்கப் பத்திரத்தை வாங்கச் சொல்லிவிட்டுத் தங்கத்தை வாங்க என்ன காரணம்..?!

இந்திய ரிசர்வ் வங்கி தொடர்ந்து தனது தங்க கையிருப்பை அதிகரித்து வருவதன் மூலம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. ரிசர்வ் வங்கியின் அதிகாரப்பூர்வ தகவல் படி பிப்ரவரி மாதத்தில் மட்டும் 6 டன் தங்கம் கையிருப்பு அதிகரித்துள்ளது.
இதன் மூலம், 2024 ஆண்டு ரிசர்வ் வங்கி மொத்தம் 13 டன் தங்கத்தை வாங்கியுள்ளது, மொத்த தங்க கையிருப்பு தற்போது 817 டன்னாக உயர்ந்துள்ளது. 1 டன் என்பது 907.185 கிலோ.
இந்திய ரிசர்வ் வங்கி தனது தங்கக் கையிருப்பை அதிகரிப்பதற்கும், குறைப்பதற்குப் பல காரணங்கள் உள்ளது. இதில் முக்கியமாகப் பணப் புழக்கத்தைக் கட்டுப்படுத்த முக்கியமான சொத்துக்களில் முதலீடு செய்வதில் துவங்கி, தனது அந்நிய செலாவணி கையிருப்பை பன்முகப்படுத்துவதற்கும், நாணய மதிப்பின் ஏற்ற இறக்கங்கள் சமாளிக்கவும் மற்றும் பொருளாதார பாதிப்புகளை குறைப்பதற்கும் இந்தியா தொடர்ந்து தனது தங்க கையிருப்பை அதிகரித்து வருகிறது. இத்தகைய நடவடிக்கை இந்தியா மட்டும் அல்லாமல் உலகின் அனைத்து பொருளாதார நாடுகளும் செய்கிறது.
2024 ஆம் ஆண்டு இந்தியா போலவே பிற நாடுகளும் தங்களுடைய தங்க கையிருப்பை அதிகரித்துள்ளது. உலக தங்கக் கவுன்சில் அறிக்கையின்படி, உலகளாவிய மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்க கையிருப்பைச் சேர்த்து வருகின்றன என்றாலும், ஜனவரி மாதத்தை விட பிப்ரவரி மாதம் வாங்கப்பட்ட அளவு என்பது சற்று குறைவே.
2024 ஆம் ஆண்டில் இந்தியா, சீனா மத்திய வங்கிகள் அதிகப்படியான தங்க இருப்பை சேர்த்துள்ளது எனக் கூறப்படுகிறது. உலக தங்கக் கவுன்சிலின் EMEA (யூரோப், மத்திய கிழக்கு, ஆப்பிரிக்கா) பிரிவின் மூத்த ஆய்வாளர், கிருஷ்ண கோபால் வெளியிட்ட அறிக்கையின்படி, உலகளாவிய மத்திய வங்கிகள் பிப்ரவரி மாதத்தில் 19 டன் தங்கத்தைச் சேர்த்துள்ளன.
இது தொடர்ந்து ஒன்பதாவது மாதமாகத் தங்கக் கையிருப்பு அதிகரிப்பைக் குறிக்கிறது என்றாலும், ஜனவரி மாதத்துடன் ஒப்பிடுகையில் 58 சதவீதம் குறைவாகத் தங்கம் வாங்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.
தங்கம் என்பது நிலையான மற்றும் பாதுகாப்பான முதலீடாகக் கருதப்படுகிறது. பொருளாதார தடுமாற்றத்தின் போது தங்கம் மீது அதிகமாக முதலீடு செய்யப்படும் இது ஒரு நாடாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி இந்த பார்மூலா வொர்க்அவுட் ஆகும்.
தங்கத்தின் மதிப்பு எப்போதெல்லாம் பொருளாதார ஸ்திரமற்ற தன்மை உருவாகிறதோ, டாலர், யென், யூரோ போன்ற முக்கிய வர்த்தக நாணயங்களின் மதிப்பு குறைகிறதோ அப்போதெல்லாம் தங்கம் விலை அதிகரிக்கும் வாய்ப்பு கூடுதலாக உள்ளது.
இதன் காரணமாகவே உலகளாவிய மத்திய வங்கிகள் தங்கள் அந்நிய செலாவணி கையிருப்பை பன்முகப்படுத்துவதற்காக தங்கத்தை வாங்கி வருகின்றன. இந்திய ரிசர்வ் வங்கியும் இதே போன்ற உத்தியைக் கடைப்பிடித்து வருகிறது.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை: ஈரான் போருக்கு பின்னர் நடந்த தலைகீழ் மாற்றம்!! இனி விலை என்ன ஆகும்?

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விலை 7 வது நாளாக வீழ்ச்சி:அடுத்த இலக்கு ரூ.1 லட்சமா அல்லது இன்னும் குறையுமா?

கோவையில் இன்று தங்கம் விலை நிலவரம் என்ன? மக்கள் இன்று தங்கம் வாங்கலாமா?

நகை பிரியர்களுக்கு குட் நியூஸ்! தங்கம், வெள்ளி விலை குறித்து முக்கிய அப்டேட்? இன்றைய நிலவரம் என்ன?

இப்படியொரு சான்ஸ் இனி கிடைக்காது.. மதுரையில் இன்று ஒரு பவுன் தங்கம் விலை எண்ன..?

தங்கம் விலை தடாலடி சரிவு! சாமானியர்களுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பா? அல்லது எச்சரிக்கையா?

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

Gold & Silver Rate LIVE: தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. போனா வராது பொழுது போனால் கிடைக்காது..!



Click it and Unblock the Notifications