மக்கள் எப்படித் தங்கத்தை ஒரு சேமிப்புக் கருவியாகப் பார்க்கிறார்களோ, அதேபோல் உலக நாடுகளின் மத்திய வங்கிகள் தனது நாணய மதிப்பையும், நிதி நிலையையும் மேம்படுத்திக்கொள்ளத் தங்கத்தை முக்கிய ஆயுதமாகப் பயன்படுத்துகிறது, உபரியாக நிதி இருப்பு இருக்கும் பட்சத்தில் தங்கத்தை வாங்குவது மூலம் நாணய மதிப்பு மேம்படும். இப்படிப் பல வழிகளில் தங்கம் பயன்படுத்தப்படுகிறது.
இந்திய ரிசர்வ் வங்கி செப்டம்பர் காலாண்டில் மட்டும் ஒன்பது டன் தங்கத்தை வாங்கியுள்ளது. இந்தியாவில் பண்டிகை காலம் என்பதால் டிசம்பர் காலாண்டில் தங்கத்திற்கு அதிகமான டிமாண்ட் இருக்கும் வேளையில் ஆர்பிஐ செப்டம்பர் காலாண்டிலேயே அதிகமாக வாங்கி ரூபாய் மதிப்பின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்தியுள்ளது.

உலக நாடுகளில் இருக்கும் மத்திய வங்கிகள் செப்டம்பர் காலாண்டில் வாங்கப்பட்ட 337 டன் தங்கத்தில் இந்தியா வெறும் 9 டன்கள் மட்டுமே வாங்கியுள்ளது. ஆர்பிஐ ஒவ்வொரு காலாண்டுக்கும் குறிப்பிட்ட அளவிலான தங்கத்தை நிதி நிலைக்கு ஏற்ப வாங்கி வருகிறது. அப்போ இந்திய ரிசர்வ் வங்கியிடம் எவ்வளவு தங்கம் உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சமீபத்திய காலாண்டு தங்க கொள்முதல் மூலம் இந்தியாவின் அதிகாரப்பூர்வ தங்க கையிருப்பு செப்டம்பர் மாத இறுதியில் 806.7 டன்களாக உயர்ந்துள்ளது என வேர்ல்ட் கோல்ட் கவுன்சில் (WGC) தெரிவித்துள்ளது. மேலும் அதிகத் தங்க இருப்புக் கொண்ட நாடுகள் பட்டியலில் 10வது இடத்தில் இந்தியா உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி 2023ல் ஆண்டில் மட்டுமே இதுவரை மொத்தம் 19.3 டன் தங்கத்தைக் கொள்முதல் செய்துள்ளது. ரிசர்வ் வங்கி 2017 ஆம் ஆண்டு முதல் தங்கத்தை மொத்த கையிருப்பில் அதிகமாகச் சேர்த்து வருகிறது. 2017 முதல் ஆர்பிஐ சுமார் 248.9 டன் தங்கத்தை வாங்கியுள்ளதாக WGC தரவுகள் தெரிவிக்கின்றன.
இந்தியாவின் மொத்த அந்நிய செலாவணி கையிருப்பு செப்டம்பர் 29 நிலவரப்படி $586.9 பில்லியனாக இருந்தது, இதில் தங்கத்தின் மதிப்பு $43.7 பில்லியன் அல்லது மொத்த அந்நிய செலாவணி கையிருப்பில் 7.44% என்று அக்டோபர் 6 ஆம் தேதி RBI இன் வாராந்திர புள்ளியியல் சப்ளிமெண்ட் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications