மும்பை: தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து உள்நாட்டு குறித்த கால வைப்புகளுக்கும் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இருக்கும் என்று இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.

வங்கிகள் callable மற்றும் non-callable என இரண்டு வகையான வைப்பு நிதிகளை (பிக்சட் டெபாசிட்) வழங்குகின்றன. callable பிக்சட் டெபாசிட்டுகளில் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்பே வாடிக்கையாளர் பணத்தை திரும்ப பெற்று கொள்ளலாம். ஆனால் non-callable பிக்சட் டெபாசிட்டுகளில் முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன் பணத்தை திரும்ப பெற முடியாது. இந்நிலையில் இந்திய ரிசர்வ் வங்கி, உள்நாட்டு குறித்த கால டெபாசிட் அல்லது வங்கி பிக்சட் டெபாசிட்டை முதிர்வுக்கு முன்பே திரும்ப பெறுவதற்கான விதியை மாற்றியுள்ளது.
தற்போது வங்கிகள் ரூ.15 லட்சம் வரையிலான பிக்சட் டெபாசிகளுக்கு முதிர்வு காலத்துக்கு முன்பே திரும்ப பெறும் வசதியை வழங்குகின்றன. இப்போது இந்த தொகையை ரூ.1 கோடியாக உயர்த்தியுள்ளது. இது தொடர்பாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், மறுஆய்வில், non-callable பிக்சட் டெபாசிட்டுகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச தொகையானது ரூ.15 லட்சத்திலிருந்து ரூ.1 கோடியாக உயர்த்தலாம் என்று முடிவு செய்யப்பட்டது. உதாரணமாக, தனிநபர்களிடமிருந்து ரூ.1 கோடி அல்லது அதற்கு குறைவான தொகைக்கு ஏற்றுக் கொள்ளப்படும் அனைத்து உள்நாட்டு குறித்த கால வைப்புகளுக்கும் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இருக்கும்.
மேலும், முதிர்வு காலம் மற்றும் டெபாசிட் பணம் ஆகியவற்றின் அடிப்படையில் முன்கூட்டியே திரும்ப பெறும் வசதி இல்லாத non-callable பிக்சட் டெபாசிட்களுக்கு மாறுபட்ட வட்டி விகிதங்களை வங்கிகள் வழங்கலாம். இந்த விதிமுறைகள் என்.ஆர்.இ. மற்றும் என்.ஆர்.ஓ. டெபாசிட்களுக்கும் பொருந்தும். இந்த சுற்றறிக்கை அனைத்து வணிக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகளுக்கும் பொருந்தும். மேலும் இது உடனடியாக அமலுக்கு வருகிறது என்று அதில் தெரிவித்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால், இனி வங்கிகளில் ரூ.1 கோடி வரையிலான பிக்சட் டெபாசிட்களை முதிர்வு காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே திரும்ப பெறும் வசதி டெபாசிட்தாரர்களுக்கு கிடைக்கும். வங்கிகள் தற்போது பிக்சட் டெபாசிட்களுக்கு கவர்ச்சிகரமான வட்டி விகிதங்களை வழங்குகின்றன. ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கி பிக்சட் டெபாசிட்டின் காலம், தொகையை பொறுத்து 7.60 சதவீதம் வரை வட்டி வழங்குகிறது. பஞ்சாப் நேஷனல் வங்கி 7.75 சதவீதம் வரையிலும், எஸ்.பி.ஐ. 7.50 சதவீதம் வரையிலும், எச்.டி.எஃப்.சி. வங்கி 7.75 சதவீதம் வரையிலும் பிக்சட் டெபாசிட்களுக்கு (ஆண்டுக்கு) வட்டி வழங்குகின்றன.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!



Click it and Unblock the Notifications