விதிமுறையை தளர்த்திய ரிசர்வ் வங்கி.. பந்தன், ஐடிஎஃப்சி, ஆர்பிஎல் பேங்க் பங்கு விலை ஏற்றம்..

Risk weight என்பது ஒரு வங்கியின் சொத்துக்கள் அல்லது கடன்களுடன் தொடர்புடைய இழப்பு இடர்பாட்டை குறிக்கும் ஒரு சதவீத காரணியாகும். ஒரு வங்கி வைத்திருக்க வேண்டிய குறைந்தபட்ச மூலதனத்தை தீர்மானிக்க ரிஸ்க் வெயிட் சதவீதம் பயன்படுத்தப்படுகிறது. 2023 நவம்பர் 16ம் தேதி இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிவிக்கையில், வீட்டுக் கடன்கள், கல்விக் கடன்கள்,வாகன கடன்கள் மற்றும் தங்கம் மற்றும் தங்க நகைகளால் பாதுகாக்கப்பட்ட கடன்களை தவிர்த்து, வங்கிகளின் நுகர்வோர் கடன் வழங்குவது தொடர்பான ரிஸ்க் வெயிட் 25 சதவீதம் அதிகரித்து 125 சதவீதமாக உயர்த்ததப்படுகிறது.

மேலும், ஏ மற்றும் அதற்கு மேல் மதிப்பிடப்பட்ட வங்கி சாரா நிதி நிறுவனங்களின் வெளிப்புற மதிப்பீட்டின்படி, ரிஸ்க் வெயிட் 25 சதவீதம் அதிகரிக்க வேண்டும் என தெரிவித்து இருந்தது. இதனால் வங்கிகளுக்கான மூலதன தேவைகள் அதிகரித்தன, இதன் விளைவாக வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கான கடன் செலவுகள் அதிகரித்தன. இந்நிலையில் சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பிறகு, தற்போது வங்கி சார நிதி நிறுவனங்களுக்கு நீட்டிக்கப்பட்ட கடன்களுக்கான ரிஸ்க் வெயிட் விதிமுறையை இந்திய ரிசர்வ் வங்கி தளர்த்தியுள்ளது.

விதிமுறையை தளர்த்திய ரிசர்வ் வங்கி.. பந்தன், ஐடிஎஃப்சி, ஆர்பிஎல் பேங்க் பங்கு விலை ஏற்றம்..

ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏ மற்றும் அதற்கு மேல் மதிப்பிடப்பட்ட வங்கி சார நிதி நிறுவனங்களுக்கு பொருந்தக்கூடிய ரிஸ்க் வெயிட் 25 சதவீதம் குறைக்கப்பட்டு 2023 நவம்பர் 16க்கு முந்தைய நிலைகளுக்கு மீட்டெடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ரிசர்வ் வங்கியின் இந்த நடவடிக்கையால் வங்கிகளுக்கு அதிக மூலதனம் கிடைக்கும், இது வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு மற்றும் குறு நிதி நிறுவனங்களுக்கு அவை அதிக கடன் வழங்க உதவும்.

ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால், பந்தன், ஆர்பிஎல், ஐடிஎஃப்சி மற்றும் ஐஐபி ஆகியவை அதிக ஆதாயம் அடையும். இந்த வங்கிகள் ரிஸ்க் வெயிட்டை உயர்த்திய வங்கிகள். ஆனால் பந்தன் மற்றும் ஆர்பிஎல் ஆகியவை அதிக நன்மைகளை பெறும். வங்கி சாரா நிதி நிறுவனங்களுக்கு அதிக கடன் வழங்கிய வங்கிகளில் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட், ஐசிஐசிஐ மற்றும் பிஓபி ஆகியவை அடங்கும். மும்பை பங்குச் சந்தையில் இன்று வர்த்தகத்தின் முடிவில் பந்தன் பேங்க் பங்கு விலை முந்தைய வர்த்தக தினத்தை காட்டிலும் 1.26 சதவீதம் உயர்ந்து ரூ.137.00ஆக உயர்ந்தது. ஆர்பிஎல் பங்கு விலை 2.75 சதவீதம் உயர்ந்து ரூ.162.75ஆக இருந்தது. ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் பேங்க் பங்கு விலை 0.61 சதவீதம் உயர்ந்து ரூ.59.17ல் முடிவுற்றது.

Story written by: Subramanian

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+