2025 ஆம் ஆண்டில் பல்வேறு நாடுகளின் மத்திய வங்கிகளும் போட்டி போட்டுக்கொண்டு தங்கத்தை வாங்கின. சீனா உள்ளிட்ட நாடுகளின் மத்திய வங்கிகள் அதிகமாக தங்கம் வாங்கியதால் தங்கத்திற்கான டிமாண்ட் அதிகரித்து தங்கம் விலை உயர்வு கண்டது.
2025ஆம் ஆண்டில் ஒட்டுமொத்தமாக உலக நாடுகளின் மத்திய வங்கிகள் 1,044 டன்கள் தங்கத்தை வாங்கியுள்ளன. அதிகபட்சமாக போலந்து நாடு 100 டன்கள் தங்கம் வாங்கியுள்ளது. அந்த வகையில் 2025இல் அதிக தங்கம் வாங்கிய மத்திய வங்கியாக போலந்து நாட்டு மத்திய வங்கி இடம்பிடித்துள்ளது. கஜகஸ்தான் நாட்டு மத்திய வங்கி 49 டன்கள் தங்கம் வாங்கியுள்ளது. துருக்கி, சீனா ஆகிய நாடுகளும் அதிக தங்கம் வாங்கியுள்ளன.

சீனா டாலரின் ஆதிக்கத்தை குறைக்க தங்கம் வாங்குகிறது. உலக பொருளாதார சூழல் , வர்த்தக போர் காரணமாக போலந்து ஆகிய நாடுகளும் அதிக தங்கம் வாங்கி கையிருப்பாக வைத்துள்ளன. ஆனால் 2025ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி கடந்த 8 ஆண்டுகளில் இல்லாத அளவாக குறைந்த அளவே தங்கம் வாங்கி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
உலக தங்க கவுன்சிலின் அறிக்கையில் இந்த தகவல் தெரிய வந்திருப்பதாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி குறிப்பிடுகிறது.2025 ஆம் ஆண்டு இந்திய ரிசர்வ் வங்கி வெறும் 4.02 டன் தங்கத்தை மட்டுமே வாங்கி இருக்கிறது. 2024 ஆம் ஆண்டில் இது 72 டன்களாக இருந்தது. அதாவது 2024 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 2025 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கி 94 சதவீதம் குறைவாக தங்கத்தை வாங்கி வைத்திருக்கிறது.
தற்போது ஒட்டுமொத்தமாக இந்திய ரிசர்வ் வங்கி இடம் இருக்கக்கூடிய தங்கத்தின் அளவு 880.2 மெட்ரிக் டன்கள் தங்கம் ஆகும். இந்திய ரிசர்வ் வங்கி தங்கம் வாங்குவதை குறைத்திருந்தாலும் ரிசர்வ் வங்கியிடம் இருக்கக்கூடிய வெளிநாட்டுகரன்சி கையிருப்பில் தங்கத்தின் மதிப்பு 16% என அதிகரித்து இருக்கிறது. 2025 நவம்பர் மாத நிலவரப்படி இந்திய ரிசர்வ் வங்கி வசம் இருக்கக்கூடிய தங்கத்தின் மொத்த மதிப்பு 100 பில்லியன் டாலருக்கு மேல் இருக்கும் என்கிறது ஃபைனான்சியல் எக்ஸ்பிரஸ் செய்தி.
2025ஆம் ஆண்டில் தங்கம் விலை உயர்ந்ததால் ஏற்கனவே ரிசர்வ் வங்கியின் வசம் இருக்கும் தங்கத்தின் ஒட்டு மொத்த மதிப்பு அதிகரித்தது தற்காலிகமக தங்கம் வாங்குவதை குறைத்ததற்கு காரணமாக இருக்கலாம் என சொல்லப்படுகிறது.இந்திய ரிசர்வ் வங்கியின் மொத்த அந்நிய செலாவணி இருப்புடன் ஒப்பிடும்போது மொத்த தங்க இருப்புகளின் விகிதம் அதிகரித்து வருவதால் ரிசர்வ் வங்கி 2025 ஆம் ஆண்டில் தங்கம் வாங்குவதை குறைத்து இருக்கலாம், ஆனால் ஒட்டுமொத்தமாக நிறுத்திவிட்டது என கருத முடியாது என்கின்றனர் நிபுணர்கள்.
தற்போது உலகிலேயே அதிக தங்கம் கையிருப்பு கொண்ட நாடாக அமெரிக்கா இருக்கிறது. அமெரிக்கா வசம் 8,133 மெட்ரிக் டன்கள் தங்கம் கையிருப்பு உள்ளது. அடுத்ததாக ஜெர்மனி வசம் 3,352 மெட்ரிக் டன்கள் தங்கம் இருக்கிறது, இத்தாலியிடம் 2,452 மெட்ரிக் டன்களும், பிரான்ஸ் வசம் 2,437 மெட்ரிக் டன்களும், ரஷ்யாவிடம் 2,333 மெட்ரிக் டன்களும் தங்கம் கையிருப்பாக உள்ளது. இந்த பட்டியலில் இந்தியா 9ஆவ்து இடத்தில் உள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை மே 1ஆம் தேதிக்கு பிறகு கிடுகிடுனு உயர போகுது!! சிக்னல் கொடுத்துட்டாங்க!!

தங்கம், வைரம் எல்லாம் ஒரம்போங்க! 1 கிராம் விற்றால் 200 கிலோ தங்கம் வாங்கலாம்!என்னது,இவ்வளவு விலையா?

மீண்டும் ஏறுமுகத்தில் தங்கம் விலை: அட்சய திருதியை நெருங்குவதால் மக்கள் அதிர்ச்சி!!

தொடர்ந்து உயரும் தங்கம், வெள்ளி விலை: இனி வரும் நாட்களிலும் விலை உயருமா?

மதுரையில் இன்று தங்கம் விலை எகிறியது! நகை வாங்க காத்திருந்தோர் ஷாக்!

கோவை மக்களே இன்று தங்க நகை வாங்கும் பிளான் இருக்கா? இது தான் உங்க ஊர் கோல்டு ரேட்!!

குறையும் தங்கம் விலை ; உயரும் கச்சா எண்ணெய் விலை - ஈரான் பேச்சுவார்த்தை தோல்வியால் எல்லாமே மாறுது!!

தங்கம், வெள்ளி விலை சரிவு: ஈரான் போர் தீவிரமடைந்தால் இன்னும் தங்கம் விலை குறையுமா?

தங்கம் விலை: 11 நாட்களில் 5 நாட்கள் விலை ஏறி இருக்கு!! அப்போ அடுத்த வாரம் என்ன ஆகும்?

மதுரையில் தங்கம் விலை அதிரடி சரிவு: சாமானிய மக்கள் மகிழ்ச்சி!!

ரூ.1 லட்சத்துக்கு கீழ் தங்கமே வாங்க முடியாதா? குறைந்த விலையில் தங்கம் வாங்க வழியே இல்லையா?



Click it and Unblock the Notifications