பொதுவாக வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்களிடமிருந்து கடன் வாங்கியவர்கள் பெரும்பாலும் அந்த கடனை எவ்வளவு சீக்கீரம் அடைக்க முடியுமோ அவ்வளவு சீக்கிரம் அடைத்து விட்டு நிம்மதியாக இருக்க வேண்டும் என்று நினைப்பார்கள். கடன் வாங்கியவர்கள் தவணை காலத்தை காட்டிலும் முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்தும் போது வங்கிகள் அபராதம் அல்லது முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை வசூலிக்கின்றன. இது கடனை திருப்பி செலுத்துபவர்களுக்கு கூடுதல் செலவாகிறது.
முன்பு, வங்கிகள் அல்லது நிதி நிறுவனங்கள் வாடிக்கையாளர்கள் தங்களது கடனை முன்கூட்டியே திருப்பிச் செலுத்துவதற்கு அபராதம் விதித்தன. இந்த முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் மாறுபடும் வட்டி விகிதங்களை கொண்ட கடன்களுக்கு பொருந்தும். தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் அதிரடி நடவடிக்கையால் இந்த விதி விரைவில் மாற உள்ளது. இதனால் வங்கிகளின் வருவாயில் சிறிது இழப்பு ஏற்படும்.

தற்போது கடன்தாரர்களுக்கு நிவாரணம் அளிக்கும் விதமாக, முன்கூட்டியே அடைக்கும் கடனுக்கான அபராதங்களை நீக்குமாறு இந்திய ரிசர்வ் வங்கி பரிந்துரை செய்துள்ளது. கடனை முன்கூட்டியே செலுத்தினால் எந்த வங்கியும் அபராதம் விதிக்க முடியாது. இந்த விதி சிறு மற்றும் குறு நிறுவனங்களுக்கும் பொருந்தும். இந்திய ரிசர்வ வங்கி இதற்கான வரைவை தயாரித்துள்ளது. இது வங்கிகள் முன்கூட்டியே கடனை திருப்பி செலுத்துவதற்கு அபராதம் வசூலிப்பதை தடுக்கிறது. 2025 மார்ச் 21ம் தேதிக்குள் பங்குதாரர்களுடன் கலந்தாலோசித்த பிறகு இறுதி முடிவு எடுக்கப்படும்.
ரிசர்வ் வங்கியின் கீழ் உள்ள எந்தவொரு கடன் வழங்குநரும் முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. தற்போது சில நிறுவனங்கள் மாறுபடும் வட்டி விகிதக் கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணத்தை வசூலிக்கின்றன. வணிக கடன்களை தவிர வேறு கடன்களுக்கு முன்கூட்டியே செலுத்தும் கட்டணம் இல்லை. டயர் 1 மற்றும் 2 வங்கிகள், வங்கி அல்லாத நிதி சேவை நிறுவனங்கள் வணிக நோக்கங்களுக்காக தனிநபர்கள் மற்றும் குறு,சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்க முடியாது.
Story written by: Subramanian


Click it and Unblock the Notifications