டாடா குழுமத்தின் முக்கிய நிறுவனமான டாடா சன்ஸின் முக்கிய விண்ணப்பத்தை ரிசர்வ் வங்கி நிராகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் டாடா சன்ஸ் ஐபிஓ வெளியிட வேண்டும் என்ற கட்டாயம் ஏற்பட்டுள்ளது. டாடா சன்ஸ் ஐபிஓ, தொடங்கப்படும் பட்சத்தில், இந்திய முதன்மை சந்தையில் நடைபெறும் மிகப்பெரிய ஐபிஓவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனால், இன்று அதன் கீழ் உள்ள டாடா கெமிக்கல்ஸ் பங்குகள் சிறப்பான ஏற்றத்தை கண்டுள்ளன.
டாடா சன்ஸ் என்பது வங்கி சாரா நிதி நிறுவனமாகும். இது NBFCகளுக்காக ரிசர்வ் வங்கி தயாரித்த பட்டியலில் வகை I இன் கீழ் வருகிறது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி வழங்கிய வழிகாட்டுதல்களின்படி, மேலடுக்கு NBFCகள் செப்டம்பர் 2025க்குள் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட வேண்டும் என்று தெரிவித்திருந்தது. ஆனால், பங்குகளை விற்பனை செய்வதில் ஆர்வம் காட்டாத டாடா சன்ஸ், அதற்கான மாற்று வழிகளைத் தேடத் தொடங்கியது.

இதன் ஒரு பகுதியாக, டாடா சன்ஸ் நிறுவனம், தங்களுக்கு விலக்கு அளிக்கக் கோரி, ரிசர்வ் வங்கியில் மனு தாக்கல் செய்துள்ளது. இந்தக் கோரிக்கையை ரிசர்வ் வங்கி ஏற்கவில்லை மாறாக நிராகரித்துவிட்டது. இதன் மூலம் டாடா சன்ஸ் ஐபிஓ வெளியிட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது.
டாடா சன்ஸ் நிறுவனம் தனது அந்தஸ்தைத் தக்கவைத்துக்கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. ஆகஸ்ட் 2024 இல், டாடா சன்ஸ் ரூ. 20,000 கோடி கடனைத் திருப்பிச் செலுத்தியது. இது பட்டியலைத் தடுக்கும் நோக்கம் கொண்டது.
வங்கி அல்லாத நிதி நிறுவனமாக தனது பதிவை கைவிட்டு, அதற்கு பதிலாக பதிவு செய்யப்படாத முக்கிய முதலீட்டு நிறுவனமாக செயல்படுவதற்கு நிறுவனம் ரிசர்வ் வங்கியிடம் அனுமதி கோரியிருந்தது. இந்த மாற்றம் டாடா சன்ஸ் நிறுவனத்தை பட்டியலிடப்படாத நிறுவனமாக தொடர அனுமதித்திருக்கும். ஆனால் ரிசர்வ் வங்கியின் சமீபத்திய முடிவு அந்த திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது.
டாடா சன்ஸ் பங்குதாரர் முறையின்படி, நிறுவனத்தின் சுமார் 65.9% டாடா டிரஸ்ட்களுக்கும், 18.4% ஷபூர்ஜி பல்லோன்ஜிக்கும், 12.8% பல்வேறு டாடா குழும நிறுவனங்களுக்கும், 2.8% டாடா ஃபேமிலிக்கும் சொந்தமானதாக உள்ளது.
டாடா மோட்டார்ஸ் மற்றும் டாடா கெமிக்கல்ஸ் இரண்டும் ஹோல்டிங் நிறுவனத்தில் சுமார் 3% பங்குகளை வைத்துள்ளன. அதே நேரத்தில் டாடா பவர் 2% மற்றும் இந்தியன் ஹோட்டல்ஸ் 1% பங்குகளை வைத்துள்ளது.
இந்நிலையில், டாடா சன்ஸ் வைத்திருக்கும் பங்குகளில் டாடா கெமிக்கல்ஸ் மற்றும் டாடா இன்வெஸ்ட்மென்ட் கார்ப்பரேஷன் பங்குகளும் ஏற்றம் கண்டன. டாடா சன்ஸ் ஐபிஓ நடந்தால், இந்த டாடா பங்குகளும் முதலீட்டு ஆதாயங்களைப் பெறும். அதன்படி, இன்றைய வர்த்தகத்தின் முடிவில், டாடா கெமிக்கல்ஸ் பங்கு கிட்டத்தட்ட 10 சதவீதம் உயர்ந்து ரூ.1,190-ல் நிறைவடைந்தது.
டாடா சன்ஸ் என்ற ஹோல்டிங் நிறுவனத்தின் ஐபிஓ தொடர்பான ஒரு செய்தி, டாடா பங்குகளின் உயர்விற்கு வழிவகுத்தது. அதன்படி, இந்திய சந்தையில் ஏற்பட்ட கடும் ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், இன்றைய வர்த்தகத்தில் டாடா கெமிக்கல்ஸ் பங்குகள் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உயர்ந்தன.
டாடா கெமிக்கல்ஸின் டாடா சன்ஸ் நிறுவனத்தின் 3% பங்குகள் சுமார் ரூ. 19,850 கோடி ஆகும். இது நிறுவனத்தின் சந்தை மதிப்பில் 80% மதிப்புடையது ஆகும். இவற்றின் மார்ச் 2024 நிலவரப்படி, டாடா கெமிக்கல்ஸ் சந்தை மூலதனம் இப்போது ரூ.30,000 கோடியைத் தாண்டியுள்ளது.
மெகா ஐபிஓ:டாடா சன்ஸ் ஐபிஓ, தொடங்கினால், இந்திய பங்குச் சந்தையில் மிகப்பெரிய ஐபிஓக்களில் ஒன்றாக இருக்கும். டாடா சன்ஸ் நிறுவனத்தின் தற்போதைய சந்தை மதிப்பு ரூ.11 லட்சம் கோடியாக உள்ளது. எனவே, ரிசர்வ் வங்கி உத்தரவுக்கு ஏற்ப ஐபிஓ மூலம் ஐந்து சதவீத பங்குகளை வெளியிட முடிவு செய்தாலும், டாடா சன்ஸ் ஐபிஓ ரூ.55,000 கோடியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இது பங்குச் சந்தை வரலாற்றில் சமீபத்தில் வெளியான ஹூண்டாய் இந்தியா ஐபிஓவை விட ரூ.27,870ஐ விட இருமடங்காக இருக்கும். இதற்கிடையில், பல டாடா குழுமப் பங்குகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால், ஐபிஓ விலை மேலும் அதிகமாக இருக்கலாம் எனவும் கணக்கிடப்பட்டுள்ளது.
More From GoodReturns

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

4 வார ஈரான் போர்.. தரைமட்டத்திற்கு வந்த டெக் பங்குகள்.. அமெரிக்க அலறல்..!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?



Click it and Unblock the Notifications