இன்று காலை வர்த்தக தொடக்கத்தில் இந்திய சந்தையானது சரிவில் காணப்பட்டது. குறிப்பாக சென்செக்ஸ் 123.63 புள்ளிகள் குறைந்து, 59,565.68 புள்ளிகளாக காணப்பட்டது. இதே நிஃப்டி 31.40 புள்ளிகள் குறைந்து, 17,525.60 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 1190 பங்குகள் ஏற்றத்திலும், 716 பங்குகள் சரிவிலும், 92 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
இதற்கிடையில் இன்று காலை 10 மணிக்கு நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில் வட்டி விகிதமானது அதிகரிக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வங்கிகளும் இனி கடன் விகிதத்தினை அதிகரிக்க வாய்ப்பில்லை என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இது முதலீட்டாளர்கள் மத்தியில் மிக நல்ல விஷயமாக பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் தான் இன்று காலையில் தொடக்கத்தில் சரிவில் இருந்த இந்திய பங்கு சந்தையானது, தற்போது சென்செக்ஸ் (11.15 மணியளவில் ) 214.75 புள்ளிகள் அதிகரித்து, 59,904 புள்ளிகளாக வர்த்தகமாகி வருகின்றது. இதே நிஃப்டி 59.75 புள்ளிகள் அதிகரித்து, 17,616.80 புள்ளிகளாகவும் காணப்படுகின்றது.
இதற்கிடையில் இன்றைய வர்த்தக அமர்வில் பெரும்பாலான குறியீடுகள் ஏற்றத்தில் காணப்பட்டாலும், பல குறியீடுகள் சரிவிலும் காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி ஐடி, பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப் எம் சி ஜி, பிஎஸ்இ மெட்டல்ஸ், பிஎஸ்இ டெக், நிஃப்டி பிஎஸ்இ உள்ளிட்ட குறியீடுகள் சிவப்பு நிறத்தில் காணப்படுகின்றன. மற்றயவை பச்சை நிறத்தில் காணப்படுகின்றன.

டாப் கெயினர்கள் & டாப் லூசர்கள்
நிஃப்டி குறியீட்டில் உள்ள அதானி எண்டர்பிரைசஸ், பஜாஜ் பைனான்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், ஓ என் ஜி சி, நெஸ்டில், ஹெச் சி எல் டெக், பிரிட்டானியா, டெக் மகேந்திரா உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளது.
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள பஜாஜ் பைனான்ஸ், இந்தஸ்இந்த் வங்கி, எஸ்பிஐ, பஜாஜ் பின்செர்வ், லார்சன் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், ஹெச்சிஎல் டெக், நெஸ்டில், டெக் மகேந்திரா, டைட்டன் நிறுவனம், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

பத்திர சந்தை
பங்கு சந்தையானது சரிவில் இருந்து ஏற்றத்தினை காணத் தொடங்கியிருந்தாலும், பத்திர சந்தையானது சரிவினைக் காண ஆரம்பித்துள்ளது. இது 7 மாதங்களில் இல்லாதளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. 10 வருட பத்திர சந்தையானது 7.1469% எனும் அளவுக்கு சரிவினைக் கண்டுள்ளது. இது கடந்த செப்டம்பர் 15-க்கு பிறகு குறைந்த அளவாகும். இது பாலிசி அறிவிப்பு முன்னதாக 7.2857% என்ற விகிதத்தில் காணப்பட்டது.


Click it and Unblock the Notifications