இந்திய ரிசர்வ் வங்கி நவம்பர் 15 ஆம் தேதி நாட்டின் முன்னணி நிதி நிறுவனமான பஜாஜ் ஃபைனான்ஸ்-ன் இரண்டு முக்கிய கடன் திட்டங்களான eCOM மற்றும் Insta EMI Card ஆகியவற்றின் கீழ் புதிய கடன்களை அனுமதிப்பதையும், வழங்குவதையும் உடனடியாக நிறுத்துமாறு உத்தரவிட்டது.
இந்திய நிதியியல் சந்தையில் வங்கிகளின் இடத்தை குறிப்பாக சிறிய தொகை கடன்களில் NBFC மற்றும் டிஜிட்டல் நிதி சேவை நிறுவனங்கள் மிகப்பெரிய ஆதிக்கம் செலுத்தி வரும் வேளையிலும், இதில் முன்னோடியாக இருக்கும் பஜாஜ் ஃபைனான்ஸ் டிஜிட்டல் கடன் வழங்குவதற்கான வழிகாட்டுதல்களை பின்பற்றாத காரணத்தால் புதிய கடன்களை eCOM மற்றும் Insta EMI Card ஆகிய இரு திட்டத்தின் கீழ் வழங்குவதற்கு தடை விதித்துள்ளது.

ஆர்பிஐ இன்று இந்திய ரிசர்வ் வங்கிச் சட்டம், 1934 இன் பிரிவு 45L(1)(b) இன் கீழ் அதன் அதிகாரங்களைப் பயன்படுத்தி, பஜாஜ் ஃபைனான்ஸ் லிமிடெட் தனது இரண்டு கடன் திட்டங்களின் கீழ் புதிய கடன்களை வழங்குவதையும் நிறுத்துமாறு உத்தரவிட்டுள்ளது என தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
ரிசர்வ் வங்கியின் டிஜிட்டல் கடன் வழிகாட்டுதல் விதிகளை பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனம் கடைப்பிடிக்கவில்லை, இதில் குறிப்பாக eCOM மற்றும் Insta EMI Card ஆகிய இரு திட்டத்தின் கீழ் கடன் வாங்குபவர்களுக்கு இத்திட்டம் குறித்து முக்கியமான உண்மை அறிக்கைகளை வழங்காதது, வழங்கப்பட்ட அறிக்கையில் வெளிப்படைதன்மை குறைபாடுகள் இருந்ததை ஆர்பிஐ கண்டுப்பிடித்துள்ளது.
இதன் காரணமாக ஆர்பிஐ உடனடி நடவடிக்கையை எடுத்துள்ளதாக கூறியுள்ளது. மேலும் இந்த கட்டுப்பாடுகள் ரிசர்வ் வங்கி, பஜாஜ் ஃபைனான்ஸ் நிறுவனத்தின் குறைபாடுகளை சரி செய்த பின்பு மதிப்பாய்வு செய்யப்படும் என்று ஆர்பிஐ தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
eCOM திட்டம் என்பது ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு பஜாஜ் பைனான்ஸ் அளிக்கும் கடன் சேவை, Insta EMI Card திட்டம் என்பது மக்கள் வாங்கும் பொருட்களுக்கு ஈஎம்ஐ மூலம் பணத்தை செலுத்தும் திட்டம். இத்திட்டத்தை நுகர்வோர் தானாக முன்வந்து பதிவு செய்துக்கொள்ளும் வசதியும் உள்ளது.
Insta EMI Card என்பது 2 லட்சம் வரையிலான ஃப்ரீ அப்ரூவ்டு கடன் உடன் பஜாஜ் பைனான்ஸ் அளிக்கிறது. இதை வாடிக்கையாளர்கள் ஆப்லைன் மற்றும் ஆன்லைன் ஷாப்பிங் செய்யும் போது பயன்படுத்திக்கொள்ள முடியும்.
சமீபத்தில் ரிசர்வ் வங்கி ஒழுங்குமுறை விதிமுறைகளுக்கு இணங்காத காரணத்தால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் பஞ்சாப் நேஷனல் வங்கிக்கு ரூ.72 லட்சம் அபராதமும், தனியார் துறை கடன் வழங்கும் முன்னணி நிதி நிறுவனமான பெடரல் வங்கி-க்கு ரூ.30 லட்சம் அபராதம் விதித்துள்ளது.
இதேபோல் KYC விதிமுறைகள் 2016 இன் சில விதிகளுக்கு இணங்காததற்காக மெர்சிடஸ் பென்ஸ் பைனான்சியல் சர்வீசஸ் இந்தியா ப்ரைவேட் லிமிடெட் மீது RBI ரூ.10 லட்சம் அபராதம் விதித்துள்ளது ரிசர்வ் வங்கி.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!



Click it and Unblock the Notifications