இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனைகள் எந்த அளவுக்கு அதிகரித்து இருக்கிறதோ அந்த அளவிற்கு மோசடிகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் என அனைத்துமே நாம் இருக்கும் இடத்திலிருந்து லட்சக்கணக்கிலான பணத்தை மற்றொரு வங்கி கணக்குக்கு மாற்றுவதற்கான வழிகளை எளிமையாக்கி இருக்கின்றன. ஒரு கிளிக்கிலேயே நம் கணக்கில் இருக்கும் பணம் மற்றொரு நபரின் கணக்கிற்கு சென்று விடுகிறது. இது மோசடிகளையும் இன்னும் எளிமையானதாக மாற்றி இருக்கிறது.
யுபிஐ, கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு, நெட் பேங்கிங் என அனைத்து வழிகளிலுமே மோசடிகள் நடக்கின்றன. லிங்க் அனுப்பி கிளிக் செய்ய வைப்பது, ஓடிபி மூலம் பணத்தை திருடுவது என நாளுக்கு நாள் டிஜிட்டல் மோசடிகள் அதிகரித்த வண்ணம் தான் இருக்கின்றன. நம்முடைய பணத்தை களவாடுவது குறித்து மோசடியாளர்கள் டிஜிட்டல் முறைகளில் புதிய புதிய வழிமுறைகளை எல்லாம் கண்டுபிடிக்கின்றனர்.

வாடிக்கையாளர் பக்கம் தவறே இல்லாத போதும் இவ்வாறு மோசடியாக நாம் இழந்த பணத்தை திரும்ப பெறுவது என்பது மிகக் கடினம் பெரும்பாலான சமயங்களில் நம்முடைய பணம் நமக்கு திரும்ப கிடைப்பதே கிடையாது என்பது தான் உண்மை. இதனால் வருமுன் காப்பதே சிறந்தது என்ற முறையில் யாரிடமும் பின் நம்பர், ஓடிபி உள்ளிட்ட ரகசிய தகவல்களை தெரிவிக்க கூடாது என ஆர்பிஐ தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில் டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாக்க ஒரு புதிய நடவடிக்கையை அறிவித்திருக்கிறது ரிசர்வ் வங்கி. மும்பையில் ரிசர்வ் வங்கி நிதிக் கொள்கை குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளை ரிசர்வ் வங்கி ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா செய்தியாளரிடம் அறிவித்தார். அப்போது டிஜிட்டல் மோசடிகளில் இருந்து வாடிக்கையாளர்களை பாதுகாப்பது தொடர்பான புதிய வழிமுறைகளை கொண்டு வருவது தொடர்பான தகவலையும் வெளியிட்டார்.
இதன்படி டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்குவதற்கு வழங்குவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார். இதற்கான ஒரு விதிமுறையை கூடிய விரைவில் ரிசர்வ் வங்கி வெளியிட இருக்கிறது. இந்த விதிமுறையின் கீழ் வங்கிகள், நிறுவனங்கள் மற்றும் பொதுமக்கள் தங்களுடைய கருத்துக்களை தெரிவிக்கலாம். இதன் பிறகு இந்த விதிமுறைகள் இறுதி செய்யப்பட்டு நடைமுறைக்கு வரும்.
இந்த விதிமுறைகள் நடைமுறைக்கு வரும்போது டிஜிட்டல் மோசடிகளில் பணத்தை இழந்தவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு கிடைப்பதற்கான வாய்ப்பு உண்டாகும். ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மால்ஹோத்ரா உங்கள் அனைவருக்கும் தெரியும் தற்போது மோசடியான பண பரிவர்த்தனைகள் நடக்கின்றன, இதனை தடுக்க ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இது தொடர்பாக கூடிய விரைவில் ஒரு விதிமுறை வரைவினை வெளியிட இருக்கிறோம். இது டிஜிட்டல் பரிவர்த்தனைகளை மேலும் பாதுகாக்க கூடியதாக இருக்கும். இந்த பரிவர்த்தனைகளின் கீழ் டிஜிட்டல் மோசடிகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு 25 ஆயிரம் ரூபாய் வரை இழப்பீடு வழங்கும் ஒரு புதிய விதிமுறையை கொண்டு வர செய்து இருக்கிறோம்" என தெரிவித்திருக்கிறார். இது முதல்கட்டமாக குறைந்த மதிப்பு கொண்ட பரிவர்த்தனைகளுக்கு கொண்டு வரும்.
இதன்படி கிரெடிட் லிமிட் என்ற ஒரு புதிய வரம்பு கொண்டு வரப்படுமாம். உதாரணமாக தினசரி செலவு வரம்பு, ஒரு புதிய நபருக்கு பணம் அனுப்புவதற்கான வரம்பு, அதிக ஆபத்து கொண்ட பரிவர்த்தனைகளுக்கு வரம்பு என வரம்புகள் கொண்டு வரப்படும். எனவே அந்த வரம்புக்கு மேல் பணத்தை செல்லாது, இது போன்ற சமயங்களில் மோசடி நடந்தாலும் இழப்பு என்பது குறைவு.
அதே போல மூத்த குடிமக்கள் போன்றவர்களுக்கு கூடுதலாக அங்கீகரிப்பு முறைகள் கொண்டுவரப்படும் என கூறியுள்ளார். ஏனெனில் பெரும்பாலான மோசடி கும்பல்கள் மூத்த குடிமக்களை தான் குறி வைக்கிறார்கள் என்பதால் கூடுதல் அங்கீகாரம் சரிபார்ப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட கொண்டுவரப்படும் எனக் கூறியிருக்கிறார். ஓடிபி உடன் பின் நம்பர் , பாஸ்வேர்டு அல்லது பயோமெட்ரிக் போன்ற சரிபார்ப்பு முறைகள் கொண்டு வரப்படலாம்.இந்த விதிகள் நடைமுறைக்கு வந்தால் டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு பாதுகாப்பு கிடைக்கும் மோசடி நடந்தாலும் பணம் திரும்ப கிடைக்கும் அல்லது இழப்பீடாவது, மூத்த குடிமக்களுக்கு கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும்.


Click it and Unblock the Notifications