இந்தியாவின் மிகப்பெரிய வீட்டுக் கடன் சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி மற்றும் நாட்டின் முன்னணி வங்கி சேவை நிறுவனமான ஹெச்டிஎப்சி வங்கி இணைப்பு முதலீட்டாளர்கள் மத்தியில் கொண்டாடப்பட்டாலும், சிறப்பாக இயங்கும் இரு நிறுவனங்கள் எதற்காக இணைக்கப்படுகிறது. என்ற கேள்வி தொடர்ந்து இருந்துகொண்ட வந்தது..
இதற்கான பதில் தற்போது கிடைத்துள்ளது..
ரிசர்வ் வங்கி
இந்திய வங்கிகளைக் கடுமையான கட்டுப்பாடுகள், விதிமுறைகள் கீழ் கண்காணித்து வரும் ஆர்பிஐ பெரிய வங்கிகளையும் விடுவது இல்லை. NBFC முதல் பெரிய பொதுத்துறை வங்கிகள் வரையில் நடக்கும் பல்வேறு முறைகேடுகள், விதிமுறை மீறல்களை ஆர்பிஐ சோதனைகளில் கண்டுபிடிக்கப்பட்டது.
ஹெச்டிஎப்சி - ஹெச்டிஎப்சி வங்கி
இந்த வரிசையில் ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கிக்கு மத்தியில் வீட்டுக் கடன் உருவாவது மற்றும் இரு தரப்புக்கு மத்தியில் நடக்கும் வர்த்தக, நிதி பரிமாற்றம் ஆகியவற்றைக் குறித்து ரிசர்வ் வங்கி கேள்வி எழுப்பியது.
ஆர்பிஐ கேள்வி
ஆர்பிஐ கேள்வியும் அதைத் தொடர்ந்து வரும் பிரச்சனைகளைப் பூதாகரமாக வெடிப்பதை தடுக்க வேண்டும் என்பதற்காக ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி இணைக்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
வர்த்தக கட்டமைப்பு
ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கி மத்தியில் இருக்கும் ஒப்பந்தம் என்பது இத்துறைக்கு நல்லது இல்லை என்றும், இந்நிறுவன வர்த்தக கட்டமைப்புக்கு ஆபத்து என்பதை உணர்ந்து தான் ரிசர்வ் வங்கி கேள்வி எழுப்பியது எனத் தெரிகிறது.
ஒப்பந்தம்
ஹெச்டிஎப்சி வங்கி 1.10% கட்டணத்தில் ஹெச்டிஎப்சி-க்கு வீட்டுக் கடன் வர்த்தகத்தைப் பெற்றுத் தருகிறது. இதேபோல் ஒரு வருடத்திற்குப் பின்பு அதே வீட்டுக்கடனில் 70 சதவீதத்தை ஹெச்டிஎப்சி-யிடம் இருந்து ஹெச்டிஎப்சி வங்கி வாங்குகிறது. இதற்காக 0.75 சதவீத வட்டி வருமானத்தை ஹெச்டிஎப்சி-க்கு செலுத்துகிறது.
இண்டஸ்இந்த் வங்கி, ஆர்பிஎல் வங்கி
இதேபோன்ற முறையைப் பல வங்கிகள் தனது தாய் நிறுவனத்திடம் இருந்து பெறுகிறது, உதாரணமாக இண்டஸ்இந்த் வங்கி, ஆர்பிஎல் வங்கி செய்கிறது, ஆனால் எந்த வங்கியும் நிர்ணயம் செய்யப்பட்ட அதிகப்படியான அளவை ஹெச்டிஎப்சி கூட்டணி போல் கைப்பற்றுவது இல்லை.
Recommended Video
நீண்ட கால அடிப்படையில் பாதிப்பு
இந்தக் கட்டமைப்பு நீண்ட கால அடிப்படையில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்பது ஆர்பிஐ கேள்வி, இதனாலேயே பிரச்சனை பெரிதாக வெடிக்கும் முன்பு ஹெச்டிஎப்சி மற்றும் ஹெச்டிஎப்சி வங்கியை இணைக்க நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது.
More From GoodReturns

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை: மதுரையில் அதிரடி சரிவு! மார்ச் 23, 2026 நிலவரம் மற்றும் எதிர்கால கணிப்புகள் வெளியானது

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

எங்க கிட்ட பேச்சே கிடையாது..!! டிரம்ப் மூக்கை உடைக்கும் அளவுக்கு பதில் கொடுத்த ஈரான்..!



Click it and Unblock the Notifications