மும்பை: பேங்க் ஆப் பரோடா கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் வாராக்கடன் தொகையில் 5,250 கோடி ரூபாயை குறைத்து காட்டியுள்ளது, ரிசர்வ் வங்கியின் கணிப்பில் தெரிய வந்துள்ளது.
இது குறித்து பேங்க் ஆப் பரோடா வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 2018 - 2019ம் நிதியாண்டிற்கான மொத்த வாராக்கடன் கடன் தொகையில் 5,250 கோடி ரூபாயும், நிகர வாராகடன் தொகையில் 5,250 கோடி ரூபாயும் குறைத்து மதிப்பிட்டுள்ளதாகவும், ரிசர்வ் வங்கி மேற்கொண்ட மதிப்பீட்டில் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் பேங்க் ஆப் பரோடா அளித்துள்ள அறிக்கையில், இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் அளவு 69,924 கோடி ரூபாய் என்று தெரிவித்துள்ளது. மேலும் நிகர வாராக்கடன் அளவு 23,795 கோடி ரூபாயாகவும் உள்ளதாகவும் அவ்வங்கி தெரிவித்துள்ளது.
ஆனால் இதே ரிசர்வ் வங்கியின் அறிக்கையில், பேங்க் ஆப் பரோடாவின் மொத்த வாராக்கடன் தொகையானது 75,174 கோடி ரூபாய் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதே நிகர வாராக்கடன் தொகையானது 29,045 கோடி ரூபாயாகவும் கணித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இவ்விரு கணிப்புகளுக்கும் இடையே 5,250 கோடி ரூபாய் வித்தியாசம் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதை பேங்க் ஆப் பரோடா வங்கி வாராக்கடனை குறைத்து காட்ட, இவ்வாறு குறைத்து காண்பித்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.
மேலும் இவ்வங்கி கடன் பத்திரம் மூலம் 1,747 கோடி ரூபாய் நிதி திரட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. சமீபத்தில் கடன் வழங்குனர்கள் மோசமான கடன்களைக் குறைவாகப் காட்ட இப்படி செய்து வருவதும், இது போன்ற புகாரளித்த பல நிகழ்வுகள் உள்ளன. ஆக இந்த நடவடிக்கையானது மத்திய வங்கியின் ஒழுங்குமுறை நடவடிக்கைகளுக்கு தூண்டுகிறது.
பொதுத்துறை சேர்ந்த வங்கியான பேங்க் ஆப் பரோடா செப்டம்பர் மாத காலாண்டில் நிகரலாபம் ஐந்து மடங்கு அதிகரித்து 736.68 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் இதே இரண்டாவது காலாண்டில் 165.4 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இந்த வங்கியின் வட்டி வருவாய் 10.09 சதவிகிதம் அதிகரித்து, 7,028 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே நிகர வட்டி மார்ஜின் தொகையானது 2.81 சதவிகிதம் அதிகரித்துள்ளது.
இந்த நிலையில் பேங்க் ஆப் பரோடா வங்கி பங்கின் விலை 98 ரூபாயாக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications