டெல்லி: பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நேஷனல் வங்கியானது கடந்த 2018 - 2019ம் நிதியாண்டில் 2,617 கோடி ரூபாய் வாராக்கடனை கண்டுள்ளதாக கூறப்படுகிறது.
இது பங்கு சந்தைக்கு அளித்துள்ள அறிக்கையில், 2019ம் நிதியாண்டில் மொத்த செயல்படாத சொத்துகளின் மதிப்பு 2,617 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளாதாக தெரிவித்துள்ளது.

இதே ரிசர்வ வங்கியால் மதிப்பிடப்பட்ட வாராக்கடன் விகிதமும், 2617 கோடி ரூபாயாக இருந்துள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் நிகர நஷ்டம் 2019ம் நிதியாண்டில் 11,335.90 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளதாக இவ்வங்கி அறிவித்துள்ளது. இதே ரிசர்வ் வங்கி 9,975 கோடி ரூபாய் இழப்பை சந்திக்கும் என்றும் கூறியிருந்தது.
இந்த நிலையில் இந்த வங்கியின் மொத்த வாராக்கடன் மதிப்பானது 78,472.70 கோடி ரூபாய் என இவ்வங்கி தெரிவித்துள்ளது. எனினும் இதே ரிசர்வ் வங்கி 81,089.70 கோடி ரூபாய் வாராக்கடன் என மதிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதே இந்த வங்கியின் நிகர வாரக்கடன் மதிப்பானது 30,037.66 கோடி ரூபாய் என இவ்வங்கி அறிவித்துள்ளது. எனினும் ரிசர்வ் வங்கி இதற்கு மாறாக 32,654.66 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது. இதே புரவீசன் 2019ம் நிதியாண்டில் 48,151.15 கோடி ரூபாயாக வங்கி மதிப்பிட்டுள்ளது.
இருப்பினும் இவ்வங்கி நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் 507 கோடி ரூபாய் லாபத்தினை கண்டுள்ளது. எனினும் இதற்கு முந்தைய ஆண்டு இதே இராண்டாவது காலாண்டில் 4,532.35 கோடி ரூபாய் நஷ்டத்தினை கண்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
எனினும் கடந்த செப்டம்பர் காலாண்டில் நிகர வட்டி வருவாய் 7.2 சதவிகிதம் அதிகரித்து, 4,262 கோடி ரூபாயை அதிகரித்துள்ளது. இது முந்தைய ஆண்டில் 3,974 கோடி ரூபாயாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் மொத்த வாராக்கடன் மதிப்பு 16.76 சதவிகிதமாக அதிகரித்துள்ளதாகவும், இதே ஜூன் காலாண்டில் 16.49 சதவிகிதமாகவும் இருந்துள்ளது. எனினும் முந்தைய ஆண்டு இதே காலாண்டில் 17.16 சதவிகிதமாகவும் இருந்துள்ளது.
இந்த வங்கியின் வாராக்கடன் விகிதம் முந்தைய காலாண்டுகளுடன் ஒப்பிடும்போது சற்று குறைந்திருந்தாலும், ஒட்டுமொத்த விகிதமானது இன்னும் பெரிய அளவில் உள்ளது.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!



Click it and Unblock the Notifications