இந்திய ரிசர்வ் வங்கி (RBI) நடத்திய சீக்ரெட் மிஷன் பற்றி தான் நாடே பேசி வருகிறது. ஆர்பிஐ உள்நாட்டில் தங்க இருப்பை பாதுகாக்கும் நோக்கில், இங்கிலாந்து வங்கியிலிருந்து கணிசமான அளவு தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டுவந்துள்ளது. ரிசர்வ் வங்கி 102 டன் தங்கத்தை சத்தமே இல்லாமல் இறக்குமதி செய்துள்ளது.
இந்த இறக்குமதி இந்தியாவின் பொருளாதாரம் மற்றும் பணப்புழக்கத்தின் நெகிழ்வுத்தன்மையை வலுப்படுத்தி வெளிநாட்டில் இந்தியாவுக்குச் சொந்தமான சொத்துக்களைப் பாதுகாக்க வேண்டிய நிலையில் இருந்து உள்நாட்டிலேயே சேமிக்கும் நிலைக்கு மாறும் முயற்சியில் இது மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

ஆர்பிஐ புவிசார் அரசியல் சூழலில் ஏற்படும் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் பல்வேறு அபாயங்களைக் கருத்தில் கொண்டு, இங்கிலாந்தில் இருக்கும் தங்கத்தை இந்தியாவில் பாதுகாக்க முடிவு செய்துள்ளதன் விளைவு தான் இந்த 102 டன் தங்கம் ஷிப்மென்ட். ஆர்பிஐ சில மாதங்களுக்கு முன்பு 100 டன் தங்கத்தைக் கொண்டு வந்த நிலையில் தற்போது 2வது முறையாக 102 டன் தங்கம் கொண்டு வந்துள்ளது.
இந்தியாவின் மொத்த தங்க இருப்பு செப்டம்பர் மாத முடிவில் 854.73 மெட்ரிக் டன்னாக உள்ளது, இதில் தற்போது பெரும் பகுதி அதாவது 510.46 டன் உள்நாட்டில் சேமிக்கப்பட்டு உள்ளது. மீதமுள்ள 324.01 டன் பேங்க் ஆப் இங்கிலாந்தின் பாதுகாப்பு கிடங்கில் உள்ளது.
ஆர்பிஐ இந்த 102 டன் தங்கத்தை சிறப்பு விமானங்கள் மற்றும் அதிகப்படியான பாதுகாப்பு நடவடிக்கைகளை உள்ளடக்கிய கட்டமைப்பில் கவனமாக திட்டமிடப்பட்டு ரகசியமாக 102 டன் அதாவது 1,02,000 டன் தங்கத்தை இங்கிலாந்தில் இருந்து இந்தியாவுக்கு கொண்டு வந்துள்ளது.
1990க்கு பின்பு இந்த வருடம் தான் முதல் முறையாக ஆர்பிஐ 100 டன் தங்கத்தை இந்தியாவுக்கு முதல் முறையாகக் கொண்டு வந்தது, இதன் பின்பு ஒரே வருடத்தில் 2வது முறையாக 102 டன் தங்கத்தை இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கி, இந்த தங்கத்தை இறக்குமதி செய்யச் சுங்க வரி விலக்கு பெற்றுள்ளது. இதன் மூலம், மத்திய அரசு, அரசு சொத்துக்கள் தொடர்பான வரிக்கு விலக்கு கொடுத்துள்ளது.
ரிசர்வ் வங்கி சில ஆண்டுகளுக்கு முன்பில் இருந்து அதிகப்படியான தங்கத்தை வாங்கத் தொடங்கியது. இப்படி வாங்கிய தங்கத்தை எங்குச் சேமித்து வைக்க வேண்டும் என்பது குறித்து அவ்வப்போது மறுபரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
ரூபாய் மதிப்பு குறைவதைத் தடுப்பதற்கும், புவிசார் அரசியல் பிரச்சனைகளின் பாதிப்பைக் குறைப்பதற்கும் தங்கம் ஒரு பாதுகாப்பாகக் கருதப்படுவதால், உலகளவில் மத்திய வங்கிகள் தங்கக் கையிருப்பை அதிகரித்து வருகின்றன. குறிப்பாகச் சீனா மத்திய வங்கியும், சீன மக்களும் அதிகப்படியான தங்கத்தை வாங்கி வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை 7 மடங்கு! வெள்ளி விலை 2.5 மடங்கு அதிகரிக்க வாய்ப்பு! ராபர்ட் கியோசாகி அதிரடி கணிப்பு!

தங்கம் விலை ரூ.9000 குறைவு, வெள்ளி விலை ரூ.50,000 சரிவு: ஈரான் போரால் நடக்கும் ஒரே நன்மை!!

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு குட் நியூஸ்!! உலக சந்தையில் நடந்த பெரிய மாற்றம்!!

ஈரான் போர் முடிவுக்கு வந்ததும் தங்கம், வெள்ளி விலை உயருமா? முதலீட்டாளர்கள் என்ன செய்யலாம்?

வாரத்தின் முதல் நாளே தங்கம் தந்த சர்ப்ரைஸ்!! வீட்டில் விசேஷம் வச்சிருக்கவங்களுக்கு கொண்டாட்டம்!!

கோயம்புத்தூர் மக்களே..! தங்கம் விலை அதிரடி சரிவு.. தங்க நகை வாங்க நல்ல சான்ஸ்..!

சர்ரென சரிந்த தங்கம், வெள்ளி விலை..!! ரூட்டு மாறுது.. இது தான் நல்ல சான்ஸ் மக்களே!!

தங்கம் விலை இன்று மதுரையில் கணிசமாகக் குறைந்தது: நகைப்பிரியர்கள் மகிழ்ச்சி! |

கோயம்புத்தூர் தங்கம் விலை இன்று: பெரும் சரிவு! நகைப்பிரியர்களுக்கு அரிய வாய்ப்பு |

தங்கம் விலை அதிரடி சரிவு! $5,100-க்கு கீழ் இறங்கியது - இது வாங்க சரியான நேரமா?

கோயம்புத்தூரில் இன்று ஒரு சவரன் ஆபரண தங்கத்தின் விலை என்ன? நகை வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவை



Click it and Unblock the Notifications