மத்திய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி 2.5 லட்சம் முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை டிவிடெண்ட் எனப்படும் ஈவுத்தொகை வழங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய அரசின் நிதி பற்றாக்குறையை போக்க இந்த ஈவுத்தொகை பெரிய அளவில் உதவியாக இருக்கும்.
மணி கண்ட்ரோல் தளம் வெளியிட்டுள்ள செய்தியில் மத்திய அரசுக்கு இந்த மாதமே ரிசர்வ் வங்கி ஈவுத்தொகை வழங்க இருப்பதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு 2.1 லட்சம் கோடி ரூபாயை ஈவுத்தொகையாக வழங்கியது. இந்த ஆண்டு அதைவிட அதிகமான தொகை வழங்கப்பட இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. அதிகப்பட்ச ஈவுத்தொகை கிடைப்பது மத்திய அரசுக்கு ஊக்கம் அளிப்பதாக இருக்கும். மூலதன செலவினங்கள் உள்ளிட்டவற்றுக்கும் மக்கள் நல திட்டங்களுக்கும் அரசு இந்த தொகையை பயன்படுத்த முடியும்.

இந்திய ரிசர்வ் வங்கியை பொறுத்தவரை இரண்டு வகைகளில் அதற்கு அதிக வருமானம் வருகிறது. ஒன்று அந்நிய செலாவணி செயல்பாடுகள் மற்றும் வங்கிகளுக்கு வழங்கப்படும் கடன்கள் மீதான வட்டி வருவாய். கடந்த நிதியாண்டில் ரிசர்வ் வங்கி இந்த இரண்டு ஆதாரங்கள் மூலமாகவும் பெருமளவில் லாபம் ஈட்டி இருப்பதாக கனரா வங்கியின் தலைமை பொருளாதார நிபுணரான மாதவன் குட்டி தெரிவித்துள்ளார்.
ஒவ்வொரு ஆண்டும் இந்திய ரூபாயின் மதிப்பை நிலைப்படுத்துவதற்காக ரிசர்வ் வங்கி அந்நிய செலாவணி சந்தையில் அமெரிக்க டாலர்களை விற்பனை செய்யும். அதாவது அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிவடையும் போதெல்லாம் அதனை ஈடுகட்ட கைவசம் இருக்கும் டாலர்களை விற்பனை செய்யும். இந்த நிதியாண்டில் இதன் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கணிசமான வருவாய் கிடைத்துள்ளது.
அதே நேரத்தில் வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்காக ரிசர்வ் வங்கி , வங்கிகளுக்கு கடனை கொடுக்கிறது. இந்த கடன்களுக்கு வங்கிகள் ரிசர்வ் வங்கிக்கு வட்டியை வழங்குகின்றன. இந்த இரண்டு வருமானமும் தான் ரிசர்வ் வங்கிக்கு மிகப்பெரிய வருமான ஆதாரமாக இருக்கின்றன. இது தவிர ரிசர்வ் வங்கி தன்னுடைய முதலீடுகள் மூலமும் வருமானம் ஈட்டுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் ரிசர்வ் வங்கி தன்னுடைய முதலீடுகள் மற்றும் டாலர் இருப்புகளின் மதிப்பீட்டு மாற்றங்கள், பணம் அச்சிடுவதில் இருந்து பெரும் கட்டணங்களில் இருந்து கிடைக்கும் உபரி வருமானத்தை மத்திய அரசுக்கு ஈவுத் தொகையாக செலுத்துகிறது. அந்த வகையில் தான் இந்த ஆண்டு 2.5 லட்சத்திலிருந்து 3 லட்சம் கோடி ரூபாய் வரை அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கி ஈவுத் தொகையாக வழங்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

தன்னுடைய வருமானத்தில் வாரா கடன்கள், மதிப்பிழந்த சொத்துக்கள், ஊழியர்களுக்கான சம்பளம் மற்றும் ஓய்வூதிய நிதிக்கான பங்களிப்பு உள்ளிட்டவற்றுக்கு எல்லாம் ஒதுக்கீடு செய்த பிறகு மீதமுள்ள உபரி தொகையை ரிசர்வ் வங்கி சட்டத்தின் கீழ் அரசாங்கத்திற்கு செலுத்திவிட வேண்டும். இதனை தான் ஈவுத்தொகை என அழைக்கிறார்கள். ரிசர்வ் வங்கி வழங்க கூடிய இந்த ஈவுத்தொகையானது மத்திய அரசுக்கு மிகப்பெரிய நிதி ஆதாரமாக இருக்கிறது.
2025ஆம் நிதியாண்டில் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்தது. அமெரிக்க டாலருக்கு நிகரான பல்வேறு நாட்டு கரன்சிகளின் மதிப்பும் சரிந்தன. இந்நிலையில் ரூபாயின் மதிப்பு பெருமளவில் சரிவடையாமல் இருக்க ரிசர்வ் வங்கி கைவசம் இருந்த அமெரிக்க டாலர்களை விற்பனை செய்தது. இதனால் முந்தைய ஆண்டுகளை விட இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி இதன் மூலம் மட்டுமே அதிக வருமானம் பார்த்துள்ளது.
எனவே இந்த ஆண்டு ரிசர்வ் வங்கி அதிகபட்ச ஈவுத் தொகையை மத்திய அரசுக்கு வழங்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. சர்வதேச அளவில் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு பெருமளவில் வீழ்ச்சி அடையாமல் இருப்பதை தடுப்பதற்காக ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அதிகளவு டாலரை விற்பனை செய்தது.
2025 ஆம் நிதியாண்டினை பொறுத்தவரை ரிசர்வ் வங்கி ஏப்ரல் முதல் பிப்ரவரி வரையிலான காலகட்டத்தில் 371.551 பில்லியன் அமெரிக்க டாலர்களை விற்பனை செய்திருக்கிறது, அதே வேளையில் 322.685 பில்லியன் அமெரிக்க டாலர்களை வாங்கி இருக்கிறது. ரிசர்வ் வங்கி வாங்கியதை விட அதிக அளவில் அமெரிக்க டாலர்களை விற்பனை செய்திருக்கிறது என்பதால் இதன் மூலம் ரிசர்வ் வங்கிக்கு கூடுதலான வருமானம் கிடைத்திருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கி ஒரு டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 83 மற்றும் 84 ரூபாய் என்ற அளவில் இருந்தபோது அதிக அளவு வாங்கி கையிருப்பு வைத்து கொண்டது. ரூபாயின் மதிப்பு 87 ரூபாய் என உயர்ந்த போது டாலர்களை விற்பனை செய்திருக்கிறது. முன்னதாக மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி ஒன்றாம் தேதி நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது மத்திய அரசு ரிசர்வ் வங்கியிடம் இருந்து 2.56 லட்சம் கோடி ரூபாயை ஈவுத் தொகையாக பெற வாய்ப்புள்ளதாக தெரிவித்திருந்தார்.
இவ்வளவு அதிக ஈவுத்தொகை கிடைப்பதன் மூலம் அரசாங்கத்தின் நிதி பற்றாக்குறையை குறைக்க வழிவகுக்கும். மேலும் நாட்டில் பணப்புழக்கத்தை மேம்படுத்த உதவும். பல்வேறு மக்கள் நலத்திட்டங்களை செயல்படுத்துவதற்கு இவை உதவியாக இருக்கும். மத்திய அரசுக்கு வரிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை தொடர்ந்து ரிசர்வ் வங்கி வழங்கும் ஈவுத்தொகைதான் முக்கிய வருமானமாக இருக்கிறது.
2025ஆம் நிதியாண்டில் இந்திய பொருளாதாரம் லேசான சரிவை கண்ட பின்னர் தான் வளர்ச்சி பாதைக்கு திரும்பியது. எனவே இந்த வளர்ச்சியை தக்க வைத்து கொள்ள அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுகக் வேண்டி இருக்கிறது. சர்வதேச அளவிலான வர்த்தக மோதல்கள், அமெரிக்க பொருளாதாரம் மந்த நிலைக்கு செல்லும் சூழல் ஆகியவை இந்திய பொருளாதாரத்திலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்த சவால்களை எல்லாம் கடந்து மத்திய அரசு பொருளாதாரத்தை வளர்ச்சி பாதையிலேயே தக்க வைக்க வேண்டும். இதற்காக உற்பத்தியை பெருக்குவது, தொழில் தொடங்க ஊக்கம் தருவது, மக்கள் செலவினங்களை அதிகரிக்க செய்து பணப்புழக்கத்தை உயர்த்த வேண்டிய நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்க கூடிய ஈவுத்தொகை பெரிய உதவியாக இருக்கும்.
More From GoodReturns

Gold loan: ஆர்பிஐ கொண்டு வந்துள்ள ”7 நாட்கள்” விதி!! தங்க நகை கடன் வாங்குவோருக்கு மேஜர் அப்டேட்!!

வீட்டு கடன், வாகன கடன் வட்டி குறையுமா? மும்பையில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தீவிர ஆலோசனை..!!

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

PF கணக்கில் வரும் 5 மேஜர் மாற்றங்கள்!! EPFO 3.0இல் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் என்னென்ன?

வேலையும் போச்சு; சம்பளமும் போச்சு - ஆனாலும் நிம்மதியா வாழ்றேன்: Oracle ஊழியர் கற்றுத்தரும் பாடம்!!

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

HDFC வங்கி பங்கை வச்சிருக்கீங்களா? கொஞ்சம் எச்சரிக்கையா இருங்க?

தங்கம் விலை உச்சத்தில் இருந்து 17% வீழ்ச்சி! அமெரிக்கா கொடுத்த ஷாக் - இப்போ நகை வாங்கலாமா?

LPG தட்டுப்பாடு: காலை 5 மணி முதல் காத்திருந்தாலும் கேஸ் இல்லை!! பெங்களூருவில் மோசமாகும் சூழல்!!



Click it and Unblock the Notifications