தங்க நகை கடனில் புதிய மாற்றம்.. ஆர்பிஐ அறிவிப்பால் மக்கள் குஷியோ குஷி..!!

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ரா இன்று வெளியிட்டுள்ள நாணயக் கொள்கை முடிவுகளில் ரெப்போ விகிதத்தை 0.50 சதவீதம், CRR விகிதத்தை 1 சதவீதம் குறைந்தது மட்டும் அல்லாமல் மற்றொரு முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டு உள்ளார். இந்த அறிவிப்பு இந்திய மக்களின் பல நாள் புலம்பலுக்கு முற்றுப்புள்ளியாக அமைந்துள்ளது என்றால் மிகையில்லை.

நாணய கொள்கை முடிவுகளை யூடியூப் லைவ் மூலம் காலை 10 மணிக்கு வெளியிட்ட சஞ்சய் மல்ஹோத்ரா மதியம் கொள்கை முடிவுகள் குறித்து விவாதம் செய்ய பத்திரிகையாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டார். இந்த சந்திப்பில் சமீபத்தில் ஆர்பிஐ வெளியிட்ட தங்க நகை தொடர்பான வழிமுறைகளில் மாற்றங்களை கொண்டு வந்துள்ளதை அறிவித்தார் ஆர்பிஐ கவர்னர்.

தங்க நகை கடனில் புதிய மாற்றம்.. ஆர்பிஐ அறிவிப்பால் மக்கள் குஷியோ குஷி..!!

தங்கக் கடன்களுக்கான இறுதி விதிமுறைகள் இன்று அல்லது திங்கட்கிழமைக்குள் வெளியிடப்படும் என தெரிவித்த அவர் மக்களின் முக்கியமான கவலையை இந்த புதிய வழிக்காட்டுதலில் தீர்க்கப்படும் என அறிவித்தார்.

கடன்-மதிப்பு விகிதத்தில் (LTV) மாற்றம்: தங்கக் கடன்களுக்கான கடன்-மதிப்பு விகிதம் (Loan-to-Value - LTV) 2.5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள கடன்களுக்கு 75% இலிருந்து 85% ஆக உயர்த்தப்படுவதாக கவர்னர் அறிவித்தார். இந்த மாற்றம், சிறிய அளவிலான கடன்களைப் பெறுபவர்களுக்கு அதிக தொகையை கடனாக பெற உதவும். இது, குறிப்பாக சிறு தொழில்கள் மற்றும் தனிநபர் நிதித் தேவைகளுக்கு தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெறுபவர்களுக்கு பயனளிக்கும்.

அதாவது 1 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கத்தை அடமானமாக வைத்து கடன் பெற்றால் முதலில் 75000 ரூபாய் மட்டுமே கிடைக்க அனுமதிக்கப்படும் வகையில் ஆர்பிஐ சட்டங்களை கொண்டு வந்தது. இதை புதிய வழிக்காட்டுதலில் 85000 ரூபாய் வரையில் பெறும் வகையில் மாற்றி அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் சிறிய அளவில் கடன் வாங்குவோருக்கு பெரிய நன்மை அளிக்கும், மேலும் இந்த கூடுதல் 10 சதவீதம் உயர்வு 2.5 லட்சம் வரையிலான கடன்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நிதி அமைச்சகம் தலையீடு: கடந்த வாரம், நிதி அமைச்சகத்தின் நிதிச் சேவைகள் துறை (DFS), 2 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ள தங்கக் கடன்களை புதிய ஒழுங்குமுறைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என பரிந்துரைத்தது. மேலும், இந்த ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்துவதையும் தள்ளி வைக்கவும் அறிவுறுத்தியது. இதன் வாயிலாக இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இந்த அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கக் கடன் நிறுவனங்களின் பங்கு விலைகளில் உயர்ந்து காணப்பட்டது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+