சென்னை: 2024ஆம் நிதியாண்டில், இந்திய ரிசர்வ் வங்கியிடம் தங்கத்தின் இருப்பு 27.46 மெட்ரிக் டன்கள், அதிகரித்து 822.10 மெட்ரிக் டன்களாக உள்ளது என்று அதன் அந்நிய செலாவணி கையிருப்பு குறித்த அரையாண்டு அறிக்கை கூறுகிறது.
உலகின் பல நாடுகளிலும் உள்ள மத்திய வங்கிகள் தொடர்ந்து தங்கத்தின் இருப்பை அதிகரித்த வண்ணம் உள்ளன. அந்த வகையில் இந்திய ரிசர்வ் வங்கியிடம், தங்கத்தின் இருப்பு 822.10 மெட்ரிக் டன்களாக உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி பொதுமக்கள் 48 மெட்ரிக் டன் நகைகளை வாங்கி உள்ளனர் என்றும் அறிக்கை கூறுகிறது.

தங்கத்தின் விலை கிடுகிடுவென உயர்ந்து வரும் வேளையில், சமீப ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி மட்டுமல்லாமல் உலக நாடுகள் முழுவதுமே, தங்கத்தை வாங்கத் தொடங்கியுள்ளனர். இதன் காரணமாக சர்வதேச சந்தைகளிலும் தங்கத்தின் விலை தொடர்ந்து ஏறுமுகத்தில் சென்று கொண்டிருக்கின்றன.
இந்தியாவில் தங்கத்தின் கையிருப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு 40 சதவீதம் அதிகரித்துள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
2024ஆம் ஆண்டு மார்ச் நிலவரப்படி, இந்திய ரிசர்வ் வங்கியிடம் தங்கத்தின் கையிருப்பு 822 மெட்ரிக் டன்களாக இருக்கிறது. நாட்டிற்குள் 408 மெட்ரிக் டன்கள் உள்ளன. அதாவது மக்களிடம் 408 மெட்ரிக் டன் தங்க நகைகள் உள்ளது. மார்ச் 2019 ஆம் ஆண்டில் இந்திய ரிசர்வ் வங்கியிடம் தங்கத்தின் கையிருப்பு 612 மெட்ரிக் டன்களாக இருந்தது. இதில் 292 மெட்ரிக் டன்கள் பொதுமக்களிடம் இருந்தன.
திங்களன்று ரிசர்வ் வங்கியால் வெளியிடப்பட்ட, அந்நியச் செலாவணி குறித்த அரையாண்டு அறிக்கையின்படி, தங்கத்தின் பங்கு செப்டம்பர் 2023ஆம் ஆண்டு முதல் மார்ச் 2024ஆம் ஆண்டு வரை 8.15 சதவீதம் அதிகரித்துள்ளது. இது கடந்த செப்டம்பர் 2023ஆம் ஆண்டு 7.37 சதவீதமாக இருந்தது.
மேலும், சீனாவின் மத்திய வங்கியான பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா (PBC) சில காலமாக தங்கத்தை வாங்கி குவிக்கிறது. மற்ற வங்கிகளோடு ஒப்பிடும்போது, 2023 ஆம் ஆண்டில் அதிக அளவில் PBC வங்கி தங்கத்தை வாங்கியுள்ளது. அனைத்து மத்திய வங்கிகளால் வாங்கப்பட்ட தங்கத்தின் அளவு 1,037 டன்கள், அதில் கால் பகுதியை PBC வங்கி வாங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.
கடந்த 50 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு பீப்பிள்ஸ் பேங்க் ஆஃப் சீனா, 225 டன்களை வாங்கியுள்ளது. இது மிகப்பெரிய அதிகரிப்பு எனக் கூறப்படுகிறது. வேர்ல்ட் கோல்ட் கவுன்சிலின் கூற்றுப்படி தங்க இருப்புகளை ஒவ்வொரு மாதமும் PBC வங்கி அதிகரித்து வருவதாகக் கூறியுள்ளது.
சீனா இது போன்ற அதிக அளவில் தங்கத்தை வாங்கி குவிப்பது, தங்கத்தின் விலை ஏற்றத்திற்கு ஒரு காரணமாக அமைகிறது என பல நிபுணர்களும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
More From GoodReturns

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

தங்கம் விலை அதிரடி உயர்வு.. மதுரையில் ஒரு கிராம் தங்கம் விலை என்ன தெரியுமா..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

மதுரை தங்கம் விலை அதிரடி உயர்வு.. ஈரான் போரில் நடந்த எதிர்பாராத டிவிஸ்ட்.. சர்ரென உயர்ந்த Gold Rate..!

சென்னை அசோக் நகர்.. ஒரே காரில்.. ரூ.77 கோடி தங்கம் - வெள்ளி.. பறக்கும் படை 'கப்'பென பிடித்தது..!!

தங்கம் விலை சரிவு: கோயம்புத்தூர் மக்களே நகை வாங்க இன்று தான் நல்ல நாள்!!

மதுரை, திண்டுக்கல், தேனி மக்களே தங்கம் விலையில் திடீர் டிவிஸ்ட்.. நகை வாங்கும் முன் இதை படிங்க..!!

ஈரான் போருக்கு மத்தியில் தங்க சந்தையில் புயலை கிளப்பிய புதின்!! வெளிவந்தது ரஷ்யாவின் தங்க புதையல்!!

புதிய விதிமுறை : HDFC கோல்ட் ETF-ல் இனி தங்கம் எப்படி சேமிக்கப்படும்?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!



Click it and Unblock the Notifications