மும்பை: நாடு முழுவதும் மிக மிக பரப்பரப்பாக பேசப்படும் விஷயங்கள் இரண்டு. ஒன்று மக்களை விரட்டி வரும் கொரோனா வைரஸ். மற்றொன்று யெஸ் பேங்க் பிரச்சனை.
மக்கள் தங்கள் வீடுகளில் பணத்தினை வைத்தால் அது சரியான பாதுகாப்பாக இருக்காது என நம்பி, தங்கம் பணம் இங்கு தான் மிக பாதுகாப்பாக இருக்கும் என நம்பிக்கையுடன் சேரும் இடம் வங்கி தான்.
இந்த நிலையில் நாட்டில் பஞ்சாப் -மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி, அடுத்து தற்போது யெஸ் பேங்க் நெருக்கடி என அடுத்தடுத்து மக்களின் நம்பிக்கையை குறைக்கும் விதமான பிரச்சனைகள் தொடர்ந்து வெளியாகி கொண்டிருக்கின்றன.
டெபாசிட் தொகை குறைவு
இந்த நிலையில் தனியார் துறை வங்கிகளில் ஒன்றான ஆர்பிஎல் பேங்க், தனது வங்கி கிளைகளில் டெபாசிட் தொகை கணிசமான அளவு குறைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதற்கு காரணம் தனியார் துறையை சேர்ந்த முன்னணி வங்கியாக இருந்த யெஸ் பேங்க் பிரச்சனையும் இதற்கு ஒரு காரணம் என்று தெரிவித்துள்ளது.
சில்லறை வைப்பில் பிரச்சனை இல்லை
இது குறித்து வெளியான செய்தியில், ஆர்பிஎல் பேங்க் ஒரு வாரத்தில் அதன் மொத்த வைப்புகளில் சுமார் 3% இழந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. எனினும் சில்லறை வைப்புகளில் எந்த பிரச்சனையும் இல்லை என்றும் கூறியுள்ளது. குறிப்பாக சொல்லவேண்டுமானால் டிசம்பர் 31 வரையில் இவ்வங்கியின் மொத்த டெபாசிட் தொகையானது 62,907 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அதில் 16,855 கோடி ரூபாய் நடப்பு மற்றும் சேமிப்புக் கணக்கில் இருந்ததாகவும் கூறியுள்ளது.
யெஸ் பேங்க் பதற்றம்
யேஸ் பேங்க் நடவடிக்கைக்கு பின்பு வைப்பு நிதியாளர்கள் மத்தியில் இது ஒரு பதற்றத்தினை உருவாக்கியுள்ளது. ரிசர்வ் வங்கி வைப்பு நிதியாளர்கள் பயத்தினால் தங்கள் கணக்குகளில் இருந்து வெளியே எடுக்க வேண்டாம் என அறிவுறுத்தி வந்தாலும், வைப்பு நிதியாளர்கள் தங்கள் பணத்தினை எடுக்க தீவிரம் காட்டி வருகின்றனர். இதன் எதிரொலி மற்ற தனியார் வங்கிகளிலும் எதிரொலிக்க தொடங்கியுள்ளது.
நிதியளிக்க தயாராக உள்ளோம்
அதிலும் ரிசர்வ் வங்கி யெஸ் வங்கியில் போதுமான பணப்புழக்கம் உள்ளது. தேவைப்பட்டால் தான் நிதியளிக்க தயாராக உள்ளதாகவும் ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். அதிலும் திங்கட்கிழமையன்று நடந்த ரிசர்வ் வங்கி கூட்டத்தில்,வைப்பு தொகையாளர்களின் பணம் முற்றிலும் பாதுகாப்பாக உள்ளது என்று நான் சொல்ல விரும்புகிறேன். ஆக எந்த வித தேவையற்ற கவலையும் வேண்டாம் என்று கூறினார்.
நிதி ரீதியாக வலுவாக இருக்கிறோம்
இவ்வாறு தேவையற்ற வதந்திகளுக்கு மத்தியில், ஆர்பிஎல் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வங்கி நிதி ரீதியாக வலுவானது. நன்கு மூலதனமானது, இலாபகரமானது மற்றும் வலுவான நிர்வாக அமைப்பினைக் கொண்டு வளர்ந்து வரும் நிறுவனம் என்றும் அறிவித்துள்ளது. ஆக நிதி ஆரோக்கியம் மற்றும் வங்கியின் ஸ்திரத்தன்மை பற்றிய சந்தைகள் முற்றிலும் தவறானவை. அவை உண்மையான அல்ல.
பங்கு விலை இதுதான்
அதோடு ஆர்பிஎல் வங்கி போதுமான மூலதனத்துடன் உள்ளது. மேலும் சொத்து தரத்திலும் போதுமான உள்ளது. இந்த நிலையில் இந்த வங்கியின் பங்கு விலையானது தற்போது பிஎஸ்இ-யில் 4.27% அதிகரித்து 169.55 ஆக வர்த்தகமாகி வருகிறது.
More From GoodReturns

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போருக்கு நாங்க காரணமில்ல, கச்சா எண்ணெய் கொடுக்க முடியாது: IEA கோரிக்கையை நிராகரித்த இந்தியா!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

துபாயில் உணவு பொருட்களுக்கு தட்டுப்பாடு?: 7 நாட்கள் மட்டுமே தாக்குப்பிடிக்க முடியும் என தகவல்!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

உச்சக்கட்டத்தில் ஈரான் போர்: கமேனியை தொடர்ந்து தலைவராக தேர்வான அவரது மகன் மீதும் சரமாரி தாக்குதல்!!



Click it and Unblock the Notifications