பிரதமர் மோடி சுதந்திர தின உரையில் இந்த ஆண்டு தீபாவளிக்குள் தற்போது நடைமுறையில் இருக்கும் மறைமுக வரி முறையான GST-யை மறுசீரமைப்பு செய்து 4 அடுக்கு (ஜீரோ சதவீதம் இல்லாமல்) வரி விதிப்பு முறையை 5 சதவீதம் மற்றும் 18 சதவீதம் என்ற இரண்டு வரி விகிதங்களை முன்மொழிந்துள்ளது.
இந்த மாற்றம், நாட்டின் பொருளாதாரத்திலும், வளர்ச்சியிலும் பெரிய புரட்சியை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, ஏனெனில் தற்போது 5%, 12%, 18% மற்றும் 28% என்ற 4 வரி விகிதங்களை 2 வரி பலகையாக மாற்றிவது மூலம் பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகளை இந்த இரண்டு விகிதங்களுக்குள் கொண்டு வரப்படும். இதனால் பல பொருட்களின் விலை குறைய வாய்ப்பு உள்ளது.
இந்த ஜிஎஸ்டி வரி விதிப்பு மாற்றம் கட்டுமான மற்றும் ரியல் எஸ்டேட் துறையில் எத்தகைய மாற்றத்தை உருவாக்கும் என்பது பற்றி தான் இப்போது பார்க்கப்போகிறோம்.

கட்டுமான பொருட்கள் விலை தாக்கம்
கட்டுமான துறையில், பல்வேறு பொருட்களுக்கு வெவ்வேறு GST விகிதங்களின் கீவ் வரி விதிக்கப்படுகிறது. தற்போது, சிமென்ட் மீதான GST 28 சதவீதமாகவும், ஸ்டீல், சிராமிக் டைல்ஸ் மற்றும் சானிடரி வேர் ஆகியவை 18 சதவீதமாகவும், பெயிண்ட் மற்றும் வானீஷ் போன்ற பொருட்கள் 28 சதவீதமாகவும் உள்ளன.
இதேபோல் கட்டிட வடிவமைப்பு மற்றும் திட்ட மேலாண்மை சேவைகளுக்கு 18 சதவீத GST பொருந்தும். இந்த வரி விதிப்புகள் ஒரு வீட்டின் கட்டுமான செலவுகளையும், வீட்டின் விலையையும் நேரடியாக பாதிக்கின்றன.
இந்த நிலையில் புதிய GST திட்டத்தில், சிமென்ட் உள்ளிட்ட 28 சதவீத விகிதத்தில் உள்ள பொருட்கள் 18 சதவீதமாக குறைந்தால், கட்டுமான செலவுகளில் சுமார் 10 சதவீதம் குறையும். இதன் மூலம் ஒரு புதிய வீட்டின் விலைகளில் 10 சதவீதம் வரை பயன் அளிக்கலாம் என்று ரியல் எஸ்டேட் நிபுணர்கள் கூறுகின்றனர்.
வீடு வாங்குவோர் மீதான தாக்கம்:
தற்போது புதிதாக வீடு வாங்குவோர் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளை வாங்கினால் வீட்டின் மதிப்புக்கு ஏற்ப 5 சதவீத GST வரி பொருந்தும், அதேபோல் குறைந்த விலை வீடுகளுக்கு 1 சதவீதம் விதிக்கப்படுகிறது. குறைந்த விலை வீடு என்றால் நகர்ப்புறங்களில் 60 சதுர மீட்டர் மற்றும் நகர்ப்புறங்களுக்கு வெளியே 90 சதுர மீட்டர் கார்பெட் அளவை கொண்ட மலிவு விலை வீடுகள். மேலும் அதன் விலை 45 லட்சம் ரூபாய்க்கு குறைவாக இருக்க வேண்டும்.
மறுபுறம், ஆக்குபென்சி சான்றிதழ் பெற்ற குடியேற தயாராக உள்ள நிலையில் இரு்ககும் வீடுகளுக்கு GST பொருந்தாது.
இந்த 5 சதவீதம், 1 சதவீத வரி 0 சதவீதத்திற்கு வந்தால் புதிதாக கட்டும் வீடுகளின் விலை பெரிய அளவில் குறையும். ஒருப்பக்கம் கட்டுமான பொருட்களில் 10-13 சதவீதம் வரையில் செலவுகள் குறையும், இதேபோல் கட்டுமான நிலையில் உள்ள வீடுகளை வாங்குவதில் இருக்கும் 5 சதவீத வரியும் குறையும், இதன் மூலம் ரியல் எஸ்டேட் விலை மதிப்பு 10-20 சதவீதம் குறைய வாய்ப்பு உள்ளது.

ரியல் எஸ்டேட் நிபுணர்கள்:
இந்திய ரியல் எஸ்டேட் துறையில் GST-ல் 10-20 சதவீதம் வரை குறைப்பு ஏற்பட்டால், வீட்டு விலைகள் குறைந்து வர்ததகம் அதிகரிக்கும், மேலும் கருப்பு பணத்தின் மூலம் நடக்கும் ரியல் எஸ்டேட் பரிவர்த்தனைகள் குறையந்து இத்துறையை ஒழுங்குப்படுத்தும் என எதிர்பார்ப்பு நிலவுகிறது.
ஆனால், இந்த வரி குறைப்பு நுகர்வோருக்கு முழுமையாக சென்றடையுமா அல்லது கான்டிராக்டர்கள், பில்டர்களுக்கு கூடுதல் வாபத்தை பெற உதவுமா என்பது முக்கிய கேள்வியாக உள்ளது. இந்த வரி குறைப்பு அறிவிக்கப்பட்ட சில காலம் இதுப்போன்ற பிரச்சனை இருந்தாலும் 1-2 வருடத்தில் வர்த்தக போட்டி காரணமாக விலை குறைய துவங்கும் என்பது சந்தையின் கணிப்பு.
மக்களே ஜாக்பாட் காத்திருக்கு:
பிரதமர் மோடி அறிவித்த புதிய GST மறுசீரமைப்பு, தீபாவளி 2025க்குள் அமலாகும் என்றால், இது இந்திய பொருளாதாரத்தில் ஒரு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்தும். சொந்த வீடு வாங்க வேண்டும் என திட்டமிடுவோருக்கு ஜாக்பாட் ஆக திகழும்.
மேலும் செப்டம்பர் மாதம் 2 ஜிஎஸ்டி கூட்டம் நடக்கும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
More From GoodReturns

ரியல் எஸ்டேட்டில் பணத்தை கொட்டிய Dhurandhar நாயகன் மாதவன்.. சும்மாயில்ல பாஸ் ரூ.125 கோடி சொத்து மதிப்பு..!

மத்திய அரசின் ஒற்றை அறிவிப்பு.. ரூ.82,000 கோடி இழப்பை சந்தித்த முகேஷ் அம்பானி!!

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!



Click it and Unblock the Notifications