இந்தியப் பங்குச் சந்தையில் கடந்த 2 மாதத்தில் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்கள் (எஃப்ஐஐ) சுமார் ரூ.50 லட்சம் கோடி மதிப்பிலான பங்குகளை விற்று தங்களுடைய முதலீட்டை வெளியேற்றியுள்ளனர். இதனால் கடந்த 2 வருடமாக அதிகளவிலான லாபத்தைப் பெற்று வந்த பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் தற்போது பெரும் இழப்பைச் சந்தித்து வருகின்றனர்.
இப்படியிருக்கையில் தற்போது ஒவ்வொரு முதலீட்டு வாய்ப்பு மிகவும் முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இதற்கு ஏற்றார்போல் கடந்த ஒரு வருடத்தில் அதிகப்படியான மாற்றங்களை எதிர்கொண்ட இந்திய ரியல் எஸ்டேட் துறையில் முன்னணி நிறுவனம் ஒன்று சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்து முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது.

நாட்டின் முன்னணி வர்த்தக சாம்ராஜ்ஜியங்களில் ஒன்றான காட்ரிஜ் குழுமம் இந்த ஆண்டு தனது குடும்ப உறுப்பினர்கள் மத்தியில் சொத்து மற்றும் வர்த்தகம் பிரிக்கப்பட்ட நிலையில், இக்குழுமத்தின் மிகவும் முக்கியமான ரியல் எஸ்டேட் பிரிவு தான் காட்ரிஜ் ப்ராபர்ட்டீஸ்.
காட்ரிஜ் ப்ராபர்ட்டீஸ் நிறுவனம் இந்த செப்டம்பர் காலாண்டில் வலுவான விற்பனை மற்றும் லாபம் அளவுகளைப் பதிவு செய்துள்ளதால் முதலீட்டாளர்கள் மத்தியில் தனிக் கவனத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் காலாண்டை ஒப்பிடும்போது இந்த காலாண்டில் காட்ரிஜ் ப்ராபர்ட்டீஸ் விற்பனையில் 219% அதிகரித்துள்ளது. அதேபோல், லாபமும் 360% உயர்ந்துள்ளது.
இந்த அபரிவிதமான லாபம் மற்றும் விற்பனை அளவை அடைய முக்கியமான காரணம் இக்காலாண்டில் சுமார் 6.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் கட்டுமான திட்டங்களை நிறைவேற்றியது மற்றும் அதிகரித்த பிற வருமானங்கள் ஆகும். இதன் மூலம் காட்ரிஜ் ப்ராபர்ட்டீஸ் நிறுவனம் நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில் தனது முழு வருட இலக்கில் 51% ஐ அடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இதன் எதிரொலியாகக் கடந்த ஒரு வருடத்தில் காட்ரிஜ் ப்ராபர்ட்டீஸ் பங்கு, சுமார் 42.5% அதிகமாக வளர்ச்சி அடைந்து, இதன் பங்கு முதலீட்டாளர்களுக்கு பெரும் லாபத்தைக் கொடுத்துள்ளது. இக்காலகட்டத்தில் சென்செக்ஸ் 19.6% மட்டுமே அதிகரித்துள்ளது.
காட்ரிஜ் ப்ராபர்ட்டீஸ் டெல்லி-என்சிஆர், பெங்களூரு மற்றும் மும்பை பெருநகரப் பகுதிகளில் வலுவான வர்த்தகத்தைப் பெற்று வருகிறது. அடுத்த ஆண்டுகளில் கூர்கிராம், நொய்டா, மும்பை, புனே மற்றும் ஹைதராபாத் போன்ற முக்கிய சந்தைகளில் பல திட்டங்களைச் செயல்படுத்த உள்ளதாகக் கூறப்படுகிறது.
காட்ரிஜ் ப்ராபர்ட்டீஸ் பங்கு விலை இன்றைய வர்த்தக முடிவில் 1.34 சதவீத உயர்வுடன் 2630 ரூபாய் விலையில் நிறைவடைந்தது. 2024 ஆம் ஆண்டில் ஜனவரி 1 முதல் இன்று வரையில் 31.37 சதவீதமும், கடந்த ஒரு வருட காலத்தில் 42.14 சதவீதமும் வளர்ச்சி அடைந்துள்ளது.
Disclaimer: This article is strictly for informational purposes only. It is not a solicitation to buy, sell in precious metal products, commodities, securities or other financial instruments. Greynium Information Technologies Pvt Ltd, its subsidiaries, associates and the author of this article do not accept culpability for losses and/or damages arising based on information in this article.
More From GoodReturns

தங்கம் விலை எங்கே போகும்? கோல்டு ETF-க்கு புதிய அபாயம் – ஆனந்த் ஸ்ரீனிவாசன் எச்சரிக்கை

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

முதலீட்டாளர்களுக்கு இன்ப அதிர்ச்சி: 1500 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்த சென்செக்ஸ்!!

திங்கட்கிழமை பங்குச்சந்தை ஒரு காட்டு காட்ட போகுது.. ஆனந்த் ஸ்ரீனிவாசன் வார்னிங்..!!

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

கதறி கதறி அழும் வெள்ளி முதலீட்டாளர்கள்.. போட்ட காசு மொத்தமும் போச்சு..!! அடுத்தது என்ன..?

கண்ணாமூச்சி ஆடும் தங்கம்.. ரிவர்ஸ் எடுக்கும் வெள்ளி..! இந்த 2 பேர் எடுக்கிற முடிவுல தான் எல்லாமே இருக்கு!

SIP முதலீடு செஞ்சா கோடிகளில் பணம் கிடைக்குமா? நம்ம எல்லாரும் செய்யுற தப்பு இது தான்..!!

தங்கம் விலை: 24 மணி நேரத்தில் 4 முறை மாறிய விலை!! ஈரான் போரால் நடக்கும் அக்கப்போர்!!

ஒரே நாளில் ரூ.12 லட்சம் கோடி அவுட் – ரத்தக் களறியான பங்குச்சந்தை-முதலீட்டாளர்களுக்கு பேரிடி?



Click it and Unblock the Notifications