இந்தியாவில் பல ஸ்டார்ட்அப் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ள Prosus, நாட்டின் மிகப்பெரிய எட்டெக் சேவை நிறுவனமான பைஜூஸ் நிறுவனத்திலும் முதலீடு செய்துள்ளது. இந்த நிலையில் ஜூன் மாத இறுதியில் பைஜூஸ் நிர்வாக குழுவில் இருந்து முக்கிய முதலீட்டு நிறுவன உறுப்பினர்கள் இக்குழுவை விட்டு வெளியேறினர்.
இப்படி வெளியேறியவர்களில் பீக் XV பார்ட்னர்ஸ்-ன் ஜிவி ரவிஷங்கர், Prosus நிறுவனத்தின் Russell Dreisenstock, Chan Zuckerberg Initiative நிறுவனத்தின் Vivian Wu ஆகியோர் பைஜூஸ் நிர்வாக குழுவில் இருந்து ஒரே நேரத்தில் ஒட்டுமொத்தமாக வெளியேறினர். இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம் என்று தெரியாமல் இருந்த வேளையில் தற்போது விடை தெரிந்துள்ளது.

பைஜூஸ் நிர்வாக குழுவில் இருந்து Prosus நிறுவனத்தின் Russell Dreisenstock வெளியேறிய நிலையில், தற்போது இதற்கான விளக்கம் Prosus நிறுவன தரப்பில் கொடுக்கப்பட்டு உள்ளது. பைஜூஸ் நிர்வாக குழுவின் மூலோபாய, செயல்பாட்டு, சட்ட மற்றும் பெருநிறுவன நிர்வாகம் தொடர்பான ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளை பைஜூஸ் தலைவர் புறக்கணித்த காரணத்தினால் வெளியேறினார் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பைஜூஸ் தலைவர்கள் தங்களுடைய பரிந்துரையை ஏற்காத நிலையில், எங்களுடைய நிறுவனம் மற்றும் அதன் பங்குதாரர்களின் நீண்டகால நலன்களுக்கு பாதிக்கப்பட்டதை தொடர்ந்து Russell Dreisenstock நிர்வாக குழுவில் இருந்து வெளியேறினார் என Prosus நிறுவனம் தெரிவித்துள்ளது.
பைஜூஸ் நிறுவனத்தில் Prosus நிறுவனம் 578 பில்லியன் டாலர் முதலீடு செய்து 10 சதவீதத்திற்கும் குறைவான பங்குகளை பெற்றது. சமீபத்தில் இந்த முதலீடு 493 மில்லியன் டாலராக மதிப்பிடப்பட்டது. இதன் மூலம் பைஜூஸ் நிறுவனம் கடைசி முதலீட்டு சுற்றில் 22 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்பட்ட நிலையில் தற்போது வெறும் 5.1 பில்லியன் டாலருக்கு மதிப்பிடப்படுகிறது.


Click it and Unblock the Notifications