நான்கு மாநில தேர்தல் முடிவுகள், சர்வதேச அளவில் வட்டி விகிதம் குறையும் என்ற எதிர்பார்ப்பு போன்ற காரணங்களால் இன்று இந்திய பங்குச் சந்தைகளில் வர்த்தகம் சிறப்பாக இருந்தது. சென்செக்ஸ் வர்த்தகத்தின் இடையே 1,000 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்தது.
இந்த சூழலில் பல நிறுவன பங்குகளின் விலை 52 வார கால புதிய உயர்வை எட்டியுள்ளன. கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் டிவி18, பவர் பைனான்ஸ், டிக்சன் டெக்னாலஜிஸ், ஆர்.இ.சி., வர்ரோக் இன்ஜினீயரிங் ஆகிய பங்குகளின் விலை 7 முதல் 11 சதவீதத்துக்கு மேல் உயர்ந்தன.

இன்றும் இந்நிறுவன பங்குகளின் விலை உயர்ந்துள்ளது. டிவி18 நிறுவன பங்கினை தவிர்த்த மற்ற 4 நிறுவன பங்குகளின் விலையும் வர்த்தகத்தின் இடையே 52 வார கால புதிய உச்சத்தை எட்டியுள்ளன.
டிவி18 பிராட்காஸ்ட் (TV18 Broadcast Ltd):டிவி பிராட்காஸ்ட் துறையை சேர்ந்த நிறுவனம் டிவி18 பிராட்காஸ்ட். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 11.37 சதவீதம் உயர்ந்து ரூ.48.00ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சுமார் 2 சதவீதம் உயர்ந்து ரூ.49வரை சென்றது.
பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன்: மத்திய அரசுக்கு சொந்தமான, நிதி சேவை துறையை சேர்ந்த நிறுவனம் பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 9.03 சதவீதம் உயர்ந்து ரூ.365.15ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே சுமார் 6 சதவீதம் உயர்ந்து ரூ.386.25 வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும்.
டிக்சன் டெக்னாலஜிஸ்: மின்னணு சாதனங்கள் தயாரிப்பு ஈடுபட்டு வரும் நிறுவனம் டிக்சன் டெக்னாலஜிஸ் (இந்தியா) லிமிடெட். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 8 சதவீதம் உயர்ந்து ரூ.5,951.65ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை ஏற்றத்துடன் தொடங்கியது. வர்த்தகத்தின் இடையே இப்பங்கின் விலை ரூ.6,186.15வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும். இருப்பினும் இப்பங்கின் விலை தற்சமயம் சிறிது குறைந்து வர்த்தகமாகி வருகிறது.
ஆர்.இ.சி.: மத்திய அரசுக்கு சொந்தமான நிதி நிறுவனம் ஆர்.இ.சி.. கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 7.26 சதவீதம் உயர்ந்து ரூ.374.00ஆக இருந்தது. இன்று காலையில் பங்குச் சந்தையில் வர்த்தகத்தின் இடையே பங்கின் விலை 5 சதவீதத்துக்கு மேல் ரூ.394.80 வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும்.
வர்ரோக் இன்ஜினீயரிங் லிமிடெட்: வாகன உதிரிபாகங்கள் மற்றும் கருவிகள் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் நிறுவனம் வர்ரோக் இன்ஜினீயரிங் லிமிடெட். கடந்த வெள்ளிக்கிழமையன்று தேசிய பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை 6.31 சதவீதம் உயர்ந்து ரூ.571.60ல் முடிவுற்றது. இன்று காலையில் பங்குச் சந்தையில் இப்பங்கின் விலை வர்த்தகத்தின் இடையே சுமார் 3 சதவீதம் உயர்ந்து ரூ.588.30வரை சென்றது. இது இப்பங்கின் 52 வார கால புதிய உச்ச விலையாகும்.
More From GoodReturns

தங்கம் விலை: திடீரென ரூட்டை மாற்றும் தங்கம்.. இப்போ தங்கம் வாங்குறது தான் புத்திசாலித்தனமா?

ஆரம்பமே அட்டகாசம்: நிதியாண்டின் முதல் நாளில் பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு சர்ப்பிரைஸ்!!

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சி!! சென்செக்ஸ் 1000 புள்ளிகளுக்கு மேல் வீழ்ச்சி!!

தங்கம், வெள்ளி விலை: வாரத்தின் முதல் நாளிலேயே குட் நியூஸ்..!! தங்கம் வாங்க சிறந்த நாள்..!!

இந்த வாரம் 4 நாட்கள், அடுத்த வாரம் 3 நாட்கள்: பங்குச்சந்தை முதலீட்டாளர்களே முதல்ல இத படிங்க

சரிவிலேயே இருக்கும் இந்திய பங்குச்சந்தை இந்த வாரமாவது மீண்டு வருமா?

ஆசை காட்டி மோசம் செய்யும் தங்கம்..!! ஆறுதல் தந்த வெள்ளி..!! இப்போ வாங்கலாமா? வெயிட் பண்ணலாமா?

பங்குச்சந்தை முதலீட்டாளர்களுக்கு கருப்பு வெள்ளி..!! ஒரே நாளில் ரூ.8 லட்சம் கோடி அவுட்..!!

தங்கம் விலை: 2 நாட்களில் நடந்த திருப்பம்!! மார்ச் மாத மேஜிக் முடிவுக்கு வந்ததா?

பங்குச்சந்தை சரிவில் இந்த தப்பு மட்டும் பண்ணாதீங்க - முதலீட்டாளர்களுக்கு விஜய் கேடியா கூறும் டிப்ஸ்

இந்தியர்களே தங்கம் விலையை பத்தின கவலையே இனி வேண்டாம்!! ரெடியானது நாட்டின் பெரிய தங்க சுரங்கம்!!



Click it and Unblock the Notifications